Vedic Period – TNPSC Online Test 1

Photo of author

By TNPSC EXAM PORTAL

Vedic Period – TNPSC Online Test 1

வேதகாலம்              

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்   வேதகாலத்தின் முதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 30 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEVEDHA1}}

Vedic Period – TNPSC Online Test 1

வேதகாலம்

1.Later Vedic period which division is called Dakshinapatha?

a) Northern India 

b) Central India

c) Southern India 

d) Out of India

வேத காலத்தில் கீழ்க்கண்ட எந்த பிரிவு தட்சிணபாதம் என அழைக்கப்பட்டது?

a) வட இந்தியா

b) மத்திய இந்தியா

c) தென்னிந்தியா 

d) இந்தியாவுக்கு அப்பால்

Answer: c

2.The unit of currency used for trade during Rig-Vedic Period was,

a) Niska

b) Rupee

c) Pagoda

d) Coin

ரிக் வேத காலத்தில் வாணிகத்தில் பயன்படுத்தப்பட்ட நாணய அலகு எது?

a) நிஷ்கா

b) ரூபாய்

c) பகோடா

d) நாணயம்

Answer: a

3.In Rig vedic period warrior art taugh to the Princes of olden days are known as,

a) Sama Vedam

b) Danur Vedam

c) Adharva Vedam

d) Varuna Vedam

ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது?

a) சாம வேதம்

b) தனுர் வேதம்

c) அதர்வ வேதம் 

d) வருண வேதம்

Answer: b

4. Who was the author of “Yoga Darsana”?

a) Gautam Rishi 

b) Kannada Rishi

c) Badarayana

d) Patanjali

யோக தரிசனம் என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

a) கௌதம ரிஷி

b) கன்னடா ரிஷி

c) பதராயானா

d) பதஞ்சலி

Answer: d

5.The term ‘Sangrahita’ during Vedic period denotes,

a) Chief Revenue Collector

b) Forest Chief

c) Exchequer

d) Chief Accountant

வேத காலத்தில் சங்கிரகிதா எனும் சொற்றொடர் குறிப்பது,

a) முதன்மை வரி வசூலிப்பர் 

b) முதன்மை வனத்துறையர்

c) கருவூலர்

d) முதன்மை கணக்காளர்

Answer: c

6. How many hymns are there in the Rig Veda?

ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?

a) 1028

b) 2017

c) 1810

d) 1549

Answer: a

7. What is the name of the main collections of Vedic hymns?

a) Upanishads 

b) Aranyakas

c) Brahmanas

d) Samhitas

வேதப்பாடல்களில் முக்கியத் தொகுப்புகளின் பெயர் என்ன?

a) உபநிடதங்கள்

b) ஆரண்யங்கள்

c) பிராமணங்கள்

d) சங்கிதைகள்

Answer: d

8. Name the terrestrial God of the Rig Veda from the following list

a) Savithri

b) Soma

c) Indra

d) Aswins

கீழே தரப்பட்டுள்ள  பட்டியலிலிருந்து ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் ஒரு நிலம் சார்ந்த கடவுளைக் குறிப்பிடுக.

a) சாவித்திரி

b) சோமா

c) இந்திரன்

d) அஸ்வினிகள்

Answer: b

9. In which context is the word ‘Arya’ used in the Vedic Period?

a) Caste

b) Religion

c) Apostrophic Word 

d) Tribe

வேத காலத்தில் எந்த அர்த்தத்தில் ஆரியர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது?

a) ஜாதி

b) மதம்

c) வியக்கத்தக்க வார்த்தை 

d) பழங்குடி

Answer: b

10. Bharatha, as a region, was first mentioned in the work of,

a) Patanjali

b) Panini

c) Pliny

d) ptolemy

பாரதம் என்பதை ஒரு இடமாக தன் படைப்புகளில் முதலில் குறிப்பிட்டவர்?

a) பதஞ்சலி

b) பாணினி

c) பிளினி

d) தாலமி

Answer: b

11. In Rig vedha “Saptasindhu”refers to

a) The land of two rivers

b) The land of five rivers

c) The land of six rivers

d) The land of seven rivers

ரிக் வேதத்தில் சப்த சிந்து எனப்படுவது,

a) இரண்டு நதிகள் பாயும் பகுதி

b) ஐந்து நதிகள் பாயும் பகுதி

c) ஆறு நதிகள் பாயும் பகுதி

d) ஏழு நதிகள் பாயும் பகுதி

Answer: d

12. Consider the following statements:

A. The religion of the Indus people differed from that of the vedic people.

B. The vedic people worshipped a large number of deities which stood for the principal phenomena of nature viz.Prithivi, Varuna, Indra and the Sun.

Choose the correct answer from the options below.

a) A is correct B is wrong

b) B is correct A is wrong

c) A and B are correct

d) Both A and B are wrong

கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி:

A. வேதகால மக்களின் சமயத்திலிருந்து சிந்துவெளி மக்களின் சமயம் மாறுபட்டிருந்தது.

B. வேதகால மக்கள் இயற்கையாக தோற்றமளித்த பல கடவுள்களை வணங்கினர். எடுத்துக்காட்டாக வருண பகவானாக பிரித்வி, இந்திரன் மற்றும் சூரியன்.  இவற்றுள்,

a) A சரி B தவறு

b) B சரி A தவறு

c) A மற்றும் B இரண்டும் சரி

d) A மற்றும் B இரண்டும் தவறு

Answer: c

13. The Chief offensive Weapon of the Vedic period,

a) Sword

b) Axes

c) Spear

d) Bow and Arrow

வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம்

a) வாள்

b) கோடாரி

c) ஈட்டி

d) வில் மற்றும் அம்பு

Answer: d

14. What is meant by ‘Pitaka’?

a) Umbrella

b) Basket

c) Gift

d) Fort

‘பீடதகம்’ என்பதன் பொருள் என்ன?

a) குடை

b) கூடை

c) கொடை

d) கோட்டை

Answer: b

15. Which of the following is incorrectly Paired?

a) Rig Veda         – Suktas

b) Yajur Veda      – Magic formulas

c) Sama Veda     – Collection of Melodies

d) Atharvana Veda – Ritual text book

கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?

a) ரிக்வேதம்        – சுக்தாஸ்

b) யஜுர்வேதம்  -மாய சூத்திரங்கள்

c) சாமவேதம்   –   மெல்லிசை தொகுப்பு

d) அதர்வண வேதம் – சடங்கு பாட நூல்

Answer: d

16. Match the following:

A) Brahmanas –     1.Forest Texts

B) Sama Veda  –     2. Guide Book for Priests

C) Aranyakas    –    3. Ritual Texts

D) Yajur Veda  –     4. Book of Chants

பொருத்துக:

A) பிராமணங்கள் – 1.வனநூல்கள்

B) சாம வேதம்       –   2. புரோகிதர் வழிகாட்டி நூல் 

C) ஆரண்யங்கள்   – 3. சடங்கு நூல்கள்

D) யஜுர் வேதம் –     4. மந்திர நூல்கள்

        A    B    C   D

a)    4     3    1    2

b)    3     4    1    2

c)    2     4    1    3

d)    1     2    3    4

Answer: c

17. Consider the following about Vedic literatures:

I. The Brahmanas are the treatises relating to prayer and sacrificial ceremony.

II. The Upanishads are philosophical texts dealing with topic like the soul, the absolute the origin of  the world and the mysteries of nature.

III. The Aranyakas are called country books.

IV. The author of Ramayana was Vedavyas and that of Mahabharata was valmiki.

Choose the correct code:

a) I, II, III and IV 

b) II, III and IV only

c) I and II only

d) III and IV only

வேதகால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி.

1. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.

II. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத

புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது

உபநிடதங்கள்.

III .நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யங்கள்.

IV. இராமாணயத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரத்தை

இயற்றியவர் வால்மீகி ஆவர்.

சரியானவற்றை தேர்ந்தெடு:

a) I, II, III மற்றும் IV 

b) II, III and IV மட்டும்

c) I மற்றும் II மட்டும் 

d) III மற்றும் IV மட்டும்

Answer: c

18. Which among the following is a keystone of Hindu Culture?

a) Respect to elders

b) Temple Dharshana

c) Relationship protocol

d) Touching feet in respect

இந்திய கலாச்சாரத்தின் ஆதாரமாய் விளங்குவது எது?

a) மூத்தோர்களை மதித்தல்

b) கோவில் தரிசனம்

c) உறவைச் சொல்லி அழைக்கும் வழக்காறு

d) காலில் விழுந்து வணங்குதல்

Answer: a

19. The earliest mention of medicine occurs in which of the following Vedas?

a) Rig veda

b) Sam veda

c) Yajur veda

d) Atharva veda

பண்டைக்கால மருத்துவத்தைப் பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது?

a) ரிக் வேதம்

b) சாமவேதம்

c) யஜுர் வேதம்

d) அதர்வண வேதம்

Answer: a

20. Ashrama or four stages of life came to be well established during which period?

a) Vedic period 

b) Rig vedic period

c) Later – Vedic period 

d) None of these

ஆசிரமங்கள் அல்லது வாழ்க்கையின் நான்கு நிலைகள் எந்தக் கால கட்டத்தில் நன்கு வளர்ச்சியடைந்தது?

a) வேதங்களுக்கு முந்திய காலம்

b) ரிக் வேத காலம்

c) பிந்திய வேத காலம்

d) எதுவுமில்லை

Answer: b

21. What does the Rigveda contain?

a) Collection of prayers

b) Collection of stories and events

c) Collection of a chronological sequence of dynasties

d) Collection of magic rituals

ரிக் வேதத்தில் எவை அடங்கியுள்ளது?

a) பாசுரங்களின் தொகுப்பு

b) கதைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு

c) பல்வேறு ஆட்சிகளின் வரிசையான தொகுப்பு

d) மந்திரங்கள் மற்றும் சடங்குகளின் தொகுப்பு

Answer: a

22. Which among the following geographical areas was/not inhabited by the early Aryans?

a) Baluchistan

b) Eastern Afghanistan

c) Punjab

d) Fringes of Western Uttar Pradesh

கீழ்கண்ட எந்த நிலப்பரப்பு ஆதிகால ஆரியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை

a) பலுசிஸ்தான் 

b) கிழக்கு ஆப்கானிஸ்தான்

c) பஞ்சாப்

d) மேற்கு உத்திரப்பிரதேசம்

Answer: d

23. The basic social Organisation of the Rigvedic people was,

a) Matriarchal family

b) Patriarchal family

c) Both matriarchal and patriarchal families

d) None of these

ரிக்வேத கால மக்களின் அடிப்படை சமூக அமைப்பு எது?

a) தாய் ஆதிக்க குடும்பம்

b) தந்தை ஆதிக்க குடும்பம்

c) தாய் ஆதிக்க குடும்பம் மற்றும் தந்தை ஆதிக்க குடும்பம்

d) இவை எதுவுமில்லை

Answer: b

24. The main focus of the Rigvedic culture was,

a) The Indo-gangetic valley

b) The punjab and Delhi region

c) The indus valley

d) The region between the swat and the Indus

ரிக்வேத கலாச்சாரத்தின் முக்கிய பிரதிபளிப்பு

a) சிந்து – கங்கை பள்ளத்தாக்கு

b) பஞ்சாப் மற்றும் டில்லி பகுதி

c) சிந்து பள்ளத்தாக்கு

d) ஸ்வாட் மற்றும் சிந்துவுக்கு இடையில் உள்ள பகுதி

Answer: c

25. Upanishads are books on,

a) religion

b) yoga

c) philosophy

d) law

உபநிடத நூல்கள் …….. சார்ந்தவை

a) சமயம்

b) யோகா

c) தத்துவம்

d) சட்டம்

Answer: c

26. Which one of the following is not minor deity according to Aryans?

a) Mitra 

b) Adityas 

c) Asvins 

d) Vasus

ஆரியர்களின் கருத்துப்படி பின்வருவனவற்றுள் சிறு தெய்வம் அல்லாத ஒன்று எது?

a) மித்ரா

b) அதித்யாஸ்

c) அஸ்வின்ஸ்

d) வாசுஸ்

Answer: d

27. The term ‘Brahmadeya’ denotes,

a) cash granted to the Brahmanas

b) taxes granted to the Brahmanas

c) land granted to the Brahmanas

d) land granted to temples

பிரம்மதேயம் என்னும் சொல் எதனைக் குறிக்கும்?

a) பிராமணருக்கு அளிக்கப்பட்ட பணம்

b) பிராமணருக்கு அளிக்கப்பட்ட வரி

c) பிராமணருக்கு அளிக்கப்பட்ட நிலம்

d) கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நிலம்

Answer: c

28.Aryans first settled in …… region.

a) Punjab

b) Middle Gangetic

c) Kashmir

d) North east

ஆரியர்கள் முதலில் …………. பகுதியில் குடியமர்ந்தனர்.

a) பஞ்சாப்

b) கங்கைச் சமவெளியின் மத்தியப் பகுதி

c) காஷ்மீர்

d) வடகிழக்கு

Answer: a

29. Aryans came from

a) China

b) North Asia

c) Central Asia

d) Europe

ஆரியர்கள் ……… லிருந்து வந்தனர்.

a) சீனா

b) வடக்கு ஆசியா

c) மத்திய ஆசியா

d) ஐரோப்பா

Answer: c

30. Our national Motto “ Satyameva Jayate” is taken from – – – – – –

a) Brahmana

b) Veda

c) Aranyaka

d) Upanishad

நம் நாட்டின் தேசிய குறிக்கோள் “ வாய்மையே வெல்லும்” – – – – – – – –  இருந்து எடுக்கப்பட்டது.

a) பிராமணா

b) ஆரண்யகா

c) வேதம் 

d) உபநிடதம்

Answer: d

 

error: Content is protected !!