HOW TO STUDY TNPSC CURRENT AFFAIRS – TNPSC EXAM PORTAL

Photo of author

By TNPSC EXAM PORTAL

HOW TO STUDY TNPSC CURRENT AFFAIRS – TNPSC EXAM PORTAL

2019 வருடத்திற்கு முன்பு நடப்பு நிகழ்வுகளில் இருந்து மட்டும் நேரடியாக 15 முதல் 38 வினாக்கள் வரை கேட்கப்பட்டது உண்டு.

பழைய (2015 to 2018) டிஎன்பிஎஸ்சி குரூப் 1 வினாத்தாளில், 30 வினாக்களுக்கும் மேற்பட்ட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

தற்போது நடப்பு நிகழ்வுகள் ஆனது, டிஎன்பிஎஸ்சி தேர்வில் 8 முதல் 15 வினாக்கள் கேட்கப்படுகிறது.

எந்த ஒரு போட்டித் தேர்வாக இருந்தாலும் நடப்பு நிகழ்வுகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அது முதல் நிலை தேர்வினை எதிர்கொள்ளவும் மற்றும் முதன்மை தேர்வினை எதிர்கொள்ளவும் பயன்படுகிறது.

போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்,

எத்தனை மாதங்களுக்கு நடப்பு நிகழ்வுகள் படிக்க வேண்டும்?

போட்டித் தேர்வில் கேட்கப்படும் நடப்பு நிகழ்வுகளை நாம் வரையறுக்க முடியாது. இதுவரை டிஎன்பிஎஸ்சி வினாத்தாளில் கேட்கப்பட்ட நடப்பு நிகழ்வு சார்ந்த கேள்விகளை வைத்து குறைந்தது முதல்நிலை தேர்விற்கு 6 மாதம் முதல் 12 மாதம் வரை படிப்பது நல்லது.

அதே முதன்மை தேர்வாக இருந்தால், குறைந்தது 8 மாதம் முதல் 16 மாதம் வரை படிப்பது நல்லது.

இன்றைய சூழலில் போட்டித் தேர்வுகள் நடப்பு நிகழ்வுகள் படிக்க வேண்டுமென்று,

எதை படிக்க வேண்டும்,எதை படிக்க கூடாது என்று தெரியாமல் எண்ணற்ற சமூக வலைதளங்களை தேர்வர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாகவே அவர்களுக்கு படிப்பதற்கு நீண்ட நேரம் செலவாகிறது.

இதனால் அவர்கள் பொது அறிவு, கணிதம் மற்றும் பொதுத்தமிழ் பாடங்களை சரியாக படிக்காமல் மற்றும் பயிற்சி செய்யாமல் தங்களது வெற்றி வாய்ப்பினை தவற விடுகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி நமக்கு கொடுத்திருக்கும் சிலபஸை வைத்து நடப்பு நிகழ்வுகளை நீங்களாகவே கூட தயார் செய்து படிக்கலாம்.

How to take own Current Affairs Notes

முதலில் நாம் நமது நடப்பு நிகழ்வுகள் சிலபஸை பார்க்கவேண்டும். பின்பு அதில் Static and Dynamic சிலபஸை Mark செய்ய வேண்டும். பின்பு அந்த சிலபஸை வைத்துக்கொண்டு அதை வேறுபட்ட கண்ணோட்டங்களில் பார்க்க வேண்டும். அதாவது அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக மற்றும் பொருளாதார ரீதியாக…..

Nature of Content 

  1. Static (Objective / Fact)  – புறநிலை / உண்மை
  1. Dynamic (Subjective / Changes by time) – அகநிலை / எண்ணஞ்சார்ந்த

Perspectives – கண்ணோட்டங்கள் 

  • Political – அரசியல் ரீதியான
  • Economic – பொருளாதார ரீதியான
  • Social – சமுக ரீதியான

Newspaper Reading

Reading Areas – Place/Organization/Person/Terms

நியூஸ் பேப்பரில் நடப்பு நிகழ்வுகள் சார்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை ஒருங்கிணைத்து தலைப்புகளை தொகுத்து கொடுத்துள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.

What not to read

  •  Political Parties and Persons
  •  Crime reports

Current Affairs Sources

Newspaper – Hindu / Dinamani

Internet Sources 

Press information Bureau Website  – https://www.pib.gov.in

Map/World Atlas

CONSOLIDATED TOPICS FOR TNPSC EXAMS – TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 AND 2A AND GROUP 4,VAO EXAMS

CONSOLIDATED CURRENT AFFAIRS TOPICS 

ஒருங்கிணைக்கப்பட்ட நடப்பு நிகழ்வுகளின் தலைப்புகள்

  1. National Events
  2. International Events
  3. Economics
  4. Science & Technology
  5. History & Culture
  6. Environment & Bio Diversity
  7. Sports
  8. Appointments
  9. Awards
  10. Person in News
  11. Important Days
  • What – என்ன?
  • When – எப்பொழுது?
  • Where – எங்கே?
  • Who – யார்?
  • Which – எது?
  • Why – ஏன்?
  • How – எப்படி?

இதனடிப்படையில் கீழ்கண்ட நடப்பு நிகழ்வுகளின் தலைப்புகளைப் படிக்க வேண்டும்.

உதாரணமாக, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்.

மத்திய அரசின் திட்டங்கள் என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட ஒரு திட்டம் – பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

இந்தத் திட்டத்தில் நீங்கள் படிக்க வேண்டியது,

  1. இந்தத் திட்டம் எப்பொழுது தொடங்கப்பட்டது ?
  2. எந்த வருடம் தொடங்கப்பட்டது?
  3. ஏன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது?
  4. எந்த அமைச்சகத்தின் கீழ் வருகிறது?
  5. இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?
  6. எதன் அடிப்படையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது?

மேற்கண்ட கேள்விகளுக்கு தகவல்களை சேகரித்து நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும்.

National Events – தேசிய நிகழ்வுகள்

  • Central Government Schemes and Programmes – மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
  • Issues & Debates pertaining for some period in a month – முக்கிய நிகழ்வு,அன்றாடம் செய்திகளில் தொடர்ந்து வரும் தகவல்களை படிக்க வேண்டும்.
  • Major events in other states – பிற மாநிலங்களில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள்
  • Supreme Court Judgements – நீதிமன்ற தீர்ப்புகள்

International – சர்வதேச நிகழ்வுகள்

  • Foreign Visits and Foreign Visitors (Prime Minister and President) – நாட்டுத்தலைவர்களின் வெளிநாட்டு பயணங்கள்
  • Events in Neighbouring countries – அண்டை நாடுகளின் நிகழ்வுகள்
  • Major events in other countries – பிற நாடுகளின் முக்கிய நிகழ்வுகள்

Eg: Elections, Military Coup – தேர்தல்கள், ராணுவ ஆட்சி, பேரிடர்கள்…

  • India’s relations with Neighbours and P5 countries – இந்தியாவின் அண்டை மற்றும் P5 நாடுகளுடனான உறவுகள்
  • International Organizations, Summits, Conferences and Treaties – பன்னாட்டு அமைப்புகள்,உடன்படிக்கைகள், உச்சி மாநாடுகள்,சர்வதேச ஒப்பந்தங்கள்

Economy – பொருளாதாரம்

  • Budget, Taxation – நிதி அறிக்கை, வரி சார்ந்த தகவல்கள்
  • Financial Institutions – நிதி அமைப்புகள்
  • Inflation, RBI related issues, Monetary Policy – பணவீக்கம், ரிசர்வ் வங்கி சார்ந்த தகவல்கள், பணம் மற்றும் கடன் கொள்கைகள்
  • Foreign Direct Investments and Areas – அந்நிய நேரடி முதலீடு
  • MNCs and Chiefs – நிறுவனங்கள் மற்றும் அதன் தலைவர்கள்

Reports, Census, Surveys and Index – அறிக்கைகள், கணக்கெடுப்பு, தரப்பட்டியல், ஆய்வறிக்கைகள்

  • Human Development Index – மனிதவள மேம்பாட்டு தரவரிசை
  • Finance Commission Report – நிதி ஆணைய அறிக்கை

Environment and Disasters – சுற்றுச்சூழல் மற்றும் பேரிடர்கள்

  • Bio Diversity – பல்லுயிர் சார்ந்த தகவல்கள்
  • Pollution – மாசு
  • Earthquake – நிலநடுக்கம்
  • Cyclones – புயல்கள்

Science and Technology – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

  • Discoveries and Inventions – கண்டுபிடிப்புகள்
  • Vaccines – தடுப்பு மருந்துகள்
  • Space – விண்வெளி சார்ந்த தகவல்கள்

History and Culture – வரலாறு மற்றும் கலாச்சாரம்

  • Anniversaries – பண்டிகைகள்
  • Commemorations – நினைவு நாட்கள்
  • Excavations – அகழ்வாராய்ச்சி
  • Monuments – நினைவு சின்னங்கள்

Sports – விளையாட்டுகள்

  • Sports Personalities – விளையாட்டு வீரர்கள்
  • Internationally recognized events – சர்வதேச போட்டிகள்
  • Tamilan’s and Indian’s achievements – தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் சாதனைகள்

Person in News – முக்கிய நபர்கள்

  • Achievements, Death – சாதனைகள், இறப்பு
  • Prominent persons – பிரபலங்கள்
  • Tamil people and Tamil origin – தமிழர்கள் மற்றும் தமிழ் வம்சாவளி
  • Indians and Indian Origin – இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளி

Appointments and Committees – நியமனங்கள் மற்றும் குழுக்கள்

  • Chief Election Commissioner – தலைமை தேர்தல் ஆணையர்
  • CJI – தலைமை நீதிபதி
  • Finance Commission – நிதி ஆணையம்

Eg: Bibek Debroy Committee for restructuring Indian Railways

Awards – விருதுகள்

  • International Level, National Level and Tamil nadu State Awards – சர்வதேச, தேசிய மற்றும் மாநில விருதுகள்
  • Artists – கலைஞர்கள்
  • Writers – எழுத்தாளர்கள்
  • Environmentalists – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
  • Scientists – விஞ்ஞானிகள்
  • Social Services – சமூக சேவகர்கள்

Books and Authors – புத்தகங்கள் மற்றும் எழுத்தாளர்கள்

  • Prominent Author’s works – பிரபலமானவர்களின் புத்தகங்கள்
  • Recently awarded author’s books – விருது வாங்கிய புத்தகங்கள்

TNPSC CURRENT AFFAIRS – TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 AND 2A AND GROUP 4,VAO EXAMS

TNPSC GROUP 1 PRELIMS EXAM

UNIT – II CURRENT EVENTS 

HISTORY 

  • Latest diary of events
  • National
  • National symbols
  • Profile of States
  • Defence, national security and terrorism
  • World organizations – Pacts and Summits
  • Eminent persons and places in News
  • Sports and games
  • Books and authors
  • Awards and Honours
  • Cultural panorama
  • Latest historical events
  • India and its neighbours
  • Latest terminology
  • Appointments – who is who?

POLITICAL SCIENCE 

  • India’s foreign policy
  • Latest court verdicts
  • public opinion
  • Problems in conduct of public elections Political parties and political system in India
  • Public awareness and General administration
  • Role of Voluntary organizations & Govt.
  • Welfare oriented govt. schemes, their utility

GEOGRAPHY

  • Geographical landmarks
  • Policy on environment and ecology

ECONOMICS 

  • Current socio – economic problems
  • New economic policy & govt. sector

SCIENCE

  • Latest inventions on science and technology
  • Latest discoveries in Health Science
  • Mass media and communication

TNPSC GROUP 1 MAINS EXAM 

HISTORY – PAPER 1 – UNIT 1

Latest diary of events: 

  • National and International
  • National symbols
  • Eminent personalities and places in news Sports and Games
  • Books and Authors
  • Awards and Honours
  • Cultural panorama
  • Latest historical events
  • Latest terminology
  • Appointments – who is who?

TNPSC GROUP 2 PRELIMS EXAM

UNIT – II CURRENT EVENTS 

HISTORY 

  • Latest diary of events
  • National symbols
  • Profile of States
  • Eminent persons and places in News
  • Sports and games
  • Books and authors

POLITICAL SCIENCE 

  • Political parties and political system in India
  • Public awareness and General administration
  • Welfare oriented government schemes and their utility, Problems in Public Delivery Systems

GEOGRAPHY

  • Geographical landmarks

ECONOMICS 

  • Current socio – Economic Issues

SCIENCE

  • Latest inventions in science and technology

TNPSC GROUP 4 EXAM

UNIT – II CURRENT EVENTS 

HISTORY 

  • Latest diary of events
  • National symbols
  • Profile of States
  • Sports and games
  • Eminent persons and places in News
  • Books and authors

POLITICAL SCIENCE 

  • Welfare Scheme of government
  • Political parties and political system in Tamil Nadu and India.

GEOGRAPHY

  • Geographical landmarks

ECONOMICS 

  • Current socio – Economic Issues

SCIENCE

  • Latest inventions in science and technology

 

READ ALSO,

Gupta Dynasty – tnpsc online test 2

error: Content is protected !!