2nd May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF

Photo of author

By TNPSC EXAM PORTAL

2nd May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியா, சர்வதேசம், தமிழ்நாடு, விளையாட்டு, விண்வெளி, பொருளாதாரம், நியமனம், விருது, உச்சிமாநாடு, மாநாடு மற்றும் உச்சிமாநாடு தொடர்பான சமீபத்திய நடப்பு நிகழ்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.

TAMIL

2nd May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: தமிழகத்தில் தொழில் தொடங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவையின் 12-வது கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
  • சுமார் ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
  • இந்தக் கூட்டத்தில், 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. கேட்டர்பில்லர், மலேசியாவைச் சேர்ந்த பெட்ரோனஸ் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் விமானப் படையின் தென்மண்டல தளபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்

  • ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் 01 மே 23 அன்று விமானப்படையின் தென் மண்டல தளபதியாக பொறுப்பேற்றார்.
  • கஜகூட்டம் சைனிக் பள்ளி மற்றும் நேஷனல் பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், இந்திய விமானப்படையில் 1986 ஜூன் 7 ந்தேதி நியமிக்கப்பட்டார்.
  • அவர் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் 5,400 மணி நேரத்திற்கும் மேல் பறந்துள்ளார். அவர் ஒரு தாக்குதல் ஹெலிகாப்டர் தலைவராகவும், பறக்கும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
  • வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், செகந்திராபாத் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் மேனேஜ்மென்ட்டில் எம்எம்எஸ் பட்டமும், புது தில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் எம் ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.
  • விமானப்படையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், இதற்கு முன்பு விமானப்படையின் கிழக்கு பிரிவில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரியாக இருந்தார்.
  • ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் ஆகிய குடியரசு தலைவர் விருதுகளைப் பெற்றவராவார்.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மைத் திட்டம், நகர்ப்புறங்களின் துப்புரவு துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது.
  • திடக்கழிவு மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ரைட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி ரைட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவு பிரிவு, நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு மூன்று ஆண்டு காலம் தொழில்நுட்ப உதவி வழங்கும். கழிவுநீர் மேலாண்மை, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பொறியியல் மற்றும் வடிவமைப்பு நடைமுறை உள்ளிட்ட துறைகளில் ஆதரவு அளிக்கப்படும்.
  • இரண்டாவது கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவுகளற்ற நகரங்களை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையோடு நிலையான திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்த கவனம் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபாஸ்டாக் மூலம் தினசரி சுங்க வசூல் ரூ. 193 கோடியை எட்டி சாதனை

  • இந்தியாவில் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிப்பதற்கான ஃபாஸ்டாக் முறையை செயல்படுத்துவது, சீரான வளர்ச்சிப் பாதையுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
  • 2023 ஏப்ரல் 29 அன்று, இதன் மூலம் தினசரி சுங்க வசூல் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூ. 193.15 கோடியை, ஒரே நாளில் 1.16 கோடி பரிவர்த்தனைகள் மூலம் வசூல் செய்துள்ளது.
  • 2021 பிப்ரவரி மாதத்தில் இருந்து ஃபாஸ்டாக் கட்டாயப்படுத்தப்பட்டதிலிருந்து, 339 மாநில சுங்கச்சாவடிகள் உட்பட ஃபாஸ்டாக் திட்டத்தின் கீழ் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 770 லிருந்து 1,228 ஆக அதிகரித்துள்ளது.
  • நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சுமார் 97 சதவீதம் பேருக்கு ஃபாஸ்டாக் வழங்கப்பட்டுள்ளது. 6.9 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த அமைப்பு தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணச் சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
  • அனைத்து சாலைப் பயனாளர்களுக்கும் தடையற்ற மற்றும் தொந்தரவில்லாத சுங்கச்சாவடி அனுபவத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.
  • சுங்கக் கட்டண வசூலில் ஃபாஸ்டாக், இந்தியா முழுவதும் 50+ நகரங்களில் உள்ள 140க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் செயல்திறன் மிக்க சேவையை வழங்கி வருகிறது.

அரேபிய சுற்றுலாச் சந்தை (ATM) 2023-ல் சுற்றுலா அமைச்சகம் பங்கேற்கிறது

  • அரேபிய சுற்றுலாச் சந்தை (ATM) 2023-ல் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் பங்கேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி 2023-ம் ஆண்டு மே 1 முதல் 4ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெறுகிறது.
  • அரேபிய சுற்றுலாச் சந்தையானது சுற்றுலாத் துறைக்கான முக்கிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். இதில் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் பங்கேற்பர்.
  • பல்வேறு கலாச்சாரம், பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் இயற்கை அழகு, சாகசம், வனவிலங்குகள், ஆரோக்கியம் ஆகியவற்றுடன், தனித்துவமான மற்றும் உண்மையான அனுபவங்களைத் தேடும் பயணிகளுக்கு இந்தியா ஒரு சிறந்த இடமாகும்.
  • மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் இந்த நிகழ்ச்சியில், 2023-ல் இந்தியாவுக்கு வருகை தாருங்கள் எனப் பொருள்படும் Visit India Year 2023 என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.
  • பயண முகவர்கள், விமான நிறுவனங்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் உட்பட மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க சுற்றுலாத் துறையுடன் உறவுகளை வலுப்படுத்தவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும்.
  • அரேபிய சுற்றுலாச் சந்தை 2023-ல் இந்தியாவின் பங்கேற்பு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதியை எடுத்துரைக்கிறது.
  • இந்தியாவின் சுற்றுலா உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக இந்தியாவை மேம்படுத்துவதற்கும் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
  • சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் 24×7 கட்டணமில்லா பல மொழி உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இதில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 12 இந்திய மொழிகளிலும், அரபு, பிரெஞ்சு, ஜெர்மன் உள்பட 10 சர்வதேச மொழிகளில் பேசலாம். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.incredibleindia.org) ஆன்மீகம், பாரம்பரியம், சாகசம், கலாச்சாரம், யோகா, ஆரோக்கியம் மற்றும் பல முக்கிய அனுபவங்களைக் காண முடியும். இந்த இணையதளத்தை ஹிந்தி மற்றும் முன்னணி சர்வதேச மொழிகளிலும் காண முடியும்.
  • குறிப்பாக இந்தியாவின் ஜி-20 தலைமையின் பின்னணியில், சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா அமைச்சகம் இந்த ஆண்டை ‘விசிட் இந்தியா இயர் 2023’ என்று கொண்டாடுகிறது.
  • நம் நாட்டின் பல்வேறு சுற்றுலாச் சலுகைகளை முன்னிலைப்படுத்தவும், உலக சுற்றுலாப் பயணிகளுக்கு அவற்றைக் காட்சிப்படுத்தவும், இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள்

மே 2 – உலக ஆஸ்துமா தினம் (மே முதல் செவ்வாய்)

2nd May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: உலகில் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வையும் அக்கறையையும் பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செவ்வாய்கிழமை உலக ஆஸ்துமா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன்முயற்சியால் வருடாந்திர நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்துமா என்பது இருமல், மூச்சுத் திணறல், மார்பு இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் மூச்சுக்குழாய் அழற்சியின் நாள்பட்ட அழற்சியாகும்.

ENGLISH

2nd May 2023 CURRENT AFFAIRS TNPSC EXAM PORTAL IN TAMIL & ENGLISH PDF: Cabinet meeting approval to start business in Tamil Nadu

  • DMK led by Chief Minister M.K.Stalin Reign will complete the 2nd year and start the 3rd year on the 7th. In this context, the 12th meeting of the Tamil Nadu Cabinet was held yesterday at the Chief Secretariat under the leadership of Chief Minister Stalin. Tamil Nadu Ministers and Chief Secretary and other officials participated in this meeting which lasted for about an hour.
  • In this meeting, administrative approval was given for 5 companies to start business in Tamil Nadu. 5 companies including Caterpillar and Petronas from Malaysia have been approved to start business.
  • Also, a consultation has been made to celebrate the Karunanidhi Centenary in Tamil Nadu. In particular, they consulted on making arrangements for the President’s visit, Madurai and Tiruvarur celebrations.

Air Marshal Balakrishnan Manikandan has taken over as the South Regional Commander of the Air Force

  • Air Marshal Balakrishnan Manikandan took charge as the South Zone Commander of the Air Force on 01 May 23. An alumnus of Gajakootam Sainik School and National Defense Academy, he was commissioned into the Indian Air Force on 7 June 1986. He has flown more than 5,400 hours in various types of helicopters and airplanes. He has served as an attack helicopter commander and flying instructor.
  • He holds Masters from Defense Services Staff College, Wellington, MMS from College of Defense Management, Secunderabad and M Phil from National Defense College, New Delhi.
  • He has served in various capacities in the Air Force and was previously a Senior Air Staff Officer in the Eastern Wing of the Air Force. Air Marshal Balakrishnan Manikandan is a recipient of the President’s Awards of Ati Vishisht Seva Medal and Vayu Sena Medal.

MoU between Union Ministry of Housing and Urban Affairs, Rights Institute

  • The Used Water Management Scheme, introduced to provide financial assistance to cities with a population of less than one lakh, has ushered in a major transformation in the sanitation sector of urban areas. 
  • The Union Ministry of Housing and Urban Affairs has signed an MoU with Wrights to focus on improving solid waste and used water management. The agreement was signed for technical assistance in solid waste management and used water management under Phase II Urban Clean India Project in the presence of Ministry Secretary Mr. Manoj Joshi, Joint Secretary Mr. Rupa Misra, Chief Managing Director of Rites.
  • According to the agreement, the Technical Support Division of Rites will provide technical assistance to the Urban Clean India Project for a period of three years. Support will be provided in areas including wastewater management, engineering and design practice of wastewater treatment plants. 
  • It is noteworthy that under the second phase of the Urban Clean India Plan, the focus is on strengthening sustainable solid waste management with a vision of creating waste-free cities.

Daily customs collection through Fastak is Rs. 193 crores record

  • The implementation of FASTAK system for toll collection in India has been a huge success with a steady growth trajectory.
  • 2023 on April 29, thereby reaching a historic milestone in daily toll collection. This is an unprecedented Rs. 193.15 crores collected through 1.16 crore transactions in a single day.
  • Since FASTAK was made mandatory from February 2021, the number of toll booths under FASTAK scheme has increased from 770 to 1,228, including 339 state toll booths.
    About 97 percent of highway users have been provided with FASTAK.
  • More than 6.9 crore people are using this facility. This system has significantly reduced waiting time at toll booths on national highways.
  • The government remains steadfast in its commitment to provide a seamless and hassle-free toll experience to all road users.
  • FASTAC provides efficient toll collection services at more than 140 toll booths in 50+ cities across India.

Ministry of Tourism participates in Arabian Tourism Market (ATM) 2023

  • Union Ministry of Tourism has participated in Arabian Tourism Market (ATM) 2023. The event will be held from May 1 to 4, 2023 in Dubai, United Arab Emirates.
  • The Arab Tourism Fair is one of the major international events for the tourism industry. Visitors from all over the world will participate in it.
  • With diverse culture, heritage, cuisine and natural beauty, adventure, wildlife, wellness, India is a great destination for travelers looking for unique and authentic experiences.
  • The Union Ministry of Tourism has launched the campaign ‘Visit India Year 2023’ on this occasion.
  • The event will also provide an opportunity to strengthen relationships with the Middle East and North African tourism industry, including travel agents, airlines and media representatives.
  • India’s participation in the Arabian Tourism Market 2023 highlights the country’s commitment to promoting tourism.
  • The Central Government is committed to developing India’s tourism infrastructure and promoting India as a world-class tourist destination.
  • Union Ministry of Tourism has launched a 24×7 toll free multilingual helpline for the safety of tourists.
  • Apart from Hindi and English, you can speak 12 Indian languages and 10 international languages including Arabic, French and German. On the official website of the Union Ministry of Tourism (www.incredibleindia.org) you can find important experiences such as spirituality, heritage, adventure, culture, yoga, health and many more. The website is also available in Hindi and leading international languages.
  • The Ministry of Tourism is celebrating this year as ‘Visit India Year 2023’ to promote tourism, especially in the context of India’s G-20 leadership.
  • The event focuses on highlighting the various tourism offerings of our country and showcasing them to global tourists.
error: Content is protected !!