4th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

4th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

3rd May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

TAMIL

4th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கோவாவில் தொடங்கியது

கடந்த 2001-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஈரான், ஆப்கானிஸ்தான், பெலாரஸ், மங்கோலியா ஆகிய நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு இந்தியாவின் கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ இந்தியாவின் கோவாவுக்கு வந்தார். 

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, ‘தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட நாங்கள் உறுதி பூண்டிருக்கிறோம். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியாவுக்கு சென்றுள்ளார்” என்று தெரிவித்தார்.

கடந்த 2011-ம் ஆண்டில் அப்போதைய பாகிஸ்தான் அமைச்சர் ஹினா ரபானி இந்தியாவுக்கு வந்தார். அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் இந்தியாவுக்கு செல்கிறார் என்று அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவ், சீன வெளியுறவு அமைச்சர் சின் காங் உள்ளிட்டோரும் கோவாவுக்கு வந்துள்ளனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ஹாங் மிங்கை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோவாவில் நேற்று சந்தித்துப் பேசினார்.

அப்போது ஜெய்சங்கர் பேசும்போது, ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருக்கிறது. இந்த காலத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பாரம்பரிய மருத்துவம், இளைஞர் மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அலுவல் மொழியாக ரஷ்ய மொழியும், சீனாவின் மாண்டரின் மொழியும் உள்ளன. இந்த அமைப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ரஷ்ய மொழி, மாண்டரின் மொழிகளில் மட்டுமே உள்ளன. இந்த சூழலில் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக மாற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த கருத்து மீண்டும் வலியுறுத்தப்பட இருக்கிறது.

தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளிடையே டாலர் கரன்சியில் பணப் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. இதற்குப் பதிலாக அந்தந்த நாடுகளின் கரன்சிகளில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

குடியரசுத்தலைவர் ஹத்பத்ராவில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் போதையில்லா ஒடிசா பிரச்சாரத்தைத் தொடங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஹத்பத்ரா பகுதியில் மயூர்பஞ்சில் உள்ள பிரம்ம குமாரிகள் மையத்தில் ‘போதையில்லா ஒடிசா’ பிரச்சாரத்தை இன்று (மே 4, 2023) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், ‘’போதைப் பழக்கம் என்பது ஒரு நோய். இது சமூகம், பொருளாதாரம், உடல் மற்றும் மனதிற்குச் சாபம். போதைப் பழக்கம் குடும்பத்திலும், சமூகத்திலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறது’ என்றார்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் பஹத்பூர் கிராமத்தை அடைந்து மறைந்த ஸ்ரீ ஷயம் சரண் முர்முவுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கிராமத்தில் திறன் பயிற்சி மையம் மற்றும் சமூக மையத்திற்கு அடிக்கல் நாட்டி கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

வடகிழக்கு மாநிலங்களில் வணிகத்தைப் பெருக்க கொண்டு வரப்பட்ட BIZAMP திட்டம் குறித்து நாகலாந்தின் திமாபூரில் நடைபெற்ற முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகாலாந்து மாநிலம் திமாபூரில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சக செயலாளர் திரு.பி.பி. ஸ்வைன் தலைமையில், சுயசார்பு இந்தியா (SRI) நிதியின் கீழ், 2023 மே 4-ம் தேதியன்று BizAmp (Amplifying Business) நிகழ்ச்சி நடைபெற்றது. 

இத்திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதையும், SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவற்றின் வணிகங்களைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டனர். 

இந்தியா – இஸ்ரேல் இடையே தொழில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையில், சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் என். கலைச்செல்வி, இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநரகத்தின் தலைவர் டாக்டர் டானியல் கோல்ட் ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

குறிப்பிட்ட திட்டங்களை அமல்படுத்துவதன் வாயிலாக பரஸ்பர ஒத்துழைப்புடன் தொழில்துறையின் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை ஏற்படுத்தும்.

சுகாதாரம், விண்வெளி மற்றும் மின்னணுவியல், உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல், ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், எரிசக்தி கருவிகள், சுற்றுச்சூழல், புவி மற்றும் பெருங்கடல் அறிவியல், நீர் உள்ளிட்ட நிலையான எரிசக்தி, சுரங்கம், கனிம வளங்கள், உலோகங்கள், வேளாண்மை, ஊட்டச்சத்து, உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய தொழில்துறைகளில் திட்டங்களை அமல்படுத்த இந்த ஒப்பந்தம் ஏதுவாக இருக்கும்.

இந்தியாவை சரக்கு கையாளுதலில் சிறந்த செயல்திறன் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜேஎன்பிஏ சேர்த்துள்ளது 

கடந்த நிதியாண்டில் சரக்குப் பெட்டகங்கள் கையாளுதலில் சாதனை படைத்த இந்தியாவின் முதன்மையான பெட்டகத் துறைமுகமான ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் ஜேஎன்பிஏ, ஒரு மாத காலத்தில், சரக்குப் பெட்டகங்கள் கையாளுதலில் உலகளாவிய மற்றொரு சாதனையை எட்டியுள்ளது. 

உலக வங்கியால் வெளியிடப்பட்ட சரக்குகள் கையாளுதல் செயல்திறன் குறியீட்டு அறிக்கையின் படி, ஜேஎன்பிஏ வெறும் 22 மணிநேரத்தில் (0.9 நாள்) துரிதமாக சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன்றைய நாள்

மே 5 – புத்த ஜெயந்தி அல்லது புத்த பூர்ணிமா

4th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: வைஷாக மாத பௌர்ணமி அன்று கபிலவஸ்துவிற்கு அருகிலுள்ள லும்பினியில் கௌதம புத்தர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது.

அவர் ‘ஆசியாவின் ஜோதி பஞ்ச்’ அல்லது ‘ஆசியாவின் ஒளி’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆண்டு, புத்த ஜெயந்தி அல்லது புத்த பூர்ணிமா மே 5 அன்று கொண்டாடப்படுகிறது.

ENGLISH

4th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Shanghai Cooperation Conference begins in Goa

The Shanghai Cooperation Organization was launched in 2001. Russia, China, India, Kazakhstan, Kyrgyzstan, Pakistan, Uzbekistan and Tajikistan are members of this organization. Countries like Iran, Afghanistan, Belarus and Mongolia are observers.

A 2-day meeting of foreign ministers of the Shanghai Cooperation Organization began yesterday in Goa, India. Pakistan Foreign Minister Bilawal Bhutto arrived in Goa, India yesterday to participate in it. 

He took off from Karachi, Pakistan in a military aircraft and said in a video posted on Twitter, “I am looking forward to meeting the foreign ministers of the member countries of the Shanghai Cooperation Organization.”

Pakistan Prime Minister Shahbaz Sharif said, ‘We are committed to establishing peace in the South Asian region. Pakistan’s Foreign Minister Bilawal has visited India as a member of the Shanghai Cooperation Organization,” he said.

In 2011, the then Pakistani minister Hina Rabbani came to India. After 12 years, the current Pakistan Foreign Minister Bilawal is going to India, according to the country’s media. Russian Foreign Minister Sergey Lavrov and Chinese Foreign Minister Qin Kong have also come to Goa.

Indian External Affairs Minister Jaishankar met the Secretary General of the Shanghai Cooperation Organization Hong Ming in Goa yesterday. When Jaishankar was speaking, ‘India is leading the Shanghai Cooperation Organization. In this era, the focus is on start-up companies, traditional medicine, youth development, science and technology,” he said.

The official languages of the Shanghai Cooperation Organization are Russian and Chinese Mandarin. All documents related to this system are available only in Russian and Mandarin languages. In this context, India is insisting that English should also be made the official language. This point is to be reiterated at the Foreign Ministers’ Conference.

Currently, the exchange of money between the member countries of the Shanghai Cooperation Organization is in dollar currency. Instead, it will be discussed to exchange money in the currencies of the respective countries.

The President launched the Drug Free Odisha campaign at the Brahma Kumaris Center in Hadbhadra

President Mrs. Draupadi launched the ‘Drug Free Odisha’ campaign today (May 4, 2023) at the Brahma Kumaris Center in Mayurpanj, Murmu Hatpatra area. Addressing the event, the President said, “Drug addiction is a disease. It is social, economic, physical and mental curse. Addiction causes tension in the family and society.

Earlier, the President reached Bahadpur village and paid homage to late Shri Shyam Saran Murmu. Later, he laid the foundation stone for the skill training center and community center in the village and interacted with the villagers.

The first awareness program was held in Dimapur, Nagaland on the BIZAMP program brought to boost business in North Eastern states

Central Small, Micro and Medium Enterprises Department Secretary Mr. P.B. BizAmp (Amplifying Business) program was held on May 4, 2023 under the leadership of Swain, under the auspices of Self-Reliance India (SRI). 

The scheme was created with an aim to develop small, micro and medium enterprises in the North Eastern states and expand their businesses by availing the benefits under SRI Fund. The event was attended by industrialists from various North Eastern states.

Signing of MoU for Industrial Research and Development Cooperation between India and Israel

In the presence of Union Minister of State for Science and Technology, Department of Geosciences (Individual Charge) Dr. Jitendra Singh, CSIR Director General Dr. N. Kalachelvi, Israel’s Director of Defense Research and Development Dr. Daniel Gold signed the MoU. 

The agreement will enable cooperation in research and development projects in technology-oriented sectors of the industry with mutual cooperation through implementation of specific projects.

The agreement is to implement projects in key industries including healthcare, aerospace and electronics, infrastructure and engineering, chemicals and petrochemicals, energy equipment, environment, geo and ocean sciences, sustainable energy including water, mining, mineral resources, metals, agriculture, nutrition, biotechnology.

JNPA has included India in the list of best performing countries in cargo handling
Jawaharlal Nehru Ports Authority JNPA, India’s premier container port, which set record in cargo handling last financial year, has achieved another global record in cargo handling in a month.

According to the Inventory Handling Performance Index report released by the World Bank, JNPA has set a record for handling inventory quickly in just 22 hours (0.9 day).

This achievement has been achieved due to various measures taken to reduce the inventory holding time. This is mainly due to operational efficiency of terminal drives – rail and road connectivity, introduction of centralized parking, digitization.

DAY IN HISTORY TODAY

May 5 – Buddha Jayanti or Buddha Purnima

4th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: It is believed that Gautama Buddha was born in Lumbini near Kapilavastu on the full moon of Vaishaka month. He is also known as ‘Jothi Panch of Asia’ or ‘Light of Asia’. This year, Buddha Jayanti or Buddha Purnima is celebrated on May 5.
error: Content is protected !!