ILAKKIYA MAMANI AWARD 2022 & 2023 | 2022 & 2023ம் ஆண்டு இலக்கியமாமணி விருது

Photo of author

By TNPSC EXAM PORTAL

ILAKKIYA MAMANI AWARD 2022 & 2023: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பன்னூறாண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு இயங்கி வரும் தமிழுக்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தொண்டாற்றும் தமிழ் தாயின் அறிஞர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் மரபுதமிழ், ஆய்வு தமிழ், படைப்பு தமிழ் போன்ற வகைப்பாட்டில் இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் 5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்க பதக்கம், தகுதி உரை போன்றவையும் வழங்கப்படுகிறது. 

கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அரங்க. ராமலிங்கம், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோதண்டம். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த முனைவர் சூரியகாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமனி விருதிற்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் மரபுத்தமிழ், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் ஆய்வு தமிழ், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிஞர் நடராஜன் படைப்பு தமிழ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!