KAAR NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: கார் நாற்பது

Photo of author

By TNPSC EXAM PORTAL

KAAR NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: கார் நாற்பது: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

கார் நாற்பது

  • KAAR NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஆசிரியர் = மதுரைக் கன்னங் கூத்தனார்
  • பாடல்கள் = 40 (அகநூல்களில் அளவில் சிறியது)
  • திணை = அகத்திணை – முல்லைத்திணை
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
  • கார் காலம் பற்றிய நூல்
  • முல்லை திணைக்குரிய முதல், கரு (ம) உரிப்பொருள்களை பெற்றுள்ளது

பெயர்க்காரணம்

  • கார் = கார் காலம், மழைக்காலம்
KAAR NARPATHU TNPSC
KAAR NARPATHU TNPSC

பொதுவான குறிப்புகள்

  • KAAR NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: கார் நாற்பது நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை.
  • இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர் என்பர்.
  • சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
  • நூலில் கூறப்படும் துறை = வினைமேற் சென்று திரும்பும் தலைவன் பாகனோடு பேசி விரைந்து வருதல்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை (முல்லை) மட்டும் பாடிய நூல்.
  • நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் இந்நூலில் மேற்கோள் சான்று காட்டியுள்ளார்.

Read More – பெரும்பாலான ஆண்களுக்கு ஏன் இளம்பெண்களை விட நடுத்தர வயது பெண்களை அதிகம் பிடிப்பதற்கான அறிவியல் காரணம் தெரியுமா?

  • அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறிய நூல்.
  • கார்காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
  • முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது.
  • முல்லை நிலத்தின் முதல் கரு உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.
  • பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.
  • கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந்நூலில் எடுத்துக்கூறப்படுகின்றது.
KAAR NARPATHU TNPSC
KAAR NARPATHU TNPSC

முக்கிய அடிகள்

செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்

மேனிபோல் புல்என்ற காடு

தூதோடு வந்த மழை

பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி

வாடும் பசலை மருந்து

நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட

தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப்

புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி

தூதொடு வந்த மழை

  • கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் ஏற்றி வைத்துள்ள விளக்குகளைப் போல, வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாகத் தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக மழை வந்துள்ளது என்னும் பொருளில் வரும் இந்நூற் பாடல் இது.
error: Content is protected !!