TNPSC Group 1 Exam Answer Key Case 2023: குரூப் 1 தேர்வு வினா-விடை குளறுபடி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC Group 1 Exam Answer Key Case 2023: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா மேட்டுப்பட்டி, லக்ஷ்மணகுமார், என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன், இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளேன்.

21.07.2022 அன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 92 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. முதல்நிலைத் தேர்வு 19.11.2022 அன்று நடந்தது. இந்த நிலையில் முதல்நிலைத் தேர்வு முடிந்து 10 நாட்களுக்குப் பின்னர் 28/11/22 அன்று உத்தேச வினா-விடை வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட உத்தேச வினா-விடைகளுக்கு ஆட்சேபனை இருந்தால், தவறுகள் இருந்தால் இதுகுறித்து 7 நாட்களில் டிஎன்பிஎஸ்சிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கோரப்பட்டது.

TNPSC EXAM PORTAL CURRENT AFFAIRS MAY 2023 IN TAMIL & ENGLISH PDF

இதை தொடர்ந்து நான், 05.12.2023 அன்று நான் 19 கேள்விகளின் விடை தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது என்று நான் ஆதாரத்துடன் விண்ணப்பித்தேன். உத்தேச வினா-விடை குறித்து என்னுடைய ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்கவில்லை.

இந்த நிலையில் 28.04.2023 அன்று முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிசியால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளனர். நான் தேர்வு செய்யப்படவில்லை.

குரூப் 1 மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கோரப்பட்டு உள்ளனர். எனவே,உத்தேச வினா-விடை குறித்து என்னுடைய ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழு எந்த பதிலும் வழங்காமல், முதல் நிலை தேர்வுகள் முடிவு வெளியிடப்பட்டு உள்ளதால் என் போன்றோர் முதன்மை தேர்வுக்கு தகுதிபெறவில்லை. இதுபோல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, உத்தேச வினா-விடை குறித்து என் போன்றோரின் ஆட்சேபனை குறித்து, வல்லுநர் குழுவின் இறுதி வினா-விடை பட்டியல் வெளியிட வேண்டும். அதன் பின்னரே குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகளை வெளியிடவேண்டும்.

எனவே, கடந்த. 28.04.2023 அன்று 92 பணியிடங்களுக்கு நடந்த குருப் 1 முதன் நிலை தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

வினாவிற்கான விடைகளை இறுதி செய்யும் வல்லுநர் குழுவை, டிஎன்பிஎஸ்சி நியமிக்காமல், உயர்கல்வி துறை நியமிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

error: Content is protected !!