16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக டாக்டர். மனோஜ் சோனி நியமனம்
  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக டாக்டர். மனோஜ் சோனி இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆணையத்தின் மூத்த உறுப்பினர் திருமதி. ஸ்மித்தா நாகராஜ் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
  • டாக்டர். மனோஜ் சோனி கடந்த 28.06.2017 ம் ஆண்டு அன்று ஆணையத்தின் உறுப்பினராக பதவியேற்றார். பின்னர் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
  • அரசியல் அறிவியலில், சர்வதேச உறவு குறித்த கல்வியில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் போருக்குப் பிந்தைய சர்வதேச முறையில் மாற்றம் மற்றும் இந்திய-அமெரிக்க உறவுகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 
  • எம்.எஸ் பரோடா பல்கலைக்கழகத்தில் ஒரு முறையும் குஜராத்தில் உள்ள டாக்டர். பாபா சாஹெப் அம்பேத்கர் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டு முறையும் துணை வேந்தராகப் பணியாற்றியுள்ளார். 
  • சுதந்திர இந்தியாவின் மிக இளம் வயதிலேயே துணை வேந்தராகப் பணியாற்றிய பெருமை அவரைச் சாரும். டாக்டர். சோனி ஏராளமான விருதுகள் மற்றும் அங்கீகாரங்களை பெற்றவர். முக்கிய இதழ்களில் அவரது கட்டுரைகள் வெளியாகின.
சென்னை தியாகராய நகரில் ஆகாய நடை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சென்னையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக விளங்கும் தியாகராய நகருக்கு வருபவர்கள் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கு கூட்ட நெரிசலைதான் கடந்து தான் செல்ல வேண்டும்.
  • இந்த நெரிசலை குறைப்பதற்காக தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக மாம்பலம் ரெயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில் 1,968 அடி நீளம் கொண்ட நடை மேம்பாலம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
  • லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டு வசதி கொண்ட இந்த ஆகாய நடை மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் இரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 
  • இந்த ஆகாய நடைமேம்பாலத்தில் மின்னாக்கிகள் (Generators), காவல்துறை கண்காணிப்பு அறையுடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள். பொதுமக்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கிகள், துருப்பிடிக்காத எஃகிலான குப்பை கூடைகள், பாதுகாவலர் அறைகள், நவீன கழிவறைகள் போன்ற கூடுதல் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் சேர தேர்ந்தெடுக்கப்பட்ட 71,000 பேருக்கு நியமன ஆணைகள் – பிரதமர் மோடி வழங்கினார்
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் பத்து லட்சம் பேருக்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். 
  • அதன்படி, பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு பணிகளுக்கு நியமிக்கப்படுவோருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில் ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் மத்திய அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள 71,000 பேருக்கு பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். 
  • நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
  • மேலும் அஞ்சலக ஆய்வாளர்கள், தட்டச்சர், தீயணைப்ப ஊழியர், ஆடிட்டர், பட்டதாரி ஆசிரியர், உதவிப் பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இன்று பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
வல்லநாடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பல்லி இனத்திற்கு “முத்து செதில் “எனப் பெயர்
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகன் தேஜஸ் தாக்கரே தலைமையில் தாக்கரே வைல்டு லைவ் பவுண்டேஷன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பல் உயிரினங்கள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 
  • இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து ஆராய்ச்சியாளர்கள் குழு வல்லநாடு, காப்புக்காடு மற்றும் கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். 
  • இந்த குழுவில் திருநெல்வேலியைச் சேர்ந்த ஊர்வன பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரமேஸ்வரன் மாரியப்பன் இருந்துள்ளார். இவர்கள் பார்வதி அம்மன் கோவில், வல்லநாடு காப்புக்காடு, மணக்கரை மற்றும் குருமலை காப்புக் காட்டில் உள்ள பெருமாள் கோவில் அருகே புதிதாக ஒரு பல்லி இனத்தினை கண்டுபிடித்தனர். 
  • இந்த பல்லிக்கு குவார்ட்சைட் புரூக்லிஷ் கெக்கோ அல்லது தூத்துக்குடி ப்ரூக்கிஷ் கெக்கோ என்றும் தமிழில் முத்து செதில் பல்லி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
  • இந்த பல்லி இனத்தைப் பொறுத்தவரை இந்திய அளவில் 53 வது பல்லி இனமாகவும், தமிழக அளவில் 7 வது பல்லி இனமாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 
  • இந்த அரிய வகை பல்லி இனம் தனித்துவம் வாய்ந்ததாகும். அதன் முதுகு செதில்கள், தொடைப்பகுதி வினோதமாக உள்ளது. எனவே அப்பல்லி இனத்திற்கு முத்து செதில்கள் எனப்பபெயரிடப்பட்டுள்ளது.
‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்தார்
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதே, பிரதமர் திரு நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கம் என்பதால், அதனை நிறைவேற்றும் விதமாக மத்திய தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ‘சஞ்சார் சாத்தி’ என்ற புதிய இணையதளத்தை இன்று தொடங்கிவைத்தார். இந்த இணையதளம் தொலைந்து போன செல்போன்களைக் கண்டறியவும், போலி செல்ஃபோன்களை அடையாளம் காணவும் உதவும்.
  • சிஇஐஆர் என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட செல்ஃபோன்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும். 
  • இந்த இணையதளத்தில் அளிக்கும் தகவல்கள் சரியாக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அவற்றை கண்காணித்து மீட்கும் பணியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

மே 16 – சர்வதேச ஒளி தினம் 2023 / INTERNATIONAL DAY OF LIGHT 2023
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சர்வதேச ஒளி தினம் 1960 ஆம் ஆண்டில் லேசரின் முதல் வெற்றிகரமான செயல்பாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இது நன்கு அறியப்பட்ட இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியோடர் மைமனால் நடத்தப்பட்டது. 
 
இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று அனுசரிக்கப்படுகிறது மற்றும் அறிவியல் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதையும், நிலையான வளர்ச்சி மற்றும் அமைதியை வளர்ப்பதற்கான அதன் திறனைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Dr. Manoj Soni appointed as Chairman of the Staff Selection Commission

  • Chairman of the Central Government Staff Selection Commission Dr. Manoj Soni took oath today. He was accompanied by a senior member of the commission, Smt. Smitha Nagaraj became a Brahmin.
  • Dr. Manoj Soni was sworn in as a member of the Commission on 28.06.2017. Later he was selected for the post of Chairman of the Commission.
  • He holds a Masters in Political Science, International Relations Education and a PhD from Sardar Patel University with research on post-war international system change and Indo-US relations.
  • MS Baroda University and once Dr. in Gujarat. Baba Saheb Ambedkar has served twice as Vice-Chancellor of the Open University.
  • He is credited with serving as the Vice Chancellor of independent India at a very young age. Dr. Sony has received numerous awards and recognitions. His articles appeared in leading journals.
Chief Minister M. K. Stalin inaugurated the flyover in Thiagaraya Nagar, Chennai
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Visitors to Thiagaraya, Chennai’s largest commercial city, have to get off at Mambalam railway station and go through the rush hour to get to T. Nagar bus station.
  • In order to reduce this congestion, a 13 feet wide 1,968 feet long pedestrian flyover has been constructed under the ‘Smart City’ project at a cost of Rs.30 crore from T. Nagar Bus Stand to Mambalam Railway Station via Madli Road, Border Road.
  • Chief Minister M.K.Stalin inaugurated this skywalk with lift facility and moving staircase facility. The flyover has been integrated with the Mambalam railway station flyover so that rail passengers from South Tamil Nadu and passengers traveling by electric train can reach Thiagaraya Nagar bus stand without difficulty. 
  • This flyover has generators, CCTV cameras connected to the police watch room. Additional facilities like public announcement loudspeakers, stainless steel dustbins, guard rooms, modern toilets have been installed.
PM Modi issues appointment orders to 71,000 selected candidates for central government jobs
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Last year, Prime Minister Modi announced that ten lakh people would be given employment under the central government’s Rojkar Mela scheme before the Lok Sabha elections next year. Accordingly, appointment orders are issued to those appointed to central government jobs at various stages.
  • In this context, Prime Minister Modi addressed 71,000 people in central government departments under the Rojkar Mela scheme today through video. Central Ministers and senior officers participated in these programs held at 45 places across the country and issued appointment orders to those selected for central government jobs.
  • Also, appointment orders were issued today to the post inspectors, typist, fireman, teacher, graduate teacher, assistant registrar and other posts.
A new species of lizard discovered in Vallanadu region is named “Muthu Chehil”
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Thackeray Wildlife Foundation is headed by Tejas Thackeray, son of former Maharashtra Chief Minister Uddhav Thackeray. This organization is trying to find different species in different parts of India.
  • In this case, last April, a group of five researchers from the organization conducted research in Vallanadu, Pavakadu and Kurumalai reserve forests near Kovilpatti. Rameswaran Mariyappan, a reptile conservationist from Tirunelveli, was on the team. They discovered a new species of lizard near Parvati Amman Temple, Vallannadu Reserve, Manakarai and Perumal Temple in Kurumalai Reserve Forest.
  • This school is also named as Quartzite Brookish Gecko or Tuticorin Brookish Gecko in Tamil as Muthu Chethil Palli. Regarding this lizard species, it is the 53rd lizard species in India and the 7th lizard species in Tamil Nadu. This rare species of lizard is unique. Its back plants, the thigh is strange.
Union Minister Mr Ashwini Vaishnav launched a new website ‘Sanchar Sathi’
  • 16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Ensuring safety and security of telecom users is an important part of Prime Minister Shri Narendra Modi’s Digital India vision, Union Minister for Telecom, Railways, Electronics and Information Technology Shri Ashwini Vaishnav launched a new website ‘Sanchar Sathi’ today. This website helps you find lost cell phones and identify fake cell phones.
  • Through this service developed based on the technology called CIIR, efforts can be made to locate lost or stolen cell phones. If the information provided on this website is correct, it will be monitored and recovered within the next 24 hours.
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

May 16 – INTERNATIONAL DAY OF LIGHT 2023
16th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: International Light Day marks the anniversary of the first successful operation of a laser in 1960 by the well-known physicist and engineer Theodor Maiman.
The day is observed on May 16 every year and aims to consolidate scientific cooperation and harness its potential to foster sustainable development and peace.
error: Content is protected !!