PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES 2023: பழமொழி நானூறு

Photo of author

By TNPSC EXAM PORTAL

PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பழமொழி நானூறு

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
  • முன்றுறை என்பது ஊர் பெயர்.
  • அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
  • அரையன் என்ற சொல் அரசனைக் குறிக்கும்.
  • முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் என்பது புலவரின் குடிபெயராக இருக்கலாம்.
  • இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.
  • பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது நானூறு பாடல்களைக் கொண்டது.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியில் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர் பெற்றது.
  • பாவகை = வெண்பா
  • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
  • இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும்.
  • ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்” என்பது பொருள்
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்

வேறு பெயர்கள்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: பழமொழி
  • உலக வசனம்
  • முதுமொழி
  • முதுசொல் (தொல்காப்பியர்)

பெயர்க்காரணம்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.

PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு:

நூல் பகுப்பு முறை

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
  • பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
  • பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7 இயல்கள்)
  • பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8 இயல்கள்)
  • பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
  • பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: திருக்குறள்
  • நாலடியார்
  • பழமொழி நானூறு
  • தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
  • பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே.

PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு:

மேற்கோள்கள்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: அணியெல்லாம் ஆடையின் பின்
  • கடன் கொண்டும் செய்வார் கடன்
  • கற்றலின் கேட்டலே நன்று
  • குன்றின்மேல் இட்ட விளக்கு
  • தனிமரம் காடாதல் இல்
  • திங்களை நாய்க் குரைத் தற்று
  • நுணலும் தன் வாயால் கெடும்

சிறந்த தொடர்கள்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: ஆற்றுணா வேண்டுவது இல்
  • கரையாழ அம்மி மிதப்பு
  • குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்
  • பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ

PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு:

இந்நூலின் பிரிவுகள்

  1. PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: கல்வி (10)
  2. கல்லாதார் (6)
  3. அவையறிதல் (9)
  4. அறிவுடைமை (8)
  5. ஒழுக்கம் (9)
  6. இன்னா செய்யாமை (8)
  7. வெகுளாமை (9)
  8. பெரியாரைப் பிழையாமை (5)
  9. புகழ்தலின் கூறுபாடு (4)
  10. சான்றோர் இயல்பு (12)
  11. சான்றோர் செய்கை (9)
  12. கீழ்மக்கள் இயல்பு (17)
  13. கீழ்மக்கள் செய்கை (17)
  14. நட்பின் இயல்பு (10)
  15. நட்பில் விலக்கு (8)
  16. பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
  17. முயற்சி (13)
  18. கருமம் முடித்தல் (15)
  19. மறை பிறர் அறியாமை (6)
  20. தெரிந்து தெளிதல் (13)
  21. பொருள் (9)
  22. பொருளைப் பெறுதல் (8)
  23. நன்றியில் செல்வம் (14)
  24. ஊழ் (14)
  25. அரசியல்பு (17)
  26. அமைச்சர் (8)
  27. மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
  28. பகைத்திறம் தெரிதல் (26)
  29. படைவீரர் (16)
  30. இல்வாழ்க்கை (21)
  31. உறவினர் (9)
  32. அறம் செய்தல் (15)
  33. ஈகை (15)
  34. வீட்டு நெறி (13)

PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு:

பழமொழி நானூறில் – வரலாற்றுச் செய்திகள்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: தூங்கும் எயிலும் தொலைத்தலால் (பா.156) (தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனைக் குறித்தது)
  • கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (பா.243) (மனு நீதி கண்ட சோழன்)
  • தவற்றை நினைதுத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பா.77) (பொற்கைப் பாண்டியன்)
  • முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (பா.75) (குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்)
  • பாரி மடமகள் பாண்மகற்கு….. நல்கினாள்(பா.382) (பாரியின் மகள்)
  • நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பா.7) (கரிகால் சோழன்)
  • சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (பா.240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்)
  • அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்)

PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு:

பழமொழி நானூறில் வரும் புராணக் குறிப்புகள்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து (பா.258) – இராமாயணம்
  • அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (பா.235) – பாரதம்
  • பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (பா.357) – பாரதம்
  • ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் [பா.184] – மாவலி
  • உலகந்தாவிய அண்ணலே (பா.178) – உலகம் அளந்த வாமானன்

விருந்தோம்பல் – முன்றுறை அரையனார்

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண் மகற்கு – நீர் உலையுள்

பொன் திறந்து கொண்டு பிறாவா நல்கினாள்

ஒன்றாக முன்றில் இல்

சொல்லும் பொருளும்

  • மாரி – மழை
  • மடமகள் – இளமகள்
  • வறந்திருந்த – வறண்டிருந்த
  • நல்கினாள் – கொடுத்தாள்
  • பிறவா – உணவாக
  • முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை), இங்கு வீட்டைக் குறிக்கிறது

பாடலின் பொருள்

  • PAZHAMOZHI NAANOORU TNPSC POTHU TAMIL NOTES: பழமொழி நானூறு: மழையின்றி வறட்சி நிலவும் காலத்தில், பாரி மகளிரான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இறந்து நின்றனர்.
  • பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.
  • அதனால் பொருள் ஏதும் இல்லாத வீடு எதுவும் இல்லை என்பதை அறியலாம்.
  • இப்பாடல் இடம் பெற்றுள்ள பழமொழி ஒன்றாகும் முன்னிலை என்று என்பதாகும்.
  • ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.
error: Content is protected !!