AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES 2023: ஆசாரக்கோவை

Photo of author

By TNPSC EXAM PORTAL

AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆசாரக்கோவை

  • AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: ஆசாரம்-ஒழுக்கம், கோவை-அடுக்கிக் கூறுதல். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை.
  • ஒழுக்க நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
  • பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இஃது ஒரு நீதி நூல்.
  • வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.
  • BIRTHDAY WISHES IN TAMIL 2023 / தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2023
  • பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.
  • ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
  • சமயம் = சைவம்
  • பாடல்கள் = 100
  • பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
  • வடக்கு திசையில் தலை வைத்து படுக்க கூடாது
  • வடமொழியில் இருடிகள் கூறியவையின் தொகுப்பு
  • வடமொழியின் ஆரிடம் – இதன் மூலநூல்
AASARA KOVAI TNPSC
AASARA KOVAI TNPSC

பெயர்க்காரணம்

  • AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
  • நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
  • எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.
AASARA KOVAI TNPSC
AASARA KOVAI TNPSC

பொதுவான குறிப்புகள்

  • AASARA KOVAI TNPSC POTHU TAMIL NOTES: ஆசாரக்கோவை: வட நூல்களான “சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
  • ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
  • பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
  • கயத்தார் பெருவாயின் முள்ளியார் என அழைக்கப்படுபவர்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.
  • 1 (ம) 100 வெண்பாவில் “ ஆசார வித்து “ முடியும்

AASARA KOVAI TNPSC

மேற்கோள்

  • விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
  • இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
  • ஒழுக்கம் பிழையா தவர்
  • பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
  • பகற்பொய்யார் தீயினுள் நீர்
  • உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
  • வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும்
  • புணரார் பெரியார் அகத்து
error: Content is protected !!