5th August 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

5th August 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

5th August 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

5th August 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
5th August 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

5th August 2023 CURRENT AFFAIRS TNPSC – TAMIL

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் – நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 2021-ல் அகழாய்வுப் பணி தொடங்கியது.

இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டிவைத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை திறந்துவைத்தார்.

ஆதிச்சநல்லூரில் இரு இடங்களில் அகழாய்வு நடைபெற்ற குழிகளுக்கு மேல் கண்ணாடித் தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

6.4 லட்சம் கிராமங்களை இணைக்கும் பிராட்பேண்ட் சேவை திட்டத்துக்கு ரூ.1.39 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் , நாட்டில் 6.4லட்சம் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஆப்டிகல் பைபர் அடிப்படையிலான பிராட் பேண்ட் இணைப்பை வழங்குவதற்காக ரூ.1.39லட்சம் கோடி வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் தற்போது வரை சுமார் 1.94லட்சம் கிராமங்கள் பிராட் பேண்ட் இணைப்பை பெற்றுள்ளன. மீதமுள்ள கிராமங்கள் இன்னும் இரண்டரை ஆண்டுகளில் பிராட்பேண்ட் இணைப்பை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிராம அளவிலான தொழில்முனைவோர் உடன் இணைந்து அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஒரு பிரிவான பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் மூலமாக இது செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கான சோதனை திட்டத்தில் 60ஆயிரம் கிராமங்களில் 3.51லட்சம் இணைப்புக்களை வழங்குவதற்கு 3800 தொழில்முனைவோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஒரு மாதத்திற்கான இன்டர்நெட் நுகர்வானது ஒரு வீட்டிற்கு 175ஜிகாபைட் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் மற்றும் உள்ளூர் தொழில்முனைவோர் இடையே 50 சதவீத வருவாய் பகிர்வு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. மாதாந்திர பிராட் பேண்ட் திட்டமானது

ரூ.399ல் இருந்து தொடங்குகின்றது. அரசின் இந்த திட்டத்தின் மூலமாக 2.5லட்சம் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தரநிலைப்படுத்துதல் மற்றும் இணக்க மதிப்பீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 35 நிறுவனங்களுடன் இந்திய தர நிர்ணய நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

தேசிய தர நிர்ணய அமைப்பான இந்திய தர நிர்ணய நிறுவனம், தரநிலைப்படுத்துதல் மற்றும் இணக்க மதிப்பீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த நிறுவனங்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சில முக்கிய தேசிய தொழி்நுட்ப நிறுவனங்கள் (என்.ஐ.டி.) அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அடங்கும்.

தேசிய மற்றும் சர்வதேச நிலையில் தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து செயல்படுவது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு ஆதரவு, தரப்படுத்தல் மற்றும் இணக்க மதிப்பீடு குறித்த நிகழ்வுகளை கூட்டாக ஏற்பாடு செய்வது போன்றவற்றுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

உலக வில்வித்தையில் தங்கம் வென்று அதிதி சாதனை

ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 17 வயதான இந்திய வீராங்கனை அதிதி சுவாமி இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை எதிர்த்து விளையாடினார்.

இதில் அதிதி சுவாமி 149-147 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

அதிதி சுவாமி கடந்த ஜூலை மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார்.

தற்போது சீனியர் பிரிவில் அவர், உலக சாம்பியன்ஷிப்பில் வாகை சூடி உள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும், உலக அளவில் இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் அதிதி சுவாமி.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் – இந்திய அணிக்கு தங்கம்

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

இதில் விளையாடிய இந்திய அணியில் இடம்பிடித்த ஜோதி சுரேகா, அதீதி ஸ்வாமி, பர்னீத் கெளர் ஆகியோர், மெக்சிகோவின் டாஃப்னே குயின்டெரோ, அனா சோபியா ஹெர்னாண்டஸ் ஜியோன் மற்றும் ஆண்ட்ரியா பெசெரா ஆகியோர் இறுதிப்போட்டியில் வீழ்த்தினர்.

235-229 என்ற புள்ளி கணக்கில் இந்திய வெற்றி பெற்ற நிலையில், முதல் முறையாக உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளது.

5th August 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
5th August 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

Nirmala Sitharaman laid the foundation stone of a world-class museum at Adichanallur

Excavation work started in 2021 in Adichanallur Parambu area of Thoothukudi district. Nirmala Sitharaman laid the foundation stone for setting up a world-class museum here and inaugurated the site museum, which is the first in India.

A glass floor has been erected over the pits excavated at two places in Adichanallur and the objects found there have been displayed.

Rs 1.39 lakh crore allocation for broadband service project to connect 6.4 lakh villages: Union Cabinet approves

The Union Cabinet meeting was held in Delhi. In this meeting, the Cabinet approved Rs 1.39 lakh crore for providing optical fiber based broadband connectivity to 6.4 lakh rural households in the country.

About 1.94 lakh villages have been connected with broadband till now under Bharatnet programme. It is also said that dead villages will get broadband connectivity in two and a half years.

It is being implemented by Bharat Broadband Network Limited, a unit of state-owned BSNL in partnership with village-level entrepreneurs.

In this pilot project, 3800 entrepreneurs were engaged to provide 3.51 lakh connections in 60 thousand villages. Internet consumption per month was recorded at 175 gigabytes per household.

The scheme is implemented on a 50 per cent revenue sharing basis between BSNL and local entrepreneurs.

The monthly broadband plan starts from Rs.399. It is expected that 2.5 lakh jobs will be created through this scheme of the government.

Standards Institute of India has signed MoUs with 35 organizations to enhance cooperation in standardization and conformity assessment

Indian Standards Institution, the national standards body, has signed MoUs with 35 organizations across the country to promote collaboration in standardization and conformity assessment.

These institutes include some prominent National Institutes of Technology (NITs) government and private engineering colleges from various states across the country.

The MoU provides for collaboration of national and international technical groups, infrastructure support for research and development projects, joint organization of events on standardization and conformity assessment.

Aditi wins gold in world archery

The World Archery Championship is being held in Berlin, Germany. In the women’s compound individual category, 17-year-old Indian player Aditi Swamy played against Mexico’s Andrea Becerra in the final.

Aditi Swamy won the gold medal with a score of 149-147.

Aditi Swamy won the Junior World Championship in Ireland last July. Currently in the senior category, he is taking part in the World Championship.

With this, Aditi Swamy has set the record of becoming the first Indian player to win a gold medal in the individual category at the World Championships and the youngest player in the world.

World Archery Championship Series – Gold for Team India

The World Archery Championship series is being held in Berlin, Germany. Jyoti Sureka, Aditi Swamy and Barneeth Keller, who were part of the Indian team, defeated Mexico’s Daphne Quintero, Ana Sofia Hernandez Zion and Andrea Becerra in the final.

With a 235-229 scoreline, India won gold at the World Archery Championships for the first time.

 

வரலாற்றில் இன்றைய நாள்

முக்கியமான நாட்கள்

 

DAY IN HISTORY TODAY

 

IMPORTANT DAYS

error: Content is protected !!