KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது

Photo of author

By TNPSC EXAM PORTAL

KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

களவழி நாற்பது

  • KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது: ஆசிரியர் = பொய்கையார்
  • பாடல் = 40
  • திணை = புறத்திணை – வாகைத்திணை
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = புறம்
  • கழுமலம் எனும் இடத்தில் போர்
  • சோழன் செங்கனானோடு – வெற்றி
  • சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறையை மீட்கும் பொருட்டு பாடியது
  • பரணியின் அடிப்படை நால்
  • கார்த்திகை விழா

KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

பெயர்க்காரணம்

  • KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது: களம் = போர்க்களம்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூற் தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது.
  • சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணைக்காலிரும்பொறைக்கும் இடையே கழுமலத்தில் இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்நூல்.
  • இதை எழுதியவர் பொய்கையார் என்னும் புலவர். இவர் சேர மன்னனுடைய நண்பன். நடைபெற்ற போரில் சேரன் தோற்றுக் கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டதே இந்நூல் எனக் கருதப்படுகின்றது.
  • To Know More About – State & Central Government Schemes PDF in Tamil & English
  • இதிலுள்ள நாற்பது பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.
  • இந்நூலிலுள்ள மிகப் பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகள் குறிப்பிடப்படுவது அக்காலத்தில் போர்களில் யானைப் படைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது எனலாம்.
  • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
  • இதனை தொல்காப்பியம்,

ஏரோர் களவழி அன்றிக் களவழித்

தேரோர் தோன்றிய வென்றியும்

தொல்காப்பியம்

வேறு பெயர்

  • பரணி நூலின் தோற்றுவாய்

KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

களவழி

  • KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது: நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது ‘ஏரோர் களவழி’. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது ‘தேரோர் களவழி’ தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது.
  • இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே தருகிறது. கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் செய்கிறது.
  • சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.

KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

போர்க்களம்

  • KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது: போர் ‘திருப்பூர்’ என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.
  • களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.
  • புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
  • களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்

எடுத்துக்காட்டு

  • KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது: சினங்கொண்ட சோழன் செங்கணான் போர் புரிகின்ற களத்திலே, தச்சனுடைய தொழிற்சாலையில் பொருட்கள் இறைந்து கிடப்பதைப்போல, கொலைவெறி கொண்டு பாய்கின்ற யானைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்கள் விழுந்து கிடக்கின்றன என்னும் பொருள்படுவது கீழே காணப்படும் பாடல்.

கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்

புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் – தச்சன்

வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்

சினமால் பொருத களத்து

சோழனைக் குறிக்கும் தொடர்மொழிகள்

  • புனல் நாடன் நீர் நாடன் காவிரி நாடன் காவிரி நீர்நாடன்
  • செங்கண்மால் செங்கண் சினமால்
  • செம்பியன் புனை கழற்கால் செம்பியன் கொடித் திண்தேர் செம்பியன் திண்தேர்ச் செம்பியன்
  • சேய் செரு மொய்ம்பின் சேய் பைம்பூண் சேய்

KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

பொதுவான குறிப்புகள்

  • KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
  • சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் = போர்ப்புறம் (கழுமலம்)
  • சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் = குடவாயில் கோட்டம்
  • சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
  • நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம் தெரிவித்தான்.
  • ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி உயிர் விட்டான்.

சேரமான் புறநானூற்றில் பாடிய பாடல்

குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆளன்று என்று வாளில் தப்பார்

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்

தாம்இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ்வுலகத் தானே

  • இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
  • களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.

KALAVAZHI NARPATHU TNPSC POTHU TAMIL NOTES

முக்கிய அடிகள்

கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு

வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்

கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்

சினமால் பொறுத்த களத்து

error: Content is protected !!