துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது.
இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.
அவர்களுக்கான தேர்வு முடிவுகளை நீண்ட தாமதத்துக்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதை www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.
ஒரு பணியிடத்துக்கு 20 பேர் வீதம் 2,162 பட்டதாரிகள் தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். குரூப் 1 முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதையடுத்து முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக மே 8 முதல் 16-ம் தேதிவரை விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.
அதிலும் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு உரிய பணியிடங்கள் ஒதுக்கப்படும்.
தேர்வு முடிவை பார்ப்பது எப்படி?
TNPSC GROUP 1 EXAM RESULT 2023: டிஎன்பிஎஸ்சி-யின் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதன் முகப்புப் பக்கத்தில் TNPSC குரூப் 1 முடிவை பார்ப்பதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு திரையில் தோன்றும் படிவத்தில் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
சரியான தகவலை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
இந்த முடிவை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புகளுக்காக பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.