NATIONAL SPORTS AWARD INDIA 2023 IN TAMIL
NATIONAL SPORTS AWARD INDIA 2023 IN TAMIL: விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா, அர்ஜுனா, துரோணாச்சார்யா, தயான் சந்த் உள்ளிட்ட விருதுகள் மத்திய அரசு வழங்கி கெளரவித்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி, தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுவதாக மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் 2ஆவது மிகப்பெரிய விருதாக கருதப்படுகிறது.
வைஷாலியின் சகோதரரும், இந்தியாவின் சிறந்த செஸ் வீரருமான பிரக்யானந்தாவுக்கு கடந்த ஆண்டு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு வைஷாலிக்கு அர்ஜூனா விருதும், அவரது பயிற்சியாளர் பி.ஆர். ரமேஷூக்கு துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வரும், ராக் சந்திரசேகர் ஷெட்டி மற்றும் ராங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு உயரிய மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
NATIONAL SPORTS AWARD INDIA 2023 IN TAMIL:இந்த விருதுகளை இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வரும் ஜனவரி 9ஆம் தேதி வழங்க உள்ளார். மொத்தம் இந்திய அளவில் பல்வேறு விதமான விளையாட்டுகளில் சாதனை புரிந்த 26 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் பெயர் பட்டியல்
- ஓஜஸ் பிரவின் டியோடலே – வில்வித்தை
- அதிதி கோபிசந்த் சுவாமி – வில்வித்தை
- ஸ்ரீசங்கர்.எம் – தடகளம்
- பருல் சவுத்ரி – தடகளம்
- முகமது ஹுசாமுதீன் – தடகளம்
- ஆர் வைஷாலி – சதுரங்கம்
- முகமது ஷமி – கிரிக்கெட்
- அனுஷ் அகர்வாலா – குதிரையேற்றம்
- திவ்யகிருதி சிங் – குதிரைச்சவாரி
- திஷா தாகர் – கோல்ப்
- கிரிஷன் பகதூர் பதக் – ஹாக்கி
- புக்ரம்பம் சுசீலா சானு – ஹாக்கி
- பவன் குமார் – கபடி
- ரிது நேகி – கபடி
- நஸ்ரீன் – கோகோ
- பிங்கி லவன் – பவுல்ஸ்
- ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் – துப்பாக்கி சூடு
- இஷா சிங் – துப்பாக்கி சூடு
- ஹரிந்தர் பால் சிங் சிந்து – ஸ்குவாஷ்
- அய்ஹிகா முகர்ஜி – டேபிள் டென்னிஸ்
- சுனில் குமார் – மல்யுத்தம்
- ஆன்டிம் – மல்யுத்தம்
- நெளரெம் ரோஷிபினா – வுஷீ
- ஷீத்தல் தேவி பாரா – வில்வித்தை
- இல்லூரி அஜய் குமார் ரெட்டி – பாரா கிரிக்கெட்
- பிராச்சி யாதவ் – பாரா கேனோயிங்
NATIONAL SPORTS AWARD INDIA 2023 IN ENGLISH
NATIONAL SPORTS AWARD INDIA 2023 IN ENGLISH: Every year, the central government honors those who excel in the field of sports with awards such as Kelratna, Arjuna, Dronacharya, Dayan Chand.
The Union Ministry of Youth Affairs and Sports announced today that 26 people including Indian cricketer Mohammad Shami and Tamil Nadu chess grandmaster Vaishali will be awarded the Arjuna Award. It is considered to be the 2nd largest award given in the sports industry.
Pragyananda, Vaishali’s brother and India’s greatest chess player, was awarded the Arjuna Award last year. In this situation, this year Vaishali was awarded the Arjuna Award and her coach P.R. Dronacharya Award has also been announced for Ramesh.
Rak Chandrasekhar Shetty and Rangritty Satvik Sai Raj have been conferred with the prestigious Major Dayan Chand Khel Ratna Award for outstanding contribution to the sport of badminton at the international level. The President of India Thirelapathi Murmu will present these awards on January 9.
NATIONAL SPORTS AWARD INDIA 2023 IN ENGLISH: Arjuna Award has been announced for 26 sportsmen and women who have achieved achievements in various sports at the Indian level.
List of their names
- Ojas Pravin Diodale – Archery
- Aditi Gopichand Swamy – Archery
- Sreesankar.M – Athletics
- Parul Chaudhary – Athletics
- Mohammad Hussamuddin – Athletics
- R Vaishali – Chess
- Mohammed Shami – Cricket
- Anush Agarwala – Equestrian
- Divyakriti Singh – Equestrian
- Disha Thagar – Golf
- Krishan Bahadur Pathak – Hockey
- Bukrama Susheela Sanu – Hockey
- Pawan Kumar – Kabaddi
- Ritu Negi – Kabaddi
- Nasreen – Coco
- Pinky Loven – Bowles
- Aishwari Pratap Singh Tomar – Firing
- Isha Singh – Shooting
- Harinder Pal Singh Sindhu – Squash
- Ayhika Mukherjee – Table Tennis
- Sunil Kumar – Wrestling
- Antim – wrestling
- Nelarem Roshibina – Vushi
- Sheetal Devi Para – Archery
- Illuri Ajay Kumar Reddy – Para Cricket
- Prachi Yadav – Para Canoeing