KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்‌ திட்டம்‌

Photo of author

By TNPSC EXAM PORTAL

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: தமிழக சட்டமன்ற வரலாற்றில்‌ முதன்முறையாக கடந்த 2021-22 ஆம் ஆண்டில்‌ தாக்கல்‌ செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில்‌ கிராம அளவில்‌ ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும்‌ நோக்கத்தில்‌ கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித் திட்டம்‌ எனும்‌ மாபெரும்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டது.

திட்டத்தின்‌ நோக்கங்கள்‌

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ பத்தாண்டு கால தொலைநோக்குத்‌ திட்டத்தில்‌ அறிவிக்கப்பட்டுள்ளதைத்‌ தொடர்ந்து, தமிழ்நாட்டின்‌ நிகர சாகுபடிப் பரப்பினை 11.75 இலட்சம்‌ எக்டேர்‌ உயர்த்துவதற்கு, 12525 கிராம ஊராட்சிகளிலும் உள்ள தரிசு நிலங்களைக் கண்டறிந்து, பாசன நீர்‌ ஆதாரங்களை உருவாக்கி சாகுபடிக்குக்‌ கொண்டு வருவதுடன்‌, வேளாண்மை-உழவர்‌ நலத்துறையுடன்‌ ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு உழவர்‌ நலன்‌ சார்ந்த துறைகள்‌ செயல்படுத்தும்‌ திட்டங்களையும்‌ ஒருங்கிணைத்து அனைத்து கிராமங்களிலும்‌, ஒட்டுமொத்த வேளாண்‌ வளர்ச்சியும்‌, அதன்‌ மூலம்‌ தன்னிறைவும்‌ அடைவதே இத்திட்டத்தின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

கிராமங்கள்‌ தேர்வு

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: ஒவ்வொரு ஆண்டும்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித் துறையின்‌ அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்‌ திட்டம்‌ செயல்படுத்தும்‌ கிராமங்களில்‌, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஒருங்கே செயல்படுத்துவதற்கு வேளாண்மை-உழவர்‌ நலத்‌ துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

AGNEEPATH SCHEME IN TAMIL: அக்னிபத் திட்டம்

2021-22 ஆம்‌ ஆண்டில்‌ 1997 கிராம பஞ்சாயத்துக்களும்‌, நடப்பு 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ 3204 கிராம பஞ்சாயத்துக்களும்‌ தேர்வு செய்யப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு கிராமத்திற்கும்‌ பொறுப்பு அலுவலர்‌ நியமனம்

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: கிராம அளவில்‌ இத்திட்டப்‌ பணிகளை இதரத்‌ துறைகளுடன்‌ ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக ஒவ்வொரு கிராமப்‌ பஞ்சாயத்துக்கும்‌ ஒரு பொறுப்பு அலுவலர்‌ நியமிக்கப்பட்டுள்ளனர்‌. இது தொடர்பான கூடுதல்‌ விபரங்களுக்கு அந்தந்த கிராமப்‌ பஞ்சாயத்து பொறுப்பு அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்‌.

இதரப்‌ பணிகள்

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: திட்டக் கிராமங்களில்‌ உள்ள ஏரி, குளம்‌, வரத்து கால்வாய்களை தூர்வாருதல்‌, பண்ணைக்குட்டைகள்‌ அமைத்தல்‌, ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்குத் தனிப்பட்ட முறையில்‌ மின்‌ இணைப்புடன்‌ ஆழ்துளைக்‌ கிணறு அமைத்தல் போன்ற பணிகளும்‌ 100 சதவீத மானியத்தில்‌ மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்ட கிராமப்‌ பஞ்சாயத்துக்களில்‌ உள்ள விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகள்‌, பயறு விதைகள்‌, தெளிப்பான்கள்‌, வீட்டுத்‌ தோட்டம்‌ அமைக்க காய்கறி விதைத்‌ தொகுப்புகள்‌, தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத்தொகை, பழக்கூடைகள்‌ மற்றும்‌ ட்ரம்‌, பழச்செடிகள்‌ மற்றும்‌ மரக்கன்றுகள்‌ அடங்கிய தொகுப்புகளும்‌ மானியத்தில்‌ விநியோகிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம்‌ கட்ட திட்டச்‌ செயல்பாடு

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN TAMIL: 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ இத்திட்டம்‌ 3204 கிராம பஞ்சாயத்துகளில்‌ செயல்படுத்திட கிராமங்கள்‌ தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத்‌ தொகுப்பு அமைத்தல்‌ உள்ளிட்ட ஆரம்ப கட்டப்‌ பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN ENGLISH

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN ENGLISH: For the first time in the history of the Tamil Nadu Legislative Assembly, in the agricultural financial report filed in the last year 2021-22, a grand project called the All Village Integrated Agricultural Development Project was introduced with the aim of achieving overall development at the village level.

Objective

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN ENGLISH: Following the announcement of the Hon’ble Chief Minister in his ten-year vision plan, to increase the net cultivated area of Tamil Nadu by 11.75 lakh hectares, identify waste lands in 12525 village panchayats, create irrigation water sources and bring them to cultivation, and various farmer welfare departments including the Agriculture-Farmer Welfare Department and the Rural Development Department. Implementation plans The main objective of the scheme is to achieve overall agricultural development and thereby self-sufficiency in all the villages.

Selection of villages

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN ENGLISH: Every year, the Department of Agriculture-Farmers Welfare is taking steps to implement all the village integrated agricultural development projects of the artist in all the villages under the Grama Anna Revival Program of the Department of Rural Development and Panchayats.

In the year 2021-22, 1997 Gram Panchayats and in the current year 2022-23 3204 Gram Panchayats have been selected and work is in progress.

Appointment of responsible officer for each village

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN ENGLISH: A responsible officer has been appointed for each Gram Panchayat to carry out the project work at the village level in coordination with other departments. For more details in this regard, you can contact the respective Gram Panchayat in-charge officers.

Other works

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN ENGLISH: Works like digging of lakes, ponds, irrigation canals, construction of farm plots, bore wells with electricity connection for Adi Dravida and tribal farmers in the project villages are also carried out with 100 percent subsidy.

Coconut saplings, lentil seeds, sprinklers, vegetable seed kits for home garden, incentives for horticulture cultivation, fruit baskets and drums, kits containing fruit trees and saplings have also been distributed to the farmers in the scheme gram panchayats.

Phase II project activity

KALAIGNAR ALL VILLAGE INTEGRATED AGRICULTURAL DEVELOPMENT PROGRAM IN ENGLISH: In the year 2022-23, villages have been selected to implement this scheme in 3204 Gram Panchayats and initial phase works including setting up of waste land collection are underway.

error: Content is protected !!