ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏலாதி
- ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஏலாதி
- இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எணபத்தொரு வெண்பாக்களை கொண்டுள்ளது.
- நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
- இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
- ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம் சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
To Download TNPSC Current Affairs
- இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும்.
- அதுபோல இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
- பாயிரம் – 1, தற்சிறப்பாயிரம் – 1, பாடல்கள் – 80
- பாவகை = வெண்பா
- உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
ஆசிரியர் குறிப்பு
- ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: ஏலாதியை இயற்றியவர் கணமேதாவியார்.
- இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
- இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
- இவர் ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறார்.
- இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
- காலம் = கி.பி 5ஆம் நூற்றாண்டு
- திணைமாலை நூற்றைம்பது என்னும் அகப்பொருள் நூலை இயற்றியவரும் இவரே. வடமொழிப் புலமை மிக்கவா்.
நூலின் பெயர்க்காரணம்
- ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று, இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில்
- ELATHI TNPSC POTHU TAMIL NOTES: ஏலாதி: எடுத்தல்
- முடக்கல்
- நிமிர்தல்
- நிலைத்தல்
- படுத்தல்
- ஆடல்
முக்கிய அடிகள்
- தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
வைத்து வழங்கிவாழ் வார்
- தலைஇழந்த – தலைமகனை இழந்த கையில் வைத்துக்கொண்டிருக்கும் பொருளால் உண்ணும் பேற்றினை இழந்தவர். கொடையாளி கைக்குப் பொருள்வந்து சேரும்.
- சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது மெய்போற்றல்
- இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது.
- வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து – கணிமேதாவியார்
- இடைவனப்பும், தோள்வனப்பும், ஈடில் வனப்பும்
நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ (டு)
எழுத்தின் வனப்பே வனப்பு
- இடையின் அழகோ, தோளின் அழகோ ஈடு இல்லாத வேறு அழகுகளோ, நடை அழகோ, நாணத்தினால் ஏற்படும் அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு ஆகா.
- எண்ணும், எழுத்தும் சேர்ந்த, அதாவது கல்வியினால் ஏற்படும் அழகே அழகு என்னும் பொருள்பட வரும் ஏலாதிப் பாடல்களில் ஒன்று இது: