Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக – Pirithu Eludhuga for TNPSC GROUP2 and GROUP4, VAO EXAMS
சமச்சீர் பாடப்புத்தகம் மற்றும் புதிய பாட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகத்தில் இருந்து பிரித்து எழுதுக என்ற தலைப்பில் வினாக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு நோக்கில் சில முக்கியமான பிரித்து எழுதுக வினாக்களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
6ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- அமுதென்று – அமுது + என்று
- நிலவென்று – நிலவு + என்று
- செம்பயிர் – செம்மை + பயிர்
- எட்டுத்திசை – எட்டு + திசை
- சீரிளமை – சீர்மை + இளமை
- தமிழெங்கள் – தமிழ் + எங்கள்
- இடப்புறம் – இடது + புறம்
- பொய்யகற்றும் – பொய் + அகற்றும்
- பாட்டிருக்கும் – பாட்டு + இருக்கும்
- வெண்குடை – வெண்மை + குடை
- பொற்கோட்டு – பொன் + கோட்டு
- அஃறிணை – அல் + திணை
- பாகற்காய் – பாகு +அல் + காய்
- அவனளிபோல் – அவன் + அளிபோல்
- கொங்கலர் – கொங்கு + அலர்
- வழித்தடம் – வழி + தடம்
- வேதியுரங்கள் – வேதி + உரங்கள்
- நன்மாடங்கள் – நன்மை + மாடங்கள்
- முத்துச்சுடர் – முத்து + சுடர்
- நிலத்தினிடையே – நிலத்தின் + இடையே
- தட்பவெப்பம் – தட்பம் + வெப்பம்
- ஏனென்று – ஏன் + என்று
- தரையிறங்கும் – தரை + இறங்கும்
- நிலவொளி – நிலவு + ஒளி
- கண்டறி – கண்டு + அறி
- மருத்துவத்துறை – மருத்துவம் + துறை
- இல்லாதியங்கும் – இல்லாது இயங்கும்
- ஒளடதமாம் – ஔடதம் + ஆம்
- செயலிழக்க – செயல் + இழக்க
- இடமெல்லாம் – இடம் + எல்லாம்
- குற்றமில்லாதவர் – குற்றம் + இல்லாதவர்
- மாசற – மாசு + அற
- சிறப்புடையார் – சிறப்பு + உடையார்
- கைப்பொருள் – கை + பொருள்
- மானமில்லா – மானம் + இல்லா
- பசியின்றி – பசி + இன்றி
- படிப்பறிவு – படிப்பு + அறிவு
- அறிவுடைமை – அறிவு + உடைமை
- இவையெட்டும் – இவை + எட்டும்
- காட்டாறு – காடு + ஆறு
- நன்றியறிதல் – நன்றி + அறிதல்
- கண்ணுறங்கு – கண் + உறங்கு
- பாட்டிசைத்து – பாட்டு + இசைத்து
- பொறையுடைமை – பொறை + உடைமை
- நீலவான் – நீலம் + வான்
- ஓய்வற – ஓய்வு + அற
- நின்றிருந்த – நின்று + இருந்த
- விண்வெளி – விண் + வெளி
- ஆழக்கடல் – ஆழ + கடல்
- அவ்வுருவம் – அ + உருவம்
- மலையெல்லாம் – மலை + எல்லாம்
- இன்னயிர் – இனிமை + உயிர்
- இன்புற்றிருக்க – இன்புற்று + இருக்க
- வண்ணப்படங்கள் – வண்ணம் + படங்கள்
- பண்டமாற்று – பண்டம் + மாற்று
- கல்லெடுத்து – கல் + எடுத்து
- பொருளுடைமை – பொருள் + உடைமை
- உள்ளுவதெல்லாம் – உள்ளுவது + எல்லாம்
- போகிப்பண்டிகை – போகி + பண்டிகை
- வாழையிலை – வாழை + இலை
- பொங்கலன்று – பொங்கல் + அன்று
- கையமர்த்தி – கை + அமர்த்தி
- நாடென்ற – நாடு + என்ற
- நானிலம் – நான்கு + நிலம்
- பெருவானம் – பெருமை + வானம்
- வணிகச்சாத்து – வணிகம் + சாத்து
- கலமேறி – கலம் + ஏறி
- அடிக்குமலை – அடிக்கும் + அலை
- கதிர்ச்சுடர் – கதிர் + சுடர்
- மூச்சடக்கி – மூச்சு + அடக்கி
- விரிவடைந்த – விரிவு + அடைந்த
- நூலாடை – நூல் + ஆடை
- எதிரொலிக்க – எதிர் + ஒலிக்க
- தம்முயிர் – தம் + உயிர்
- தானென்று – தான் + என்று
- எளிதாகும் – எளிது + ஆகும்
- பாலையெல்லாம் – பாலை + எல்லாம்
7ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- தந்துதவும் – தந்து + உதவும்
- இரண்டல்ல – இரண்டு + அல்ல
- வானொலி – வான் + ஒலி
- காடெல்லாம் – காடு + எல்லாம்
- கிழங்கெடுக்கும் – கிழங்கு + எடுக்கும்
- பெயரறியா – பெயர் + அறியா
- ஒப்புமையில்லாத – ஒப்புமை + இல்லாத
- குரலாகும் – குரல் + ஆகும்
- மனமில்லை – மனம் + இல்லை
- நேற்றிரவு – நேற்று + இரவு
- அனைத்துண்ணி – அனைத்து + உண்ணி
- காட்டாறு – காட்டு + ஆறு
- தீதுண்டோ – தீது + உண்டோ
- தன்னெஞ்சு – தன் + நெஞ்சு
- பொருட்செல்வம் – பொருள் + செல்வம்
- வேட்டையாடிய – வேட்டை + ஆடிய
- யாதெனின் – யாது + எனின்
- பூட்டுங்கதவுகள் – பூட்டும் + கதவுகள்
- கல்லளை – கல் + அளை
- தோரணமேடை – தோரணம் + மேடை
- யாண்டுளனோ – யாண்டு + உளனோ
- நேரமாகி – நேரம் + ஆகி
- வாசலலங்காரம் – வாசல் + அலங்காரம்
- பெருங்கடல் – பெருமை + கடல்
- இவையெல்லாம் – இவை + எல்லாம்
- கேடில்லை – கேடு + இல்லை
- எவனொருவன் – எவன் + ஒருவன்
- ஏடெடுத்தேன் – ஏடு + எடுத்தேன்
- இன்றாகி – இன்று + ஆகி
- துயின்றிருந்தார் – துயின்று + இருந்தார்
- வனப்பில்லை – வனப்பு + இல்லை
- வண்கீரை – வண்மை + கீரை
- கோட்டோவியம் – கோட்டு + ஓவியம்
- செப்பேடு – செப்பு + ஏடு
- கரைந்துண்ணும் – கரைந்து + உண்ணும்
- நீருலையில் – நீர் + உலையில்
- மாரியொன்று – மாரி + ஒன்று
- எழுத்தாணி – எழுத்து + ஆணி
- எழுத்தென்ப – எழுத்து + என்ப
- கற்றனைத்தூறும் – கற்றனைத்து + ஊறும்
- என்றுரைக்கும் – என்று + உரைக்கும்
- உயர்வடைவோம் – உயர்வு + அடைவோம்
- கட்டியடித்தல் – கட்டி + அடித்தல்
- வார்ப்பெனில் – வார்ப்பு + எனில்
- தேர்ந்தெடுத்து – தேர்ந்து + எடுத்து
- வாய்த்தீயின் – வாய்த்து + ஈயீன்
- இன்புருக – இன்பு + உருக
- இன்சொல் – இனிமை + சொல்
- தன்னாடு – தன்மை + நாடு
- அறக்கதிர் – அறம் + கதிர்
- ஓடையெல்லாம் – ஓடை + எல்லாம்
- இவையில்லாது – இவை + இல்லாது
- ஞானச்சுடர் – ஞானம்+ சுடர்
- மலையளவு – மலை + அளவு
- முதுமொழி – முதுமை + மொழி
- எதிரொலித்தது – எதிர் + ஒலித்தது
- தானொரு – தான் + ஒரு
8ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- என்றென்றும் – என்று + என்றும்
- வானமறிந்த – வானம் + அறிந்த
- ஐம்பால் – ஐந்து பால்
- இருதிணை – இரண்டு + திணை
- நன்செய் – நன்மை + செய்
- ஓடையாட – ஓடை + ஆட
- நீளுழைப்பு – நீள் + உழைப்பு
- சீருக்கேற்ப – சீருக்கு + ஏற்ப
- அறிந்ததனைத்தும் – அறிந்தது + அனைத்தும்
- விழுந்ததங்கே – விழுந்தது + ஆங்கே
- வானமளந்தது – வானம் + அளந்தது
- நெடுந்தேர் – நெடுமை + தேர்
- பருத்தியெல்லாம் – பருத்தி + எல்லாம்
- வல்லுருவம் – வன்மை + உருவம்
- நலமெல்லாம் – நலம் + எல்லாம்
- பாலூறும் – பால் + ஊறும்
- இவையுண்டோர் – இவை + உண்டோர்
- இன்னோசை – இனிமை + ஒசை
- இடமெங்கும் – இடம் + எங்கும்
- செத்திறந்த – செத்து + திறந்த
- தாமினி – தாம் + இனி
- கனகச்சுனை – கனகம் + சுனை
- கோயிலப்பா – கோயில் + அப்பா
- கலனல்லால் – கலன்+அல்லால்
- பகைவென்றாலும் – பகை + என்றாலும்
- நமனில்லை – நமன் + இல்லை
- சீவனில்லாமல் – சீவன் + இல்லாமல்
- வெங்கரி – வெம்மை + கரி
- கசடற – கசடு + அற
- பாடறிந்து – பாடு + அறிந்து
- வாசலெல்லாம் – வாசல் + எல்லாம்
- என்றிருள் – என்று + இருள்
- மட்டுமல்ல – மட்டும் + அல்ல
- காலிறங்கி – கால் + இறங்கி
- கயிற்றுக்கட்டில் – கயிறு + கட்டில்
- விலங்கொடித்து – விலங்கு + ஒடித்து
- காட்டையெரித்து – காட்டை + எரித்து
- முழவதிர – முழவு + அதிர
- முறையெனப்படுவது – முறை + எனப்படுவது
- என்றாய்ந்து – என்று + ஆராய்ந்து
- இதந்தரும் – இதம் + தரும்
- தூக்கிக்கொண்டு – தூக்கி + கொண்டு
- இன்பதுன்பம் – இன்பம் + துன்பம்
- பெற்றெடுத்தோம் – பெற்று + எடுத்தோம்
- விழித்தெழும் – விழித்து + எழும்
- கண்ணோடாது – கண் + ஓடாது
- பெருஞ்செல்வம் – பெருமை + செல்வம்
- போவதில்லை – போவது + இல்லை
- அக்களத்து – அ + களத்து
- படுக்கையாகிறது – படுக்கை + ஆகிறது
- கதிரென – கதிர் + என
- ஊராண்மை – ஊர் + ஆண்மை
- நம்பர்க்கங்கு – நம்பர்க்கு + அங்கு
- திரிந்தற்று – திரிந்து + அற்று
- குணங்களெல்லாம் – குணங்கள் + எல்லாம்
- உள்ளேயிருக்கும் – உள்ளே + இருக்கும்
- ஆனந்த வெள்ளம் – ஆனந்தம் + வெள்ளம்
9ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- கண்டெடுக்கப்பட்டுள்ளன – கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
10ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- அருந்துணை – அருமை + துணை
- எந்தமிழ்நா – எம் + தமிழ் + நா
11ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- அணிந்துரை – அணிந்து + உரை
- பொதுச்சிறப்பு – பொது + சிறப்பு
- தமிழரசி – தமிழ் + அரசி
- நாட்டுப்பண் – நாடு + பண்
- பொன்வண்டு – பொன் + வண்டு
- மணிமாலை – மணி + மாலை
- வாழையிலை – வாழை + இலை
- தமிழ்நிலம் – தமிழ் + நிலம்
- மலையருவி – மலை + அருவி
- தமிழன்னை – தமிழ் + அன்னை
- தென்னைமரம் – தென்னை + மரம்
- தேன்மழை – தேன் + மழை
- கனிசாறு – கனி + சாறு
- தமிழ்படி – தமிழ் + படி
- நடந்துசெல் – நடந்து + செல்
- படித்தநூல் – படித்த + நூல்
- வீடில்லை – வீடு + இல்லை
- முரட்டுக்காளை – முரடு + காளை
- அச்சுப்பலகை – அச்சு + பலகை
- மார்புக்கூடு – மார்பு + கூடு
- எஃகுக்கம்பி – எஃகு + கம்பி
- பஞ்சுப்பொதி – பஞ்சு + பொதி
- செங்கயல் – செம்மை + கயல்
- திருப்புகழ் – திரு + புகழ்
- உயர்ந்தோங்கும் – உயர்ந்து + ஓங்கும்
- தண்டுடை – தண்டு + உடை
- இயைவதாயினும் – இயைவது + ஆயினும்
- புகழெனின் – புகழ் + எனின்
- மன்னுயிர் – மன் + உயிர்
- பெருந்தவத்தாய் – பெருமை + தவத்தாய்
- என்றிவை – என்று + இவை
- பெருங்கலம் – பெருமை + கலம்
- மாசற்றார் – மாசு + அற்றார்
- வீட்டுத்தோட்டம் – வீடு + தோட்டம்
- முரட்டுக்காளை – முரடு + காளை
- பகட்டுவாழ்க்கை – பகடு + வாழ்க்கை
- சோற்றுப்பானை – சோறு + பானை
- கயிற்றுவண்டி – கயிறு + வண்டி
- காட்டுமரம் – காடு + மரம்
- ஆற்றுநீர் – ஆறு + நீர்
- வயிற்றுப்பசி – வயிறு + பசி
- வரவறிந்தான் – வரவு + அறிந்தான்
- பள்ளித்தோழன் – பள்ளி+தோழன்
- நிலத்தலைவர் – நிலம் + தலைவர்
- திரைப்படம் – திரை + படம்
- மரக்கலம் – மரம் + கலம்
- பூங்கொடி – பூ + கொடி
- பூந்தொட்டி – பூ + தொட்டி
- பூஞ்சோலை – பூ + சோலை
- பூப்பந்து – பூ + பந்து
- வாயொலி – வாய் + ஒலி
- மண்மகள் – மண் + மகள்
- கல்லதர் – கல் + அதர்
- பாடவேளை – பாடம் + வேளை
- காலங்கடந்தவன் – காலம் + கடந்தவன்
- பெருவழி – பெருமை + வழி
- பெரியன் – பெருமை + அன்
- மூதூர் – முதுமை + ஊர்
- பைந்தமிழ் – பசுமை + தமிழ்
- நெட்டிலை – நெடுமை + இலை
- வெற்றிலை – வெறுமை + இலை
- செந்தமிழ் – செம்மை + தமிழ்
- கருங்கடல் – கருமை + கடல்
- பசுந்தளிர் – பசுமை + தளிர்
- பைந்தளிர் – பசுமை + தளிர்
- பொற்சிலம்பு – பொன் + சிலம்பு
- சிறுகோல் – சிறுமை + கோல்
- முறையறிந்து – முறை + அறிந்து
- இழுக்கின்றி – இழுக்கு + இன்றி
- அரும்பொருள் – அருமை + பொருள்
- மனையென – மனை + என
- பயமில்லை – பயம் + இல்லை
- பற்பொடி – பல் + பொடி
- கற்பொடி – கல் + பொடி
- உலகனைத்தும் – உலகு + அனைத்தும்
- திருவடி – திரு + அடி
- சிற்றூர் – சிறுமை + ஊர்
- நீரோடை – நீர் + ஓடை
- கற்பிளந்து – கல் + பிளந்து
- புவியாட்சி – புவி + ஆட்சி
- அமுதென்று – அமுது + என்று
- மணிக்குளம் – மணி + குளம்
- புறந்தருதல் – புறம் + தருதல்
- மண்ணுடை – மண் + உடை
- தடந்தேர் – தடம் + தேர்
- காலத்தச்சன் – காலம் + தச்சன்
- உழுதுழுது – உழுது + உழுது
- பேரழகு – பெருமை + அழகு
12ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
- செம்பரிதி – செம்மை + பரிதி
- வானமெல்லாம் – வானம் + எல்லாம்
- உன்னையல்லால் – உன்னை + அல்லால்
- செந்தமிழே – செம்மை + தமிழே
- ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்
- தனியாழி – தனி + ஆழி
- வெங்கதிர் – வெம்மை + கதிர்
- இனநிரை – இனம் + நிரை
- புதுப்பெயல் – புதுமை+பெயல்
- அருங்கானம் – அருமை+கானம்
- எத்திசை – எ+திசை
- உள்ளொன்று – உள் + ஒன்று
- ஒருமையுடன் – ஒருமை + உடன்
- பூம்பாவாய் – பூ + பாவாய்
- பெருங்கடல் – பெருமை + கடல்
- ஏழையென – ஏழை + என
- முன்னுடை – முன் + உடை
- நன்மொழி – நன்மை + மொழி
- உரனுடை – உரன் + உடை
தேர்வு நோக்கில் பிரித்து எழுதுக
- இறைஞ்சி – இறைஞ்சி + இ
- வாழிய – வாழ் + இய
- முட்டீது – முள் + தீது
- பனையளவு – பனை + அளவு
- சதுரகராதி – சதுர் + அகராதி
- மாண்புடையார் – மாண்பு + உடையார்
- தினையளவு – தினை + அளவு
- தமிழ்ப்பசி – தமிழ் + பசி
- புத்துயிருட்டி – புதுமை + உயிர் + ஊட்டி
- அவையஞ்சான் – அவை + அஞ்சான்
- பசுந்தலை – பசுமை + தலை
- வேண்டியதில்லை – வேண்டியது + இல்லை
- புகழெனக்கு – புகழ் + எனக்கு
- மின்னனுவியல் – மின்னனு + இயல்
- செங்கதிரவன் – செம்மை + கதிரவன்
- மெய்ஞ்ஞானம் – மெய் + ஞானம்
- பசியறாது – பசி + அறாது
- புகலிடம் – புகல் + இடம்
- பைங்குவளை – பசுமை + குவளை
- வேடமணிந்து – வேடம் + அணிந்து
- செந்தாமரை – செம்மை + தாமரை
- காட்டுயிர்கள் – காடு + உயிர்கள்
- ஐம்பூதங்கள் – ஐந்து + பூதங்கள்
- விலங்கினம் – விலங்கு + இனம்
- வாழிடம் – வாழ் + இடம்
- உயிரென – உயிர் + என
- சிறையிலடைத்த – சிறையில் + அடைத்த
- தாய்மையன்பு – தாய்மை + அன்பு
- மலர்க்கரம் – மலர் + கரம்
- உணர்வரிய – உணர்வு+அரிய
- உலகறிய – உலகு+அறிய
- உரமூட்டும் – உரம்+ஊட்டும்
- உலகமெலாம் – உலகம்+எலாம்
- உலகனைத்தும் – உலகு+அனைத்தும்
- உட்பொருள் – உள்+பொருள்
- உடையதுடையரோ – உடையது+உடையரோ
- உலகிதனை – உலகு+இதனை
- உலகத்துயர்ந்த – உலகத்து+உயர்ந்த
- உயிரினங்கள் – உயிர்+ இனங்கள்
- உள்ளமுடைமை – உள்ளம்+உடைமை
- ஊர்ப்புறம் – ஊர்+புறம்
- ஊனுடைய – உன்+உடைய
- ஊராண்மை – ஊர்+ஆண்மை
- ஊற்றாந்துணை – ஊற்று+ஆம்+துணை
- எடுத்தெறிய – எடுத்து+எறிய
- உடனெய்தும் – உடன்+எய்தும்
- உயிரோவியமே – உயிர்+ஓவியமே
- ஊரிட்ட – ஊர்+இட்ட
- ஊற்றுக்கோல் – ஊன்று+கோல்
- இயற்றமிழ் – இயல்+தமிழ்
- இயற்கையெய்தினார் – இயற்கை+எய்தினார்
- இவையுண்டு – இவை+உண்டு
- இலரெனினும் – இலர்+எனினும்
- இருப்புமுனை – இருப்பு+முனை
- இவருக்கிட்ட – இவருக்கு+இட்ட
- இளஞ்சிறுவர் – இளமை+சிறுவர்
- இடையீடின்றி – இடையீடு + இன்றி
- இணையிலா – இணை+ இலா
- செஞ்சொல்லை – செம்மை + சொல்லை
- செந்தமிழ் – செம்மை+தமிழ்
- சிலருண்டு – சிலர்+உண்டு
- சான்றோர்க்கணி – சான்றோர்க்கு + அணி
- சோர்விலன் – சோர்வு+இலன்
- சிதரசைத்து – சிதர்+அசைத்து
- சொல்லரிய – சொல்+அரிய
- செந்நெல் – செம்மை+நெல்
- சிறுபடை – சிறுமை+படை
- சினமெனும் – சினம்+எனும்
- சிந்தென்று – சிந்து + என்று
- சொல்லாய்வை – சொல் +ஆய்வை
Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக
Read Also,
தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள்