TNPSC EXAM RESULT UPDATE 2023: 28 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC EXAM RESULT UPDATE 2023: டிஎன்பிஎஸ்சி தமிழக அரசில் உயர் பதவியான குரூப் 1 மற்றும் குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவு எப்போது வெளியாகும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப்2, 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,446 இடங்களுக்கு கடந்த ஆண்டு மே 21ம் தேதி முதல்நிலை தேர்வு நடந்தது. தொடர்ந்து மெயின் தேர்வு கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடத்தப்பட்டது. இந்த மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகிறது.
குரூப்1 பதவிகளில் 95 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியானது. இப்பதவிக்கான மெயின் தேர்வு வருகிற ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.
செயல் அதிகாரி (கிரேடு 3, 7பி) பணியில் 77 பணியிடங்களுக்கான ரிசல்ட், செயல் அதிகாரி (குரூப் 4, குரூப் 8) பணியில் 74 இடங்கள், 10 வன பயிற்சியாளர் பணியிடம், தலைமை செயலகத்தில் 178 உதவி பிரிவு அலுவலர் பணியிடம், குரூப்-3ல் ஒருங்கிணைந்த சிவில் சேவைகள் துறையில் 33 பணியிடம், புள்ளியியல் துறை 217 பணியிடம், 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடம், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் (குரூப் 1சி), 9 உதவி வன பாதுகாவலர் பணியிடம், 27 நூலகர் பணியிடம், 121 வேளாண் அலுவலர், வேளாண் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் 825 சாலை ஆய்வாளர் பணியிடம், 1,083 ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்.
error: Content is protected !!