11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம். எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF:
மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன ஆணைகளை குடியரசுத்தலைவரிடம் சமர்ப்பித்தனர்
  • குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 11, 2023) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்கா, கத்தார், மொனாக்கோ நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் நியமனங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
  • நியமன ஆணைகளை சமர்ப்பித்த தூதர்களின் விவரம் – திரு எரிக் கார்செட்டி, அமெரிக்க தூதர், திரு முகமது ஹசன் ஜாபிர் அல்-ஜாபிர், கத்தார் தூதர், திரு திடியர் காமர்தின்கர், மொனாக்கோ தூதர்
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) ஸ்டார்ட்-அப் மன்றம் 2023
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஸ்டார்ட்-அப் குறித்து மெய்நிகர் பயன்முறையில் ஏற்கனவே இரண்டு வெற்றிகரமான நிகழ்வுகளை நடத்திய பிறகு, ஸ்டார்ட்-அப் இந்தியாவும், மத்திய வர்த்தக அமைச்சகமும் மூன்றாவது நிகழ்வை புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) ஸ்டார்ட்-அப் மன்றம் மூலம் முதன்முதலில் நேரடியாக ஏற்பாடு செய்தது. 
  • அரசு அதிகாரிகள், தனியார் தொழில்துறையினர், ஸ்டார்ட்-அப்களின் பிரதிநிதிகள் என ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகளிலிருந்து பலர் கலந்துகொண்டனர். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு.சோம் பிரகாஷ், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் ஸ்டார்ட்-அப்களின் பங்கை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
  • மேலும், ‘ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பின் பங்கு’ என்ற தலைப்பில் ஸ்டார்ட்-அப் இந்தியா நடத்திய பயிலரங்கில் பல்வேறு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
  • நாடுகளுக்கிடையில் நெருக்கமான உறவுகளை வளர்ப்பது குறித்தும், எஸ்சிஓ நாடுகளில் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலை மேம்படுத்துவது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
  • பின்னர், எஸ்சிஓ உறுப்பு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் டெல்லி ஐஐடி-யில் உள்ள புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான அறக்கட்டளையைப் பார்வையிட்டனர். 
  • இதன் மூலம், இந்திய ஸ்டார்ட்-அப் அமைப்பு குறித்த சூழலமைப்பை தகவலகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்த சுற்றுப்பயணத்தின் போது, இந்தியாவின் தொழில்முனைவோர் குறித்து அறிந்து கொண்டதோடு, இந்தியாவில் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளையும் தெரிந்து கொண்டனர்.
  • முன்னதாக, எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்காக ஸ்டார்ட்-அப் இந்தியா பல்வேறு முயற்சிகளை ஏற்பாடு செய்திருந்தது:
  • எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஃபோரம் 2020: எஸ்சிஓ உறுப்பு நாடுகளிடையே ஸ்டார்ட்-அப்களுக்கான பலதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கான அடித்தளத்தை எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஃபோரம் அமைத்தது.
  • எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஃபோரம் 2021: காணொலி மூலம் நடைபெற்ற இரண்டு நாள் கருத்துக்களம், இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேக தளத்தில் நடைபெற்றது. எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் ஹப் இந்த மன்றத்தில் தொடங்கப்பட்டது.
  • வழிகாட்டல் திட்டம் : எஸ்சிஓ ஸ்டார்ட்-அப் நிறுவனர்களின் திறனை வளர்ப்பதற்காக, பரிந்துரைக்கப்பட்ட ஸ்டார்ட்-அப்களுக்காக 3 மாத நீண்ட மெய்நிகர் வழிகாட்டு நிகழ்ச்சியான ‘ஸ்டார்டிங்-அப்’ ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக அரசு – ஹூண்டாய் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்து
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடி அளவில் ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. 
  • நிகழ்ச்சியில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவன தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் (இந்தியா) தலைமைச் செயல் அலுவலர் உன்சூ கிம் பரிமாறிக் கொண்டனர்.
  • இந்நிகழ்வில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், ஹூண்டாய் கார்ப்பரேட் விவகாரங்கள் செயல் இயக்குநர் டி.எஸ்.கிம், நிதிப் பிரிவு துணைத் தலைவர் டி.சரவணன், கார்ப்பரேட் விவகாரங்கள் இணை துணை தலைவர் புனீத் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  • தமிழக அரசு – ஹூண்டாய் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுக்கு 1.78 லட்சம்பேட்டரி அசம்பிள் செய்யும் வகையில் தொழிற்சாலை, அடுத்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் 100 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைத்தல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறனை 8.50 லட்சம் வாகனங்களாக உயர்த்துதல், மின்சார வாகனங்கள் தயாரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
3வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம்
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மன்னார்குடி எம்எல்ஏ-வும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி வெளியானது.
  • சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி.ராஜாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 
  • தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, டிஆர்பி.ராஜா புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, அமைச்சர்களின் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • அதன்படி, புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வந்த தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கவனித்து வந்த நிதி, திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள், புள்ளியியல் ஆகிய துறைகள் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் ஏற்கெனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சிமொழித் துறை ஆகியவை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
  • அமைச்சர் த.மனோ தங்கராஜ் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் கவனித்து வந்த பால்வளத் துறை மனோ தங்கராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் – பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒப்பந்தம்
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மகளிர் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் துணை அமைப்பான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
  • அக்குழுக்களின் பொருளாதார சுயசார்புக்கு வலுசேர்க்கும் வகையில் வங்கிக் கடன் இணைப்புகள் உள்ளிட்ட ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்புவழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
  • இதை செயல்படுத்தி, சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் இலக்கை எட்டவும், சுயஉதவிக் குழுக்களுக்கு விரைவாக வங்கிக் கடன் இணைப்புகள் பெற்றுத் தரவும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • இதன் ஒருபகுதியாக, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையேநேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இதில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினியும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நிராஜ் பாண்டாவும் கையெழுத்திட்டனர்.
டெல்லி ஆளுநரைவிட அரசுக்கே அதிகாரம் – உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.
  • இது தொடர்பாக 2015-ல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2016-ல் ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  • 2019-ல் இரு நீதிபதிகள் அமர்வு, இவ்வழக்கில் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியது. ஒரு நீதிபதி அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு நீதிபதி துணைநிலை ஆளுநருக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். 
  • இதையடுத்து, இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
  • இதன்படி, தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு வழக்கை விசாரித்தது.
  • இதற்கிடையில், 2021-ல் “தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம்” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும்கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
  • இந்த சூழலில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும்.
  • பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக் குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
  • டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். இவ்வாறு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. 
தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் மே 11 அன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தேசிய தொழில்நுட்ப தினம் 2023-ஐ குறிக்கும் நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி மே 11 அன்று புதுதில்லி, பிரகதி மைதானத்தில் தொடங்கிவைத்தார். தேசிய தொழில்நுட்ப தினத்தின் 25-வது ஆண்டு கொண்டாட்டம் மே 11-ல் தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுவதையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
  • இந்நிகழ்ச்சியில், ரூ.5800 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். நாட்டின் அறிவியல் நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா நோக்கத்தை அடையும்வகையில் இது அமைந்துள்ளது.
  • ஹிங்கோலியில் லேசர் இன்டர்ஃபெரோமீட்டர் ஈர்ப்பு – அலை கண்காணிப்பகம் இந்தியா (எல்ஐஜிஓ- இந்தியா,) ஒடிசா மாநிலம் ஜாட்னியில் ஹோமிபாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மும்பை டாடா நினைவு மருத்துவமனையின் பவளவிழா கட்டடம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
  • மும்பையில் ஃபிஷன் மாலிப்டெனம்-99 உற்பத்தி நிறுவனம், விசாகப்பட்டினத்தில் அரிய புவி நிரந்தர காந்த நிறுவன, நவி மும்பையில் தேசிய ஹாட்ரான் பீம் சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல் ஆராய்ச்சி பிரிவு, நவி மும்பையில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனை கட்டடம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகிய திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.
  • இந்நிகழ்ச்சியின் போது, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த கண்காட்சியை பிரதமர் தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். நினைவு தபால்தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த மருத்துவத் துறையில் இணைந்து ஆராய்ச்சி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஆயுஷ் அமைச்சகமும் கையெழுத்திட்டன
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் நோக்கிலும், பாரம்பரிய மருத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையிலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இடையே ஒருங்கிணைந்த மருத்துவத் துறையில் இணைந்து ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், மத்திய இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் ஆகியோர் முன்னிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்யா ஸ்ரீ ராஜேஷ் கோடேச்சா மற்றும் ஐசிஎம்ஆர் செயலாளர் டாக்டர் ராஜீவ் பால் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • தேசிய அளவில் முக்கியத்துவம் அளிக்கவேண்டிய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில், பொது சுகாதார ஆராய்ச்சி முயற்சிகளில் ஆயுஷ் அமைச்சகமும், ஐசிஎம்ஆரும் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. 
  • இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் இடையே ஒரு குழு உருவாக்கப்படும். இக்குழு காலாண்டுக்கு ஒருமுறை கூடி ஆராய்ச்சித் திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்த வேண்டும். 
  • மேலும் ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் மாநாடுகள், பட்டறைகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது

வரலாற்றில் இன்றைய நாள்

மே 11 – தேசிய தொழில்நுட்ப தினம்
11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஒவ்வொரு ஆண்டும் மே 11 அன்று தேசிய தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கிய பங்கை முன்னிலைப்படுத்தவும், அறிவியலை ஒரு தொழிலாக தேர்வு செய்ய மாணவர்களை ஊக்குவிக்கவும். இந்த நாளில் சக்தி, பொக்ரான் அணுகுண்டு சோதனை 11 மே 1998 அன்று நடைபெற்றது.

project 20230512 0913080 01

ENGLISH

11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The ambassadors of the three countries submitted their letters of appointment to the President
  • President Mrs Draupadi Murmu accepted the appointments of ambassadors from USA, Qatar and Monaco in a program held at the Presidential Palace today (May 11, 2023).
  • Profile of Consuls who submitted letters of appointment – Mr. Eric Garcetti, US Consul, Mr. Mohammed Hassan Jabir Al-Jabir, Consul of Qatar & Mr. Didier Kamerthinker, Consul of Monaco
Shanghai Cooperation Organization (SCO) Start-up Forum 2023
  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: After already holding two successful events on start-ups in virtual mode, Start-up India and Union Ministry of Commerce organized the third event live for the first time at the recently held Shanghai Cooperation Organization (SCO) Start-up Forum in New Delhi.
  • Government officials, private industry, and representatives of start-ups from Shanghai Cooperation Organization member countries attended. Mr. Som Prakash, Minister of State, Union Ministry of Commerce and Industry, gave a keynote address highlighting the role of start-ups in boosting the economy of a country.
  • Also, various delegates participated in a workshop organized by Start-up India on ‘Role of Bilateral and Multilateral Cooperation in Developing Start-up Ecosystem’.
  • It discussed developing closer ties between countries and improving the start-up environment in SEO countries.
  • Later, a delegation from SCO Member States visited the Foundation for Innovation and Technology Transfer at IIT Delhi.
  • Through this, they visited the ecosystem information about the Indian start-up system. During this tour, they got to know about the entrepreneurs of India and the opportunities to expand their businesses in India.
  • Earlier, Start-up India organized various initiatives for SEO member countries:
  • SEO Start-up Forum 2020: The SEO Start-up Forum laid the foundation for multi-stakeholder collaboration and engagement among SEO member countries.
  • SEO Start-up Forum 2021: A two-day forum held via video, at a dedicated platform reflecting Indian culture. SEO Start-up Hub launched in this forum.
  • Mentorship Program : To build capacity of SEO start-up founders, a 3-month long virtual mentoring program ‘Starting-up’ was organized for nominated start-ups.
MoU signed between Tamil Nadu Government and Hyundai in the presence of Chief Minister

  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Hyundai is going to invest Rs.20 thousand crores in Tamil Nadu. The MoU signing ceremony was held at a private star hotel in Raja Annamalaipuram, Chennai. The Memorandum of Understanding was exchanged in the presence of Chief Minister M. K. Stalin by Ve Vishnu, Chief Executive Officer of Tamil Nadu Government and Hyundai Company (India) Chief Executive Officer Unsoo Kim.
  • Labor Welfare Minister CV Ganesan, Industries Secretary S. Krishnan, Hyundai Corporate Affairs Executive Director DS Kim, Finance Division Vice President D. Saravanan, Corporate Affairs Co-President Puneeth Anand and others are present in this event.
  • Through the memorandum of understanding between the Tamil Nadu government and Hyundai, the factory will produce 1.78 lakh batteries per year, the construction of 100 electric vehicle charging stations on the highways in the next 5 years, the production capacity of the factory in Sriperumbudur will be increased to 8.50 lakh vehicles, and the production of electric vehicles has been carried out.

Tamil Nadu cabinet change for the 3rd time

  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: After 2 years of DMK rule in Tamil Nadu, the Cabinet has been reshuffled for the 3rd time. Sam Nassar, who was the dairy minister, was removed and replaced by Mannargudi MLA and DMK treasurer DR Balu’s son TRB Raja in the cabinet. The announcement was made on the 9th.
  • Governor RN Ravi administered the oath of office to TRP Raja as the new Minister in a program held at the Governor’s House, Chennai. Sam Nassar, who was the Minister of Dairying in the Tamil Nadu Cabinet, was removed and TRP Raja took charge as the new Minister. Consequently, some changes have been made in the responsibilities of the ministers.
  • Accordingly, DRP Raja, who has assumed responsibility as the new minister, has been assigned the industrial sector which was looked after by Minister Thangam.
  • Departments like Finance, Project and Human Resource Management, Pension and Retirement Benefits, Statistics, which were looked after by PDR Palanivel Thiagarajan, have been given gold to the Southern government. The Department of Archeology, where he was already present, has also been given an addition.
  • Minister Thangam Southern Government’s Tamil development and official language department of Tamil have been handed over to Information Minister MU P Saminathan.
  • The Information Technology Department, which was looked after by Minister T. Mano Thangaraj, has been given to BDR Palanivel Thiagarajan and the Dairy Department, which was looked after by Nasser, has been given to Mano Thangaraj.

Rs 30,000 crore loan to SHGs – MoU with State Bank of India

  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Under the guidance of the Tamil Nadu State Rural Livelihood Movement, a subsidiary organization of the Tamil Nadu Women’s Development Corporation for the Advancement of Women, self-help groups have been formed in all parts of the state and are functioning well.
  • In order to strengthen the economic self-reliance of the groups, a lot of credit assistance including bank credit links is being provided.
  • In this case, the financial report of the Tamil Nadu government for the year 2023-24 announced that Rs. 30 thousand crore bank loan will be given to self-help groups. To implement this, the Tamil Nadu State Rural Livelihoods Movement is taking appropriate steps to achieve the target of providing bank credit links to self-help groups and to provide quick bank credit links to self-help groups.
  • As part of this, a memorandum of understanding was signed yesterday between Tamil Nadu State Rural Livelihoods Movement and State Bank of India at Mother Teresa Women’s Campus Conference Hall, Nungambakkam, Chennai. It was signed by S. Divyadarsini, Managing Director of Tamil Nadu Women’s Development Corporation and Niraj Panda, General Manager of Vatta Bharat State Bank, Chennai.

Supreme Court’s Constitution bench ruling that the Government is more powerful than the Governor of Delhi

  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Law and order in the Union Territory of Delhi is under the control of the Union Home Ministry. Delhi is currently ruled by the Aam Aadmi Party led by Chief Minister Arvind Kejriwal. There were frequent conflicts between the government and the Lieutenant Governor of Delhi regarding the administration of the state.
  • In this regard, the Aam Aadmi Party filed a case in the Delhi High Court in 2015. The High Court heard this and in 2016 ruled in favor of the Governor. Against this verdict, the AAP government appealed to the Supreme Court.
  • In 2019, a two-judge bench gave a different verdict in the case. One judge ruled in favor of the government and another in favor of the lieutenant governor. Subsequently, the case was transferred to a 3-judge bench. The case was transferred to the Constitutional Bench of the Supreme Court in July last year on the request of the Central Government.
  • According to this, a bench of Chief Justice Chandra Chute, Justices MR Shah, Krishna Murari, Hima Goli and Narasimha heard the case.
  • Meanwhile, the “National Capital Territory of Delhi Government Amendment Act” was passed in Parliament in 2021. According to the new law, it is mandatory for the Delhi government to consult the Lt. Governor in any decision. After this, even the transfer of government officials required the approval of the Lt. Governor.
  • In this context, the Constitutional Bench headed by Chief Justice Chandrachud of the Supreme Court gave its verdict yesterday. It said: There is a difference between Delhi and other Union Territories. Delhi may not have statehood. But, there is legislative power. In a democracy, only the government elected by the people should have power.
  • Apart from matters like public order, police and land, all other powers rest with the elected Delhi government. IAS officers are bound by their respective Ministers.
  • Rather than the Lt. Governor of Delhi, the people’s elected government has full power. The Lieutenant Governor should act as per the instructions of the Delhi Government. Thus the Constitutional Court has ruled.

The Prime Minister inaugurated the program to mark the National Technology Day 2023 in New Delhi on May 11

  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Prime Minister Shri Narendra Modi inaugurated the program to mark National Technology Day 2023 at Pragati Maidan, New Delhi on May 11. The event was organized to coincide with the 25th anniversary of the National Technology Day from May 11 to 14. 
  • On the occasion, he laid the foundation stone for various science and technology development projects worth over Rs.5800 crore and dedicated the completed projects to the country. It is aimed at achieving the Prime Minister’s vision of a self-reliant India by strengthening the country’s scientific institutions.
  • Laying of foundation stone for Laser Interferometer Gravitational-Wave Observatory India (LIGO-India) at Hingoli, Homibaba Cancer Hospital and Research Center at Jadni, Odisha, Coral Building at Tata Memorial Hospital, Mumbai.
  • Fission Molybdenum-99 Manufacturing Company in Mumbai, Rare Earth Permanent Magnet Institute in Visakhapatnam, National Hadron Beam Therapy and Radiology Research Unit in Navi Mumbai, Women and Children Cancer Hospital building in Navi Mumbai, Homi Baba Cancer Hospital and Research Center in Visakhapatnam will be dedicated to the country.
  • During the event, the Prime Minister inaugurated an exhibition on the development of science and technology in India. He also issued a commemorative stamp and coin.

The Indian Council of Medical Research and the Ministry of AYUSH signed an MoU for collaborative research in the field of integrative medicine

  • 11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: With a view to strengthening the country’s health infrastructure and highlighting traditional medicine, an agreement was signed today between the Indian Council of Medical Research (ICMR) under the Union Ministry of Health and the Ministry of AYUSH for joint research in the field of integrated medicine. 
  • In the presence of Union Health and Family Welfare Minister Dr. Mansukh Mandaviya, Union AYUSH Minister Mr. Sarbananda Sonowal, Union Minister of State Dr. Bharati Pravin Pawar, NITI Aayog Member Dr. VK Pal, Union AYUSH Ministry Secretary Vaidya Shri Rajesh Kotecha and ICMR Secretary Dr. Rajeev Pal. They signed this agreement.
  • The agreement envisages exploring the possibility of collaboration between the Ministry of AYUSH and ICMR in public health research initiatives to treat diseases of national importance. As part of this agreement, a committee will be formed between the Ministry of AYUSH and ICMR. 
  • The committee should meet once in a quarter to formulate research plans and implement them. It is also planned to hold conferences, workshops and seminars with the participation of researchers interested in integrative medicine

DAY IN HISTORY TODAY

May 11 – National Technology Day
11th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: National Technology Day is observed on May 11 every year to highlight the important role of science in our daily lives and encourage students to choose science as a career. On this day Shakti, the Pokhran nuclear test took place on 11 May 1998.
error: Content is protected !!