AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்

Photo of author

By TNPSC EXAM PORTAL

AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்

  • AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்: எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன.
  • அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.
  • அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார்.
  • இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.
  • ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டுவிட்டுப் பார்த்தால், சங்கநூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:

ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள்

  • சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:

வள்ளல்கள்

  • அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொகுட்டெழினி ஆகிரோரை ஔவை பல பாடல்களில் போற்றியுள்ளார்.
  • மூவேந்தர் பறம்புமலையை முற்றியிருந்தபோது அவன் வளர்த்த குருவிப் பறந்து சென்று நெற்கதிர்களைக் கொண்டுவந்து தந்து பாரிக்கு உணவளித்தனவாம்.
  • விறலியர் சமைத்த கீரையோடு சேர்த்துச் சமைத்து உண்பதற்கு ஔவையார் நாஞ்சில் வள்ளுவனிடம் அரிசி கேட்டாராம்.
  • இந்த வள்ளுவன் தன் தகுதிக்கு அரிசி தருவது இழிவு எனக் கருதி போர்க்களிறு ஒன்றைப் பரிசாகத் தந்தானாம். இதனைத் தேற்றா ஈகை எனக் குறிப்பிட்டு ஔவை வருந்துகிறார்.
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:

மூதுரை

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் – மன்னர்க்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்

சென்ற இடம் எல்லாம் சிறப்பு

பொருள்
  • ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே மேலானவன். ஏனென்றால், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை.  ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.
சொல்லும் பொருளும்
  • மாசற்ற – குறை இல்லாமல்
  • சீர்தூக்கின் – ஒப்பிட்டு ஆராய்ந்து
  • தேசம் – நாடு
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:
AVVAIYAR PADALGAL TNPSC POTHU TAMIL NOTES 2023: ஔவையார் பாடல்கள்:

ஒளவையார்

  • மூதுரை – ஒளவையார் எழுதிய நீதிநூல்களில் இதுவும் ஒன்று.
  • வாக்குண்டாம் எனது தொடங்குவதால் இந்நூலை “வாக்குண்டாம்” எனும் பெயரால் அழைப்பர்.
  • இதில் 31 வெண்பாக்கள் உள்ளது.
  • பழமையான கருத்துக்களை கூறுவதால் மூதுரை என்று அழைக்கப்படுகிறது.
  • சங்ககாலம் முதல் பிற்காலம் வரை ஒளவையார் எனும் பெயரில் பெண்பாற்புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர்.
  • இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்த்துள்ளனர்.
ஒளவையார் எழுதிய நூல்கள்
  • ஆத்திசூடி
  • கொன்றை வேந்தன்
  • நல்வழி
  • மூதுரை
error: Content is protected !!