Marathas – TNPSC Online Test 3

Photo of author

By TNPSC EXAM PORTAL

Marathas – TNPSC Online Test 3 

மராத்தியர்கள்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Marathas – TNPSC Online Test 3 கொடுக்கப்பட்டுள்ளது.

 Start Quiz பட்டனை கிளிக் செய்து தேர்வினை பயிற்சி செய்துக்கொள்ளலாம்.

தேர்வின் முடிவில் 26 வினாக்கள் மற்றும் அதன் விடைகள் தமிழ் மற்றும் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்களது மதிப்பெண்கள் மற்றும் சந்தேகங்களை கமெண்ட் (Comments) பாக்ஸில் தெரிவிக்கவும்.

{{CODEMARATHS3}}

 

Marathas – TNPSC Online Test 3

மராத்தியர்கள்

1. – – – – was one of the disciples of the Bhakthi saint-poet Ramananda.

a) Chaitanya

b) Ravidas

c) Guru Nanak 

d) Kabir

இராமானந்தரின் சீடர் – – – – –

a) சைதன்யர்

b) ரவிதாஸ்

c) குருநானக்

d) கபீர்

Answer: d

2. – – – – was the contemporary of the Maratha ruler Shivaji.

a) Ramananda

b) Mirabai

c) Surdas

d) Tukaram

மராத்திய மன்னர் சிவாஜியின் சமகாலத்தவர் – – – -ஆவார்.

a) இராமானந்தர்

b) மீராபாய்

c) சூர்தாஸ்

d) துக்காராம்

Answer: d

3. Guerilla warfare was the strength of – – – – – army.

a) Maratha

b) Mughal

c) British

d) Nayaks

வலிமைமிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியோர்

a) மராத்தியர்

b) முகலாயர்

c) ஆங்கிலேயர்

d) நாயக்கர்

Answer: a

4. – – – – was the Guru of Shivaji.

a) Dadaji Kondadev

b) Ramdas

c) Tukaram

d) Shaji Bhonsale

சிவாஜியின் குரு – – – – ஆவார்.

a) தாதாஜி கொண்டதேவ் 

b) ராம்தாஸ்

c) துக்காராம்

d) ஷாஜி போன்ஸ்லே

Answer: b

5. Treaty of Purandar was signed between Shivaji and – – – – –

a) Afzalkhan

b) Shayistakhan

c) Jai Singh

d) Aurangazeb

புரந்தர் உடன்படிக்கை , சிவாஜிக்கும் – – – – க்கும் இடையே கையெழுத்தானது.

a) அஃப்சல்கான்

b) செயிஷ்டகான்

c) ஜெய்சிங்

d) ஔரங்கசீப்

Answer: c

6. The Council of Ministers of Shivaji was known as – – – – –

a) Ashta Pradhan 

b) Astadiggajas

c) Navarathnas 

d) Panchapandavas

சிவாஜியின் ஆலோசனை சபை – – –என்று அழைக்கப்பட்டது.

a) அஷ்டப்பிரதானம் 

b) அஷ்டதிக்கஜங்கள்

c) நவரத்தினங்கள் 

d) பஞ்சபாண்டவர்கள்

Answer: a

7. Chaudh was – – – of the revenue collected from the district conquered by the Marathas.

மராத்தியர் கைப்பற்றிய மாவட்டத்தின் வருவாயில் சௌத் என வசூலிக்கப்பட்டது.

a) 1/3

b) 1/4 

c) 1/6 

d) 1/10

Answer: b

8. In the Military organization of Shivaji, the smallest unit was headed by a – – – –

a) Naik

b) Havildars

c) Bargirs

d) Shiledars

சிவாஜியின் இராணுவ அமைப்பில் மிகச்சிறிய படை அலகின் தலைவராக – – – – – இருந்தார்.

a) நாயக்

b) ஹவில்தார்

c) பர்கிர்

d) ஷைலேதார்

Answer: a

9. – – – – was the Peshwa who enhanced the power of the Maratha Empire.

a) Baji Rao – 1

b) Balaji Viswanath

c) Balaji Baji Rao

d) Baji Rao – 2

மராத்திய சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை மேம்படுத்திய பேஷ்வா – – – – -ஆவார்.

a) முதலாம் பாஜி ராவ் 

b) பாலாஜி விஷ்வநாத்

c) பாலாஜி பாஜி ராவ் 

d) இரண்டாம் பாஜி ராவ்

Answer: a

10. The Kohinoor diamond was taken away by – – – – –

a) Ahmad Shah Abdali 

b) Nadir Shah

c) Shuja-ud-Daulah 

d) Najib-ud-Daulah

– – – – கோகினூர் வைரத்தை எடுத்துச் சென்றார்.

a) அஹமது ஷா அப்தலி 

b) நாதிர் ஷா

c) ஷுஜா-உத்-தௌலா 

d) நஜீப்-உத்- தௌலா

Answer: b

11. – – – – treaty brought the first Anglo-Maratha War to an end.

a) Treaty of Madras

b) Treaty of Pune

c) Treaty of Salbai

d) Treaty of Bassein

– – – – உடன்படிக்கை முதலாம் ஆங்கிலோ – மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

a) மதராஸ் உடன்படிக்கை 

b) பூனா உடன்படிக்கை

c) சால்பை உடன்படிக்கை

d) பேசின் உடன்படிக்கை

Answer: c

12. – – – was the British Governor-General on the eve of the Second Anglo-Maratha War.

a) Lord Cornwallis 

b) Lord Wellesley

c) Lord Hastings 

d) Lord Dalhousie

இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போரின்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் – – – – – –

a) காரன்வாலிஸ் பிரபு 

b) வெல்லெஸ்லி பிரபு

c) ஹேஸ்டிங்க்ஸ் பிரபு 

d) டல்ஹௌசி பிரபு

Answer: b

13. At the village level was responsible for the remission of the revenue collections to the centre.

a) Deshmukhs

b) Kulkarni

c) Kotwal

d) Patel

கிராம அளவில் வருவாய் வசூலை மத்திய அரசுக்கு அனுப்பும் பொறுப்பை – – – ஏற்றிருந்தனர்.

a) தேஷ்முக்கு

b) குல்கர்னி

c) கொத்வால்

d) பட்டேல்

Answer: d

14. – – – – built naval bases at Konkan, Khanderi and Vijayadurg.

a) Balaji Baji Rao 

b) Nana Sahib

c) Baji Rao – 2

d) Balaji Vishwanath

கொங்கணம், கண்டேரி,  விஜயதுர்க் அகிய இடங்களில் கடற்படைத் தளங்களை கட்டியவர் – – – ஆவார்.

a) பாலாஜி பாஜி ராவ்

b) நானா சாகிப்

c) இரண்டாம் பாஜி ராவ் 

d) பாலாஜி விஸ்வநாத்

Answer: d

15. – – – – developed the Nayankara System.

a) Serfoji – 2

b) Raja Desinghu

c) Krishnadeva Raya

d) Pratap Singh

நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர்

a) இரண்டாம் சரபோஜி

b) இராஜா தேசிங்கு

c) கிருஷ்ண தேவராயர்

d) பிரதாப் சிங்

Answer: c

16. Serfoji – 2 established – – – – – that produced  herbal medicine for humans and animals.

a) Saraswathi Mahal

b) Muktambal Chattram

c) Nava vidya

d) Dhanvantari Mahal

மனிதர்களுக்காகவும் மற்றும் விலங்குகளுக்காகவும் மூலிகை மருந்துகளைத் தயாரிக்க – – – –இரண்டாம் சரபோஜியால் நிறுவப்பட்டது

a) சரஸ்வதி மஹால் 

b) முக்தாம்பாள் சத்திரம்

c) நவ வித்யா

d) தன்வந்திரி மஹால்

Answer: d

17. Name the book which was not written by Serfoji – 2

a) Kumarasambhava Champu

b) Devendra Kuravanji

c) Mudrarakshaschaya

d) Kumarasambhavam

கீழ்க்கண்டவற்றுள் இரண்டாம் சரபோஜி எழுதாத புத்தகம் என்ன?

a) குமாரசம்பவ சம்பு 

b) தேவேந்திர குறவஞ்சி

c) முத்ராராஷ்சாயா

d) குமாரசம்பவம்

Answer: d

18. Find out the incorrect statement:

a) Afzalkhan was appointed the Governor of the Deccan in 1660 with the main purpose of crushing Shivaji.

b) Senji acted as the first line of defence for Shivaji’s successors.

c) The revenue administration of Shivaji was humane and beneficent to the cultivators.

d) Sardeshmukhi was an additional 15% of the revenue which Shivaji collected.

கீழ்கண்டவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு:

a) சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660 ஆம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

b) சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது.

c) சிவாஜியின் வருவாய் நிர்வாகம் , மனிதாபிமானம் சார்ந்து,உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது.

d) சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும்.

Answer: b

19. Find out the correct statement:

a) The English made friendly relations with the Marathas and got the right to free trade in Deccan region.

b) Sahu defeated and killed Dost Ali the Nawab of  Arcot in 1749.

c) The Judicial System under Peshwas was perfect.

d) Venkoji was the last ruler of Bhonsle dynasty of Maratha principality of Thanjavur.

கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு:

a) ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.

b) 1749 இல் ஆற்காட்டு நவாப் தோஸ்து அலியை சாஹு தோற்கடித்துக் கொன்றார்.

c) பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முழுமை பெற்றிருந்தது.

d) தஞ்சை மராத்திய அரசின் போன்ஸ்லே வம்சத்து கடைசி அரசர் வெங்கோஜி ஆவார்.

Answer: a

20. From the following, find out the correct answer

i) The administration of Justice under Shivaji was of a primitive nature.

ii) There were regular courts and procedure.

a) i  is correct

b) ii is correct

c) i and ii are correct 

d) i and ii are wrong

கீழ்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு:

i) சிவாஜியின் கீழிருந்த நீதி நிர்வாகம் பழமையான ஒன்றாகும்.

ii) நிலையான நீதிமன்றங்களும் விதிமுறைகளும் இருந்தன.

a) i சரி

b) ii சரி

c) i மற்றும் ii சரி

d) i மற்றும் ii தவறு

Answer: a

21. From the following, find out the correct answer

i) The tottering Mughal Empire neglected the defence of North East frontier area.

ii) This prompted Nadir Shah to invade India.

a) i is correct

b) ii is correct

c) i and ii are correct 

d) i and ii are wrong

கீழ்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு:

i) வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்துகொண்டிருந்த முகலாயப் பேரரசு நழுவவிட்டது.

ii) இது நாதிர்ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது.

a) i சரி

b) ii சரி

c) i மற்றும் ii சரி

d) i மற்றும் ii தவறு

Answer: c

22. Assertion (A): The Third Battle of Panipat paved the way for the rise of British power in India.

Reason (R): The defeat in this Battle dealt a severe blow to the Marathas and the Mughals.

a) A is correct; R is the correct explanation of A.

b) A is correct; R is wrong.

c) Both A and R are wrong.

d) A is correct; but R is not the correct explanation of A.

கூற்று : மூன்றாம் பானிபட் போர் ஆங்கிலேயரின் அதிகார  எழுச்சிக்கு வழிவகுத்தது.

காரணம் : இத்தோல்வி மராத்தியருக்கும் முகலாயருக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

a) கூற்று சரி ; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.

b) கூற்று சரி; காரணம் தவறு

c) கூற்று மற்றும் காரணம் தவறானவை.

d) கூற்று சரி காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

Answer: a

23. Assertion (A): Men for infantry were recruited from Maharashtra only.

Reason (R): The Marathas preferred to serve in the cavalry.

a) A is wrong; R is correct.

b) A is correct; R explains about A.

c) A and R are wrong

d) A and R are correct

கூற்று : காலாட்படை வீரர்கள் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

காரணம் : மராத்தியர் குதிரைப்படையில் பணியாற்ற விரும்பினார்.

a) கூற்று தவறு; காரணம் சரி

b) கூற்று சரி ; காரணம் கூற்றினை விளக்குகிறது.

c) கூற்று மற்றும் காரணம் தவறானவை

d) கூற்று மற்றும் காரணம் சரியானவை

Answer: a

24. Which of the following pair is wrongly matched

a) Shivaji          –  Mountain-rat

b) Baji Rao – 1  –  Battle of Udgir

c) Timur Shah  – Viceroy of Lahore

d) Desinghu    – Senji

கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை

a) சிவாஜி – மலை எலி

b) முதலாம் பாஜிராவ் -உத்கிர்போர்

c) தைமுர் ஷா – லாகூரின் வைஸ்ராய்

d) தேசிங்கு – செஞ்சி

Answer: b

25. Match the following:

A. Amatya     –    1) Records of Kings

B. Summant  –    2) Public morals

C. Pandit Rao  –  3) War and peace

D. Walkia Nawis -4) Public accounts

பொருத்துக:

A) அமத்யா   –  1. அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்

B) சுமந்த்   – 2. பொது ஒழுக்க நடைமுறைகள்

C) பண்டிட் ராவ் – 3. போர் மற்றும் அமைதி

D) வாக்கிய நாவிஸ் – 4.அரசின் அனைத்து பொது கணக்குகள்

      A   B   C   D

a)  4    1    2   3 

b)  1    3    2   4

c)  4     3    2   1 

d)  1    4    2   3

Answer: c

26. Arrange the successors of Shivaji chronologically.

a) Sambhaji, Shahu, Rajaram, Sambhaji II

b) Sambhaji, Rajaram, Shahu, Sambhaji II 

c) Rajaram, Sambhaji, Shahu, Sambhaji II 

d) Sambhaji, Sambhaji II, Rajaram, Shahu

சிவாஜியின் ஆட்சிக்குப் பிறகு வந்தவர்களைக் கால வரிசைப்படி எழுதவும்:

a) சாம்பாஜி, சாஹு, ராஜாராம், இரண்டாம் சாம்பாஜி

b) சாம்பாஜி, ராஜாராம், சாஹு, இரண்டாம் சாம்பாஜி

c) ராஜாராம், சாம்பாஜி, சாஹு, இரண்டாம் சாம்பாஜி

d) சாம்பாஜி, இரண்டாம் சாம்பாஜி, ராஜாராம், சாஹு

Answer: b

 

error: Content is protected !!