AINTHINAI ELUPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை எழுபது: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஐந்திணை எழுபது
- ஆசிரியர் = மூவாதியார்
- சமயம் = சைவம்
- காலம் = கி.பி. 5-ம் நூற்றாண்டு
- உள்ளடக்கிய பொருள்வகை = அகம்
- பாடல்கள் = 70 (5*14=70)
- திணை = ஐந்து அகத்தினணகளும்
- திணை வைப்பு முறை = குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
- பாவகை = வெண்பா
- 66 பாடல்கள் கிடைத்துள்ளன
பொதுவான குறிப்புகள்
- AINTHINAI ELUPATHU TNPSC POTHU TAMIL NOTES 2023: ஐந்திணை எழுபதுதி: தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
- மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
- திணைக்கு பதினான்கு பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன.
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.
- இந்நூலில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை (முல்லையில் இரண்டு, நெய்தலில் இரண்டு)
- ஒவ்வாரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்குமாக 70 பாடல்கள் அமைந்துள்ளன.
- இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
- ஐந்திணை எழுபது சங்கம் மருவிய காலத் தமிழ் நூல்களுள் ஒன்று.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படும் 18 நூல்கள் கொண்ட தொகுதியுள் அடங்குவது.
- ஐந்திணைகள் என்பன முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து வகையான பண்டைத் தமிழர் நிலப்பகுப்புகளாகும். இவ்வைந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்களைக் கொண்டதால் இந்நூல் ஐந்திணை எழுபது எனப் பெயர் பெற்றது.
- இந்நூலில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவது ஆதலானும், நான்கு திணைகளுக்கும் பொதுவாய் ‘நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணை இதில் நடுவில் அமைக்கப்பட்டு உள்ளது என்பர்.
- அகப்பொருள் சார்ந்த ஏனைய பல தமிழ் இலக்கிய நூல்களைப் போலவே, இதுவும் காதல் வயப்பட்ட உள்ளங்களின் அக உணர்வுகளை அக்கால சமூக வாழ்க்கை முறைகளினதும், பண்பாட்டினதும் பின்னணியிலும், அத்தகைய வேறுபட்ட உணர்வுகளுக்குப் பொருத்தமான நிலத்திணைகளின் பின்னணியிலும் எடுத்துக்கூறுகின்றது.
- மற்றொரு பதினெண் கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பதை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டு இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. எனவேதான் இவ்விருநூல்களுக்கும் இடையில் பெயர் ஒற்றுமை இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
- மேலும் இருநூல்களிலும் சில அடிகளும் கருத்துகளும் ஒன்றுபோலவே அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஐந்திணை ஐம்பதில் உள்ள 38-ஆம் பாட்டில், “கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என்னும் வரிகள் அப்படியே, ஐந்திணை எழுபதில் உள்ள 36-ஆம் பாட்டில் “கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர் உள்ளம் படர்ந்த நெறி” என இடம்பெற்று உள்ளன.
- இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரைப் பற்றிக் கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காணப்படுகிறது. இக்கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாக இருப்பதாலும் இப்பாடலுக்குப் பழைய உரைகாரர் உரை எழுதாததாலும் இது நூலாசிரியரான மூவாதியாரால் இயற்றப்பட்டு இருக்காது எனக் கருதப்படுகிறது.
முக்கிய அடிகள்
- நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு
- நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
- இன்னுயிர் தாங்கும் மருந்து
- செங்கதிர் செல்வன் சினங்காத்த போழ்தினாற்
- பைங்கொடி முல்லை மனங்கமழ வண்டிமிர்
- காரோடலமருங் கார்வானங் காண்டோறும்
- நீரோடலம் வருங் கண்
- இனத்த வருங்கலை பொங்கப் புனத்த
கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி
யானும் அவரும் வருந்தச் சிறுமாலை
தானும் புயலும் வரும்