INSURANCE SCHEME FOR KHARIF SEASON: காரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்

Photo of author

By TNPSC EXAM PORTAL

INSURANCE SCHEME FOR KHARIF SEASON IN TAMIL

INSURANCE SCHEME FOR KHARIF SEASON: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நிகழாண்டுக்கான (2015) காரீஃப் பருவத்துக்கான தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் இந்திய வேளாண்மைக் காப்பீடு நிறுவனத்தின் மூலம் அமல்படுத்தப்படுகிறது.

காரீஃப் பருவத்தில் 20 பயிர்களுக்கு வேளாண் காப்பீடு வழங்கப்படுகிறது. கார், குறுவை, சொர்ணவாரி நெல், சம்பா, தாளடி, பிசானம் நெல் வகைகள், கம்பு, சோளம், ராகி, மக்காச் சோளம், துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, வெங்காயம், மஞ்சள், வாழை, குச்சி பயிற்சி (மர வள்ளி), உருளை, அன்னாசி, கரும்பு ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு பிரிமியம் செலுத்தும் வகையில் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.

அந்தப் பயிருக்கான விதைப்பு, நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் காப்பீடு செய்து கொள்ள முடியும். கம்பு, சோளம், ராகி, மக்காச் சோளம், துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, உருளை, வெங்காயம், அன்னாசிப்பழம், மஞ்சள், வாழை, மரவள்ளி பயிர்களுக்குக் காப்பீடு திட்டத்தில் சேர கடைசி நாள் 15.9.2015 அல்லது அப்பயிருக்கான விதைப்பு, நடவு ஒரு மாத காலத்திற்குள் இருப்பின் (எது முந்தையதோ) காப்பீடு செய்துகொள்ளலாம்.

சம்பா, தாளடி பிசானம் கரும்புப் பயிர்களுக்கு காப்பீடு திட்டத்தில் சேர கடைசி நாள் 15.12.2015 அல்லது அந்தப் பயிருக்கான விதைப்பு, நடவு ஒரு மாத காலத்துக்குள் இருப்பின் (எது முந்தையதோ) காப்பீடு செய்து கொள்ளலாம். இந்தக் கூடுதல் மதிப்பீட்டுக்கான பிரிமியத் தொகையை பயிர் கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் செலுத்தலாம்.

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌

பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் பிரிமியத்தை செலுத்த சிட்டா அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெறப்பட்டு முன்மொழிவுப் படிவத்துடன் அவரவர் தாங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் செலுத்த வேண்டும்.

பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர் கடன் பெறும் வங்கியிலேயே இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். முன்மொழிவு படிவங்களை அருகில் உள்ள வேளாண் துறையிலோ, கூட்டுறவு, வர்த்தக வங்கியிலோ கேட்டு பெறலாம்.

INSURANCE SCHEME FOR KHARIF SEASON: ஒவ்வொரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியம், பிர்காவிலும் மாநில அரசின் விவசாயத் துறையினால் பயிர் அறுவடை காலத்தில் பயிர் அறுவடை சோதனைகள் நடத்தப்பட்டு நடப்பு பருவத்தின் சாரசரி மகசூலை கடந்த 3 அல்லது 5 ஆண்டுகால உத்திரவாத மகசூலோடு ஒப்பிடும்போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி வட்டாரத்தில் உள்ள காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அவரவர் தொகைக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும்.

INSURANCE SCHEME FOR KHARIF SEASON IN ENGLISH

INSURANCE SCHEME FOR KHARIF SEASON: The National Agricultural Insurance Scheme for the current year (2015) Kharif season is being implemented by the Agricultural Insurance Corporation of India for all districts in Tamil Nadu.

Agricultural insurance is provided for 20 crops during Kharif season. Varieties of Kar, Kurvai, Sornavari Paddy, Samba, Taladi, Bisanam Paddy, Rye, Sorghum, Ragi, Maize, Duvari, Gram, Green gram, Groundnut, Sesame, Sunflower, Cotton, Onion, Turmeric, Banana, Stick Training (wood ), the crop is insured on a premium per acre basis for sugarcane, pineapple and sugarcane.

Sowing of that crop can be insured if it is within one month of planting. 15.9.2015 is the last date to enroll in the insurance scheme for crops such as rye, sorghum, ragi, maize, sorghum, gram, green gram, groundnut, sesame, sunflower, cotton, millet, onion, pineapple, turmeric, banana, cassava or sowing, planting a Insure within the month period (whichever is earlier).

The last date to join the insurance scheme for Samba, Thaladi Bisanam sugarcane crops is 15.12.2015 or if the sowing and planting of the crop is within one month (whichever is earlier). This additional assessment premium can be paid by non-crop loan farmers at their discretion.

Farmers who have not availed crop loan should pay the premium in their savings account bank along with the proposal form along with a certificate from the Chita Andangal or Village Administrative Officer. Farmers availing crop loan will be included in this scheme at the same bank from which they are availing crop loan.

INSURANCE SCHEME FOR KHARIF SEASON: Proposal forms can be obtained from the nearest Agriculture Department, Co-operative or Commercial Bank. In every selected Union, Birkha, the State Government Agriculture Department conducts crop harvest tests during the harvest season and compensates all the insured farmers in the area according to the proportion of the current season’s average yield compared to the guaranteed yield of the last 3 or 5 years.

error: Content is protected !!