20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

எங்கள் இணையதளத்தில், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு நிகழ்வுகளுடன் புதுப்பித்த நிலையில் இருப்பதன் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

எங்கள் நோக்கம், மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராகவும், இறுதியில் அவர்களின் தொழில் இலக்குகளை அடையவும் உதவும், உலகெங்கிலும் உள்ள சமீபத்திய நிகழ்வுகள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதாகும்.

அரசியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளில் சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வை எங்கள் இணையதளம் வழங்குவதை உறுதிசெய்ய, அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் விஷய வல்லுநர்கள் அடங்கிய எங்கள் குழு அயராது உழைக்கிறது.

20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நடப்பு விவகாரங்களைப் பற்றிய முழுமையான மற்றும் விரிவான புரிதலை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் இணையதளம் மாணவர்களுக்குத் தகவல் மற்றும் நடப்பு விவகாரங்களில் ஈடுபட உதவும் பல்வேறு ஆதாரங்களைக் கொண்டுள்ளது. தினசரி செய்தி புதுப்பிப்புகள் முதல் வாராந்திர பகுப்பாய்வு வரை, பரீட்சைகளுக்கான அறிவின் வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவும் பல்வேறு உள்ளடக்கங்களை மாணவர்களுக்கு வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.

எங்கள் செய்திகள் மற்றும் பகுப்பாய்வுக்கு கூடுதலாக, மாணவர்கள் தங்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் வகையில் குறிப்புகள், இன்போ கிராபிக்ஸ் மற்றும் வினாடி வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுப் பொருட்களையும் வழங்குகிறோம்.

எங்கள் நிபுணர்கள் குழு இணையம் முழுவதிலும் இருந்து சிறந்த ஆய்வுப் பொருட்களைக் கட்டுப்படுத்துகிறது, மாணவர்கள் மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆதாரங்களை அணுகுவதை உறுதிசெய்கிறது.

எங்கள் இணையதளத்தில், நடப்பு விவகாரங்கள் குறித்த விரிவான மற்றும் பொருத்தமான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு உதவ நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

சமீபத்திய செய்திகள் மற்றும் பகுப்பாய்வில் தொடர்ந்து அறிந்துகொள்வதன் மூலமும், மாணவர்கள் தங்கள் தேர்வுகளிலும் அதற்கு அப்பாலும் வெற்றிபெற தேவையான அறிவு மற்றும் திறன்களை உருவாக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

TAMIL

உலக கோப்பை வில்வித்தை  (ஸ்டேஜ் 2) 2023
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 2) நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் 19 வயது வீரர் பிரதமேஷ் ஜவஹர், எஸ்தோனியாவின் ராபின் ஜாட்மாவை 147-145 என்ற கணக்கில் வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தார்.
  • இதில் உலகின் ‘நம்பர்-1’ வீரர், நெதர்லாந்தின் மைக் ஸ்காலசரை சந்தித்தார். முதல் நான்கு சுற்று முடிவில் இருவரும் 119-119 என சமநிலையில் இருந்தனர். ஐந்தாவது, கடைசி செட் முதல் இரு வாய்ப்பில் இருவரும் 20-20 என சமபுள்ளி பெற்றனர். கடைசி வாய்ப்பில் பிரதமஷே (10-9) முந்தினார்.
  • முடிவில் பிரதமேஷ் 149-148 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றினார். உலக கோப்பை ‘சீனியர்’ அரங்கில் இவர் வென்ற முதல் பதக்கம் இது. 
  • பெண்கள் காம்பவுண்டு பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அவ்னீத் கவுர், 144-146 என பிரிட்டனின் எல்லா கிப்சனிடம் தோல்வியடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அவ்னீத், துருக்கியின் இபெக்கை சந்தித்தார். துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அவ்னீத் 147-144 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • காம்பவுண்டு பிரிவு கலப்பு அணிகளுக்கான போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ஓஜாஸ் பிரவின் பங்கேற்றனர். பைனலில் இந்திய ஜோடி, வலிமையான தென் கொரியாவை எதிர்கொண்டது. முதல் மூன்று சுற்று முடிவில் இரு அணிகளும் 117-117 என சமநிலையில் இருந்தன. 
  • கடைசி, நான்காவது சுற்றில் இந்தியா 39-38 என முந்தியது. முடிவில் இந்திய அணி 156-155 என வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றியது. இத்தொடரில் இந்தியா 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கம் கைப்பற்றியது.
கர்நாடக முதல்வராக‌ சித்தராமையா பதவியேற்பு – டி.கே.சிவகுமார் துணை முதல்வரானார்
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக ந‌டந்தது. இதில், மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை பிடித்து காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. 
  • இதற்கிடையே, முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் இடையே போட்டி ஏற்பட்டது. 
  • 4 நாட்கள் நடந்த தீவிர பேச்சுவார்த்தைக்கு பிறகு, முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது.
  • கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், கன்னட நடிகர்கள் சிவராஜ் குமார், துனியா விஜய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
  • கடவுளின் பெயரில், முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
  • இதையடுத்து, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் தனது குரு அஜ்ஜய்யா பெயரில் பதவியேற்றுக் கொண்டார். பிறகு, ஜி.பரமேஷ்வர், கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, எம்.பி.பாட்டீல், பிரியங்க் கார்கே, சதீஷ் ஜார் கிஹோளி, ஜமீர் அகமது கான் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, ஃபரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
  • கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து அன்னப்பறவை ஓவியத்தை நினைவுப் பரிசாக வழங்கி வாழ்த்தினார்.
ஜப்பானில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: கிழக்காசிய நாடான ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரில், ‘ஜி – 7’ நாடுகளின் மாநாடு துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில், இதன் உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். 
  • இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார்.இதற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி, ஹிரோஷிமா நகரில் முதல் உலகப் போரின் போது அணுகுண்டு வீசப்பட்ட பகுதியில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை நேற்று திறந்து வைத்தார். 
  • பின், காந்தியின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தி அவர் வணங்கினார். அப்போது பேசிய பிரதமர், ”இங்கு நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, உலகை அமைதி பாதைக்கு அழைத்துச் செல்லும்,” என தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ஏசிபி நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான திரு அமித் ஷா குஜராத் மாநிலம் துவாரகாவில் ரூ. 470 கோடி செலவில் அமையவுள்ள தேசிய கடலோர காவல் துறையின் (என்ஏசிபி) நிரந்தர வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 
  • மத்திய உள்துறை செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படையின் இயக்குநர் ஜெனரல் உட்பட பல உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

வரலாற்றில் இன்றைய நாள்

மே 20 – ஆயுதப்படை தினம் (மே மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை) / NATIONAL ARMED FORCES DAY 2023 (US)
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: ஒவ்வொரு மே மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை ஆயுதப்படை தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்த நாள் அமெரிக்க ஆயுதப்படையில் பணியாற்றிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

ENGLISH

Archery World Cup (Stage 2) 2023
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Archery World Cup (Stage 2) is taking place in Shanghai, China. India’s 19-year-old Prathamesh Jawahar defeated Estonia’s Robin Jatma 147-145 in the men’s singles compound semi-finals to enter the final, where he met the world’s No. 1 player Mike Scholzer of the Netherlands. 
  • The two were tied 119-119 at the end of the first four rounds. Both tied at 20-20 in the first two chances of the fifth and final set. At the last chance, Pratamashe took the lead (10-9). In the end Prathamesh won 149-148 and won the gold. This is the first medal won by him in the World Cup ‘Senior’ arena. 
  • India’s Avneet Kaur lost to Britain’s Ella Gibson 144-146 in the women’s compound semi-finals. In the next bronze medal match, Avneed faced Turkey’s Ibek. Dominating from the start, Avneet won 147-144 and won the bronze medal.
  • In ‘Mixed’, India’s Jyoti Surekha and Ojas Pravin participated in the gold compound category mixed team event. In the final, the Indian pair faced the mighty South Korea. Both teams were tied 117-117 at the end of the first three rounds. Finally, India lead 39-38 in the fourth round. In the end, the Indian team won 156-155 and took the gold. In this series, India won 3 medals namely 2 gold and 1 bronze.
Siddaramaiah sworn in as Karnataka Chief Minister – TK Sivakumar becomes Deputy Chief Minister
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The Karnataka Legislative Assembly elections were held in a single phase on May 10. Out of the total 224 constituencies, the Congress won 135 seats.
  • Meanwhile, there was competition between former Chief Minister Siddaramaiah, President DK Sivakumar, former Deputy Chief Minister G. Parameshwar and former Minister MP Patil who took over the post of Chief Minister. After 4 days of intense negotiations, the Congress top elected Siddaramaiah as Chief Minister and DK Shivakumar as Deputy Chief Minister.
  • Subsequently, both went to Delhi and held discussions with Congress National President Mallikarjuna Kharge and senior leader Rahul Gandhi. Congress leaders from Karnataka, MPs, Kannada actors Shivraj Kumar, Dunia Vijay and others participated.
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: In the name of God, Siddaramaiah was sworn in as Chief Minister. He was administered the oath of office and secrecy by Governor Davarchand Khelat. Subsequently, DK Shivakumar took oath as Deputy Chief Minister in the name of his Guru Ajjaiah. Later, G. Parameshwar, K. H. Muniyappa, K. J. George, Ramalinga Reddy, M. P. Patil, Priyank Kharge, Satish Jar Kiholi and Jameer Ahmed Khan were sworn in as 8 ministers.
  • In the swearing-in ceremony, Congress National President Mallikarjuna Kharge, Tamil Nadu Chief Minister Stalin, Bihar Chief Minister Nitish Kumar, Rajasthan Chief Minister Ashok Khelat, Chhattisgarh Chief Minister Bhupesh Bagal, Jharkhand Chief Minister Hemant Soran, Nationalist Congress President Sarath Pawar, Jammu and Kashmir Former Chief Minister Mehbooba Mufti, Communist Abdullah, General Secretary T. Raja, General Secretary of the Communist Party of India Sitaram Yechury, former Puducherry Chief Minister Narayanasamy, Vishika President Thirumavalavan, Manima President Kamal Haasan and others participated as special guests.
  • Karnataka Chief Minister Siddaramaiah, Deputy Chief Minister DK Sivakumar, Mallikarjuna Kharge, Rahul Gandhi and Priyanka were gifted a swan painting by Tamil Nadu Chief Minister Stalin wearing a shawl.
Prime Minister Narendra Modi inaugurated the bust of Mahatma Gandhi in Japan
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: The ‘G-7’ conference began in Hiroshima, Japan, an East Asian country. The leaders of its member countries France, Germany, Italy, Britain, Canada, Japan and the United States have participated in this three-day meeting. Prime Minister Narendra Modi has visited Japan as a special invitation to India in this conference. 
  • As a part of the program, Prime Minister Modi unveiled a bust of Mahatma Gandhi yesterday in the Hiroshima city where the atomic bomb was dropped during the First World War. Then, he offered floral tributes to Gandhi’s statue. Speaking at that time, he said, “This statue installed here, the Prime Minister is taking the world to the path of peace.”
Union Home Minister Amit Shah laid foundation stone for NACP permanent campus
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Union Home Minister and Cooperatives Minister Mr. Amit Shah in Dwarka, Gujarat, Rs. He laid the foundation stone for the permanent campus of the National Coast Guard (NACP) at a cost of Rs 470 crore. Union Home Secretary, Director General of Border Security Force and many dignitaries attended the event.
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

DAY IN HISTORY TODAY

May 20 – NATIONAL ARMED FORCES DAY 2023 (US) (Third Saturday in May)
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Armed Forces Day is celebrated on the third Saturday of every May. The day is celebrated to pay tribute to the men and women who have served in the United States Armed Forces.
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

‘திருக்கோவில்’ என்ற புதிய செயலி / THIRUKKOIL MOBILE APP

  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்கள் தொடர்பான தகவல்களை மக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் விதத்தில், ‘திருக்கோவில்’ என்ற பெயரில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டது. இந்த செயலியை இந்து சமய அறநிலையத்தறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: திருக்கோவில் செயலியின் மூலம் கோவில்களின் தலபுராணம், தலவரலாறு, நடை திறந்திருக்கும் நேரம், பூஜைகள், பிரார்த்தனைகள், அதற்கான கட்டண விவரங்கள், முக்கிய திருவிழாக்கள், அனைத்து கோணங்களிலும் கோவில்களை கண்டுகளிக்கும் மெய்நிகர் காணொலி, திருவிழாக்களின் நேரலை, கோவில்களை சென்றடைவதற்கான கூகுள் வழிகாட்டி, பக்தர்களுக்கான சேவைகள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம். அன்னதானம், திருப்பணி போன்ற நன்கொடைகளையும் இந்த செயலி மூலம் வழங்கலாம்.
  • மேலும், தேவாரம், திருவாசகம், திருமுறைகள், நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவை முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை பக்தர்கள் கேட்டு மனநிறைவு பெறலாம். இந்த செயலியில் முதற்கட்டமாக, பிரசித்தி பெற்ற 50 முதுநிலை கோவில்கள் இடம் பெற்றுள்ளன.
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF
20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு புதிய செயலி / TNWRIMS APP

  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தமிழகத்தில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் சேர்ந்துள்ள மண் குவியல்கள், புதர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி நீர் தடையின்றி பாசனத்துக்கு செல்லும் வகையிலும், மழை, வெள்ள காலங்களில் நீர் எளிதாக வெளியேறும் வகையிலும் நீர்நிலைகள் ஆண்டுதோறும் நீர்வளத் துறை சார்பில் தூர் வாரப்படுகின்றன. 
  • தமிழக நீர்வளத் துறை வரலாற்றில் முதன்முறையாக தகவல் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு தூர் வாரும் பணியை அதிகாரிகள் அன்றாடம் கண்காணிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TNWRIMS) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழகம் முழுவதும் 12 மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகள் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகின்றன. ஏற்கெனவே தூர் வாரப்படாத நீர்நிலைகளுக்கு இந்த ஆண்டு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 
  • அதேபோன்று விவசாயிகள், பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும், அத்தியாவசியமாக செய்யப்பட வேண்டியவை என்ற அடிப்படையிலும் தூர் வாரும் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை நீர்வளத் துறை பொறியாளர்கள் அன்றாடம் கண்காணிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 20th May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: இதில் எந்தெந்த நீர்நிலைகளில் தூர் வாரும் பணி எத்தனை கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறுகிறது என்ற விவரம் இடம்பெற்றிருக்கும். தூர் வாருவதற்கு முன்பாக அந்த இடத்தின் புகைப்படம், தூர்வாரிய பின்னர் அந்தஇடத்தின் புகைப்படம் ஆகியவற்றை நாள்தோறும் நீர்வளத் துறை அலுவலர்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்வர்.
  • இதன் மூலம் பணிகளை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள ஏதுவாகும். இந்த செயலிமுதல்கட்டமாக தற்போது நீர்வளத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து, விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் செயலியை பயன்படுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.
error: Content is protected !!