தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள்

Photo of author

By TNPSC EXAM PORTAL

தமிழ்நாட்டின் முதன்மைகள் பற்றிய குறிப்புகள்

  • மிக உயரமான கோபுரம் ➨ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்
  • மிக உயரமான தேர் மற்றும் பெரிய தேர் ➨ திருவாரூர் கோயில் தேர்
  • தமிழகத்திலுள்ள மிகப்பெரிய நந்தி ➨ பிரகதீஸ்வரர் கோயில் நந்தி (தஞ்சாவூர்)
  • மிகப்பெரிய கோயில் ➨ ஸ்ரீ ரங்கநாதர் கோயில் (ஸ்ரீரங்கம்)
  • மிகப் பழமையான அணை ➨ கல்லணை (திருச்சி)
  • மிக நீளமான கடற்கரை ➨ மெரினா கடற்கரை (13 கிலோ மீட்டர் நீளம்)
  • உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை ஆகும்.
  • முதலாவது மிக நீளமான கடற்கரை ➨ ரியோடி ஜெனிரோ கடற்கரை
  • மிக நீளமான ஆறு ➨ காவேரி 760 கிலோமீட்டர் நீளம் உடையது.
  • மிக நீளமான பாலம் ➨ இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கிலோ மீட்டர் நீளம்)
  • தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் ➨ செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (150 அடி உயரம்)
  • மிக உயரமான அரசாங்க கட்டடம் ➨ எல்ஐசி சென்னை (14 மாடி)
  • மிக உயரமான சிலை ➨ திருவள்ளுவர் சிலை. கன்னியாகுமரி (133 அடி உயரம்)
  • தற்போது மிக உயரமான சிலை – உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை ➨ ஸ்ரீ முத்துமலை முருகர். சேலம் (146 அடி உயரம்)
  • தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ➨ தொட்டபெட்டா (2637 மீட்டர்)
  • தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாவல் ➨ பிரதாப முதலியார் சரித்திரம்
  • தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் ➨ அலிபாபாவும் 40 திருடர்களும்
  • தமிழ்நாட்டின் முதல் பெண் டிஜிபி ➨ லத்திகா சரண்
  • தமிழ்நாட்டின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுனர் ➨ வசந்தகுமாரி
  • தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி ➨ பத்மினி ஜேசுதுரை
  • தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் ➨ டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் ➨ விஜயலட்சுமி
  • தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ ➨ காளியம்மாள்
  • தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி ➨ திலகவதி ஐபிஎஸ்
  • தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் ➨ லட்சுமி பிரானேஷ்
  • இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த முதல் தமிழர் ➨ ராஜாஜி
  • பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் ➨ ராஜாஜி
  • சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் ➨ சர்.பி.டி.தியாகராயர்
  • சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் ➨ ராஜா முத்தையா செட்டியார்
  • சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ➨ தாரா செரியன்
  • உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் ➨ விஸ்வநாதன் ஆனந்த்
  • தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி ➨ சென்னை (1688)
  • தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை ➨ ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)
  • தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் ➨ மதராஸ் மெயில் (1873)
  • தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் ➨ சுதேசமித்திரன் (1882)
  • தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் ஊமை படம் ➨ கீசகவதம் (1916)
  • தமிழகத்தின் முதல் முதலமைச்சர் (1920 – 1921) ➨ சுப்பராயலு ரெட்டியார்
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழக தலைவர்( சுதந்திரத்திற்கு முன்) ➨ விஜயராகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)
  • நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் ➨ சர்.சி.வி ராமன் (1930)
  • தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் ➨ சென்னை (1930)
  • தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் ➨ காளிதாஸ் (1931)
  • தமிழகத்தின் மிகப்பெரிய அணை ➨ மேட்டூர் அணை (1934)
  • இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழக தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) ➨ காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)
  • ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் ➨ அகிலன் (1975)
  • தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ➨ திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)
  • தாதாசாகெப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் ➨ சிவாஜி கணேசன் (1996)
  • தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் (1997 – 2001) செல்வி. பாத்திமா பீவி

ALSO READ,

Pothunalam

தமிழகத்தின் சிறப்பு பெயர் பெற்ற இடங்களின் பட்டியல் – CLICK HERE

error: Content is protected !!