MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES 2023: முதுமொழிக்காஞ்சி

Photo of author

By TNPSC EXAM PORTAL

MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES: முதுமொழிக்காஞ்சி: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

முதுமொழிக்காஞ்சி

  • MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES: முதுமொழிக்காஞ்சி ஆசிரியர் – மதுரைக் கூடலூர் கிழார்.
  • பிறந்த ஊர் – கூடலூர்
  • சிறப்பு – இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோளாகக் கையாண்டுள்ளார்கள்.
  • காலம் – சங்க காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்.

MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES 5

நூல் குறிப்பு

  • MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES: முதுமொழிக்காஞ்சி முதுமொழி = மூத்தோர் சொல், காஞ்சி = மகளிர் இடையணி
  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.
  • முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று. அது “கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முறைமை” என்னும் துறை என்று விளக்கப்பட்டுள்ளது.
  • To Know More About – Palli Vilum Palan in Tamil
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
  • அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
  • இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய மருவியகாலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.
  • பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள் உள்ளன.
  • இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.
  • பாவகை = குறள் தாழிசை
  • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது. அடுத்து ஓரடிப் பாடல்கள் பத்து ஒவ்வொன்றிலும் தாழிசை போல அடுக்கி வருகின்றன. இதன் பாடல்கள் குறள்வெண்பா செந்துறை என்ற யாப்பால் ஆனவை.
  • குறட்டழிசை, நிலையாமை பற்றி கூறும் நூல்
  • சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப் பத்து, துவ்வாப் பத்து, அல்ல பத்து, இல்லைப் பத்து, பொய்ப் பத்து, எளிய பத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப் பத்து.
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்

MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES 2

வேறு பெயர்

  • MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES: முதுமொழிக்காஞ்சி அறவுரைக்கோவை
  • ஆத்திச்சூடியின் முன்னோடி

MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES 4

சொற்பொருள்

  • MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES: முதுமொழிக்காஞ்சி ஆர்கலி – நிறைந்த ஓசையுடைய கடல்
  • காதல் – அன்பு, விருப்பம்
  • மேதை – அறிவு நுட்பம்
  • வண்மை – ஈகை, கொடை
  • பிணி – நோய்
  • மெய் – உடம்பு

MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES 3

மேற்கோள்கள்

MUTHUMOZHI KANCHI TNPSC POTHU TAMIL NOTES: முதுமொழிக்காஞ்சி

  1. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

    ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை

  • ஆர்கலி – கடல்
  • ஓதலின் – கற்றலைப் பார்க்கிலும்
  • ஓசையினை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஒழுக்கத்துடன் இருப்பது சிறந்ததாகும்.
  1. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்
  • காதலின் – பிறரால் அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும்
  • சிறந்தன்று – சிறப்புடையது
  • பிறர் அன்பு பாராட்டும்படி நடத்தலை விட அவர் மதிக்கும்படி நடத்தல் மேலானது.
  1. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை
  • கற்றது – கற்ற பொருளை
  • மறவாமை – மறவாதிருத்தல்
  • புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதை விட கற்றதை நினைவில் வைத்திருப்பது மேலானது.
  1. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை
  • வண்மையின் – வளமையோடிருத்தலை விட
  • செல்வத்தினும் சிறப்புடையது உண்மை வாழ்க்கையாகும்.
  1. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை
  • மெய் – உடம்பு
  • பிணி இன்மை – நோயில்லாமலிருத்தல்
  • நோயில்லாமல் இருத்தல் இளமையினும் சிறப்பானது.
  1. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று
  • நலன் உடமையின் – அழகுடைமையை விட
  • நாணு – நாணமுடைமை
  • அழகைக் காட்டிலும் வெட்கம் சிறப்பானது.
  1. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று
  • குலன் உடைமையின் – நல்ல குணத்தையுடைமை யினும்
  • கற்பு – கல்வியுடைமை
  • உயர்ந்த குலத்தைக் காட்டிலும் கல்வி மேன்மையானது
  1. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
  • கற்றாரை – கற்ற பெரியாரை
  • வழிபடுதல் – போற்றியொழுகுதல்
  • கற்றலை விடக் கற்றாரை வழிபட்டொழுகுதல் மேலானது.
  1. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று
  • செற்றாரை – பகைவரை
  • செறுத்தலின் – வெல்லுவதைவிட
  • பகைவரை வெல்லுவதைவிட தன்னை மேம் படுத்திக் கொள்வது சிறப்பானது.
  1. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று – மதுரைக் கூடலூர் கிழார்
  • முன் பெருகலின் – முன்பு பெருகிப் பின் அழிதலைக் காட்டிலும்
  • சிறுகாமை – நின்ற நிலையில் குறையாதிருத்தல்
  • செல்வம் பெருகி அழிவதைவிட, பெருகாமல் நிலையாக இருத்தல் நன்று.
error: Content is protected !!