PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES 2023: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

Photo of author

By TNPSC EXAM PORTAL

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES: பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் / PATHINEN KILKANAKKU NOOLGAL

  • PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES: சங்கம் மருவிய கால இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று பன்னிரு பாட்டியல் கூறுகிறது.
  • இதனை நீதிநூல்கள் அல்லது அற நூல்கள் அல்லது இருண்ட கால இலக்கியங்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • பதினெண்கீழ்க்கணக்கு என்ற வழக்கை கொண்டுவந்தவர்கள் = மயிலைநாதர், பேராசிரியர்.
  • To Translate English to Tamil
  • சங்க இலக்கியம் வீரயுகப் பாடல்கள் என்று அழைக்கப்படும்.
  • தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் ஆகும்.
  • நம் முன்னோர்கள் உருவாக்கிய, மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நூல்கள் அறநூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • To know more about – Athipazham Benefits in Tamil 
  • தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என அழைக்கப்படுகின்றன.
  • இவை ஒவ்வொன்றும் பல்வேறு புலவர்களால் தனித்தனியான பாடப்பட்டவை.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறுவது – பன்னிரு பாட்டியல்

அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி

அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத்

திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்ன என்பதை கூறும் பாட்டு

நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

இந்நிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES
PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் – 11

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES: பதினென்கீழ்கணக்கு நூல்களில் உள்ள அற நூல்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES
PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அக நூல்கள் = 6

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES: பதினென்கீழ்கணக்கு நூல்களில் உள்ள அக நூல்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES
PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல் = 1

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES: பதினென்கீழ்கணக்கு நூல்களில் உள்ள புற நூல்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்

PATHINEN KILKANAKKU NOOLGAL TNPSC NOTES: குறிப்புகள்

  • நீதி நூல்களுள் சிறியது = இன்னா நாற்பது
  • நீதி நூல்களுள் பெரியது = திருக்குறள்
  • அகநூல்களுள் சிறியது = கார் நாற்பது
  • அகநூல்களுள் பெரியது = திணைமாலை நூற்றைம்பது
  • இரட்டை அறநூல்கள் = இன்னா நாற்பது, இனியவை நாற்பது
  • அற நூல்கள் – துறவை மேல் நெறி என்று உச்சத்தில் வைத்து பாடப்பட்டவை
  • To Calculate EMI for SBI Bank Loan – SBI EMI CALCULATOR
  • அனைத்தும் வெண்பா யாப்பில் அமைந்தவை
  • திருக்குறள் தவிர ஏனைய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சங்ககாலத்துக்குப் பிற்பட்ட “சங்கம் மருவிய” காலத்தை சார்ந்தவை
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் = 11 அற நூல்கள் + 6 அக நூல்கள் + 1 புற நூல்
  • கீழ்க்கணக்கில் கைந்நிலை நூலை ஏற்காதவர்கள் இந்நிலை எனும் நூலைக் கீல்க்கங்கு நூலாகக் கொண்டு கீழ்க்கணக்கில் அற நூல்கள் 12 என்றும், அக நூல்கள் 5 என்றும் கூறுவர்
  • கீழ்க்கணக்கு அற நூல்கள் 12 மற்றும் பிற்கால நீதி நூல்கள் 10 (நீதி நூல் கொத்து), பாரதியார், பாரதிதாசன், ஆத்திச்சூடி ஆகியவை முக்கிய தமிழ் நீதி நூல்கள் ஆகும்.
  • மருந்து பெயரில் அமைந்த நூல்கள் = திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி
  • திரிகடுக மருந்து பொருட்கள் = சுக்கு, மிளகு, திப்பிலி
  • பஞ்சமூல மருந்து பொருட்கள் = சிறுமல்லி, பெருமல்லி, சிறுவழுதுணை, பெருவழுதுணை, கண்டங்கத்திரி
  • ஏலாது மருந்து பொருட்கள் = சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கம், நாககேசரம்
  • திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி நூல்கள் முறையே பாடல் தோறும் 3, 5, 6 கருத்துக்கள் கொண்டவை
  • நீதி நூல் கொத்து = 10 நூல்கள் (ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வெற்றிவேற்கை, நீதிநெறிவிளக்கம், நன்னெறி, உலகநீதி, அறநெறி சாரம், அருங்கலச் செப்பு)
  • அவ்வையார் எழுதிய நீதிநூல்கள் = ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி
  • அதிவீரராம பாண்டியன் எழுதியது = வெற்றிவேற்கை
  • குமரகுருபரர் எழுதியது = நீதிநெறி விளக்கம்
  • சிவப்பிரகாசர் எழுதியது = நன்னெறி
எண் நூல் பொருள் பாடல் ஆசிரியர்
1 நாலடியார் அறம் 400 சமண முனிவர்கள்
2 நான்மணிக்கடிகை அறம் 106 விளம்பிநாகனார்
3 இன்னா நாற்பது அறம் 40 கபிலர்
4 இனியவை நாற்பது அறம் 40 பூதஞ்சேந்தனார்
5 திருக்குறள் அறம் 1330 திருவள்ளுவர்
6 திரிகடுகம் அறம் 100 நல்லாதனார்
7 ஆசாரக்கோவை அறம் 100 பெருவாயில் முள்ளியார்
8 பழமொழி நானூறு அறம் 400 முன்றுறை அரையனார்
9 சிறுபஞ்சமூலம் அறம் 102 காரியாசான்
10 முதுமொழிக் காஞ்சி அறம் 100 கூடலூர் கிழார்
11 ஏலாதி அறம் 80 கணிமேதாவியார்
12 கார் நாற்பது அகம் 40 கண்ணன் கூத்தனார்
13 ஐந்திணை ஐம்பது அகம் 50 மாறன் பொறையனார்
14 ஐந்திணை எழுபது அகம் 70 மூவாதியார்
15 திணைமொழி ஐம்பது அகம் 50 கண்ணன் சேந்தனார்
16 திணைமாலை நூற்றைம்பது அகம் 150 கணிமேதாவியார்
17 களவழி நாற்பது புறம் 40 பொய்கையார்
18 கைந்நிலை அகம் 60 புல்லாங்காடனார்
error: Content is protected !!