TNPSC Group1 Mains Economy 2023 Questions Tamil and English
INDIAN ECONOMY – CURRENT ECONOMY TRENDS AND IMPACT OF GLOBAL ECONOMY ON INDIA
இந்தியப் பொருளாதாரம் – நடப்பு பொருளாதாரப் போக்கு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் தாக்கம்.
SECTION – A
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 150 words each.
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.
Each question carries ten marks.
iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any four questions out of five questions.
(4×10 = 40)
1) இந்தியாவின் தேசிய வளர்ச்சிக் குழுமம் (NDC) அதன் குறிக்கோள்களை அடைய எவ்வாறு செயல்படுகிறது?
In India how does the National Development Council (NDC) function in order to achieve its objectives?
2) தெற்காசிய மண்டல ஒத்துழைப்புச் சங்கமானது (SAARC) சில நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது எவ்வாறு அதன் நோக்கங்களை ஒட்டிச் செயல்பட்டு சில சாதனைகளை அடைந்தது என்பதை விவாதிக்கவும்.
“The South Asian Association for Regional Co-operation (SAARC) was established with certain objectives”. Discuss how it functioned in accordance with the objectives and elaborate its achievements?
3) வளர்ச்சிகுன்றிய நாடுகளில் வருமான சமத்துவமின்மையை குறைப்பதில் நிதி கொள்கையின் பங்கினை விளக்குக.
Explain the role of fiscal policy in reducing “Inequality of Income” in under – developed countries.
4) இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை ஆராய்க.
Analyse the weaknesses of Science and Technology Infrastructure in India.
5) இந்திய வேளாண்மை விலைக் கொள்கையை நிர்ணயிக்கும் காரணிகளை பற்றி விளக்குக.மேலும் அக்கொள்கையின் செயல்பாடு மற்றும் நிறைவேற்றத்தினை விளக்குக.
Explain the factors which influence the agricultural pricing policy in India. Also explain the functioning and implementation of this policy.
SECTION – B
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 250 words each.
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்.
Each question carries fifteen marks.
iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any four questions out of five questions.
(4×15 = 60)
6) பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விளக்குக.
What are the objectives of Monetary Policy? Explain the functions of the Reserve Bank of India.
7) தமிழ்நாட்டின் தொடர் பொருளாதார வளர்ச்சிக்கு, உலக முதலீட்டாளர்களின் சந்திப்பு-2019ன் வெற்றிவாய்ப்பினை ஆராய்க.
Examine the prospects of Global Investors Meet – 2019 for the sustained economic development of Tamil Nadu.
8) சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி தீர ஆய்க. (SEZs)
Critically Analyse the Special Economic Zones (SEZS)
9) பணவீக்கம் இடைவெளியை விளக்குக. மற்றும் எப்படி பணவீக்கம் இடைவெளியை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் விளக்குக.
Explain inflationary gap and also explain how can the inflationary gap be wiped out.
10) “இந்தியா வளர்ச்சியடையாத நாடு” இதை ஒப்புக் கொள்வீரா? இல்லையெனில் அதற்கான காரணங்களை தருக மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
“India is an Under-developed country” – Do you agree with this. If no, give reasons for it and describe the salient features of the Indian Economy.
Read Also