TNPSC Group1 Mains Social Issues 2023 Questions Tamil and English
SOCIAL ISSUES IN INDIA AND TAMILNADU
சமூக பொருளாதார போக்குகள் இந்தியா மற்றும் தமிழக அளவில்.
SECTION – A
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 150 words each.
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்
Each question carries ten marks.
iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any four questions out of five questions.
(4×10 = 40)
1) இந்தியாவில் பெண்களுக்கான குறைதீர்க்கும் முறைகளை ஆய்க.
Examine the Grievance Redressal mechanisms for women in India.
2) குழந்தை உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையமானது எந்த மாதிரியான செயல்களை கண்காணிக்கிறது?
What are the activities monitored by the National Commission for Protection of Child Rights (NCPCR)?
3) இந்தியாவில், அரசு சாரா நிறுவனங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எந்த திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்?
What are all the different types of schemes taken up by Non-Governmental Organizations to control population explosion in India?
4) இந்திய அரசியலமைப்பில் பெண்களுக்கான விதிகளை பற்றி விவரி.
Describe the constitutional provisions for women in India.
5) நக்சல் பாரி இயக்கத்தின் நோக்கங்களைக் கொணர்க.
Bring out the objectives of Naxal bari movement.
SECTION – B
NOTE:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 250 words each
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்
Each question carries fifteen marks.
ⅲ) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any four questions out of five questions.
(4×15 = 60)
6) குடும்ப வன்முறை தனிநபர் பிரச்சனையா அல்லது சமூகப் பிரச்சனையா? விவாதிக்க.
Is Domestic Violence a Private issue or a Social problem? Discuss.
7) இந்திய பொருளாதார கட்டமைப்பு வேலை வாய்ப்பை அதிகரிக்கிறதா – விவரி.
Does the structure of the Indian Economy promote employment opportunities – Discuss.
8) தற்கால இந்திய சமூகத்தில் கல்வியறிவு திட்டங்களின் பலம் மற்றும் பலவீனங்களை விளக்குக.
Explain the strengths and weaknesses of literacy Programmes in the contemporary Indian Society.
9) இந்தியாவில் பெண்கள் தகவல் மற்றும் செய்தி தொடர்பு தொழில்நுட்பத்தால் அதிகாரம் பெற்றுள்ளார்களா? பகுப்பாய்வு செய்க.
In India, are women empowered through Information and Communication Technology? Analyse.
10) இந்தியாவில் மத சிறுபான்மையினர் எதிர் கொள்ளும் முக்கியமான சமூகப் பிரச்சனைகளைப் பகுப்பாய்வு செய்க.
Analyse the major social problems faced by the Religious minorities in India.