NAMMALVAR AWARD 2023 – 2024 | 2023-24ம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது

Photo of author

By TNPSC EXAM PORTAL

NAMMALVAR AWARD 2023 – 2024: 2023-2024-ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும் கைகொடுக்கும் மூன்று அங்கக விவசாயிகளுக்கு சிறந்த அங்கக விவசாயிகளுக்கான “நம்மாழ்வார் விருதுடன்” பரிசுத்தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை வழங்க மூன்று விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

கோ.சித்தர், மகர் நோன்புச்சாவடி, தஞ்சாவூர் மாவட்டம் முதல்பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம், கே.வெ.பழனிச்சாமி, பொங்கலூர், திருப்பூர் மாவட்டம் இரண்டாம் பரிசாக ரூ. 1.5 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் மற்றும் கு. எழிலன், அச்சுக்கட்டு கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் பரிசாக ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!