TNPSC GROUP 4 Vacancies INCREASED 2023: குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் உயர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

Photo of author

By TNPSC EXAM PORTAL

TNPSC GROUP 4 VACANCIES INCREASED 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

சற்றுமுன் வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் (TNPSC GROUP 4 RESULT 2023)

கடந்த 2012-ம் ஆண்டு அறிவிக்கையின்படி 10,718, 2017-ம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,351, 2019-ம் ஆண்டு அறிவிக்கையின்படி 9,398 என கடந்த 11 ஆண்டுகளில் 29,951 நான்காம் தொகுதி பணியாளர்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் 7301-ல் இருந்து 10,748 ஆக உயர்த்துவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஜூன் 18ம் தேதி நிலவரப்படி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வை சுமார் 18.5 லட்சம் பேர் எழுதியது குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!