AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது

Photo of author

By TNPSC EXAM PORTAL

AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஐந்திணை ஐம்பது

  • ஆசிரியர் = மாறன் பொறையனார்
  • காலம் = கி.பி. நான்காம் நூற்றாண்டு
  • பாடல்கள் = 50 (5 X 10 = 50)
  • திணை = ஐந்து அகத்திணை
  • திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது:
AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது:

பெயர்க்காரணம்

  • ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.
AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது:
AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது:

பொதுவான குறிப்புகள்

  • AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது: முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
  • இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது.

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்

செந்தமிழ் சேராதவர்

  • நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
  • தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது.
  • இந்நூல் சிறந்த செய்யுள் நடையையும் செறிந்த பொருளையும் கொண்டதாகும்.
  • “ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்” என்று இந்நூலின் சிறப்பை உணர்ந்த பாயிரப்பாடல் கூறுகிறது.
  • சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.
AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது:
AINTHINAI AIMPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை ஐம்பது:

முக்கிய அடிகள்

  1. வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்

    தண்சுடர் அன்னாளைத் தான்

  1. சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்

    பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்

    கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்

    உள்ளம் படர்ந்த நெறி

  • பாலைத் திணையைப் பின்னணியாகக் கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும் பசுமையான நினைவுகளையும் விடுத்துக் காதலனுடன் வறண்ட பாலைநிலப் பகுதியூடாகச் செல்கிறாள் தலைவி.
  • பாலை நிலத்துக்கே இயல்பான கடுமை வாட்டும் எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கே இயல்பான விட்டுக்கொடுப்புகள் அவர்களை மேலும் நெருக்கமாக்கும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடலொன்று இந்நூலில் வருகின்றது.
  • ஆணும் பெண்ணுமான இரு மான்கள் (கலைமான், பிணைமான்) பாலை நிலத்து நீர்ச் சுனை ஒன்றின் முன்னே நிற்கின்றன. வறண்டு போன அச்சுனையில் இருக்கும் நீர் இரண்டுக்கும் போதுமானதாக இல்லை.
  • தான் அருந்தாவிட்டால் பெண்மானும் அருந்தாது என்பது ஆண்மானுக்குத் தெரியும். எனவே பெண்மான் அருந்தட்டும் எனத் தான் அருந்துவது போல் பாசாங்கு செய்கிறதாம் ஆண்மான். இதுவே காதல் உள்ளங்களின் ஒழுக்கம் என்கிறார் புலவர்.
error: Content is protected !!