TNPSC GROUP 4 COUNSELLING 2023: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு எப்போது?

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC GROUP 4 COUNSELLING 2023: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய இளநிலை உதவியாளர் என மொத்தம் 7,301 காலி பணியிடங்களுக்கான தேர்வை 2022ல் அறிவித்தது.

இத்தேர்வை 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் இன்ஜினியரிங் படித்தவர்கள் என 18.36 லட்சம் பேர் கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி போட்டி போட்டு எழுதினர். டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் ஒரு தேர்வுக்கு அதிகபட்சமாக விண்ணப்பித்ததும், தேர்வு எழுதியதும் குரூப்4 தேர்வு என்ற சாதனை படைத்தது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் 24ம் தேதி வெளியிடப்பட்டது.

TNPSC GROUP 4 Vacancies INCREASED 2023: குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் உயர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

அதே நேரத்தில் குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது பணியிடங்கள் 10,748 ஆக உயர்ந்துள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள் எண்ணிக்கை 7,301 தான்.

தொடர்ந்து 2வது முறையாக 9,840 இடங்கள் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு 3வது முறையாக பணியிடங்கள் எண்ணிக்கை 10,748 அளவுக்கு உயர்ந்தது. இது மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் தேர்வு முடிவு வெளியாகி சுமார் 3 மாதங்கள் ஆகியும் குரூப் 4 தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்று தேர்வர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC GROUP 4 COUNSELLING 2023: இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்ட பின்னர், தேர்வர்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. ஒழுங்காக பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த பணியும் தற்போது முடிந்துள்ளது. தொடர்ந்து கலந்தாய்வை நடத்துவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி துரிதப்படுத்தியுள்ளது.

அடுத்த மாதத்தில் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிப்பார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வுக்கான தேதி, நேரம், விவரம் அடங்கிய அழைப்பு கடிதம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்” என்றார்.

error: Content is protected !!