THAGAISAL TAMIZHAR AWARD 2023: தகைசால் தமிழர் 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

THAGAISAL TAMIZHAR AWARD 2023: தகைசால் தமிழர் 2023: தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் மற்றும் சிறந்த தமிழ் ஆளுமையை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

THOZHI HOSTEL 2023: தோழி தங்கும் விடுதிகள்

THAGAISAL TAMIZHAR AWARD 2023: தகைசால் தமிழர் 2023: அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ‘சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு’ ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 1962-இல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist – (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியரும், திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணிக்கு 2023-ம் ஆண்டுக்கான “தகைசால் தமிழர் விருது” வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

“தகைசால் தமிழர்” விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கி. வீரமணிக்கு, ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

THAGAISAL TAMIZHAR AWARD 2023

THAGAISAL TAMIZHAR AWARD 2023: தகைசால் தமிழர் 2023: In order to honor those who have contributed greatly to the development of Tamil Nadu and the Tamil nation and to honor the best Tamil personality, a new award named “Tagaisal Tamilar” is being given from the year 2021 by the Tamil Nadu government.

A consultative meeting of the committee constituted to select the awardee for this year was held at the Chennai Secretariat under the chairmanship of Chief Minister Stalin.

In that gathering, who engaged in public life at a young age, actively participated in social campaigns and protests conducted by father Periyar in support of ‘socially discriminated people’ and spent forty times in jail, took over as the editor of Vimithu Nali in 1962 and has been doing excellent work for 60 consecutive years.

It was unanimously decided to award “Tagaisal Tamilar Award 2023” to K. Veeramani, editor of Binju, The Modern Rationalist – (English) magazines and president of Dravidar Kazhagam.

Chosen for “Takaisal Tamil” award. Veeramani will be presented with a check of Rs 10 lakh and a certificate of appreciation by Chief Minister Stalin at the Independence Day function on August 15,” it said.

Earlier, this award was given to the senior leader of the Marxist Communist Party, N. Sankaraiah, and the senior leader of the Communist Party of India, Nallakannu.

error: Content is protected !!