DOWNLOAD NAAN MUDHALVAN EXAM 2023 HALL TICKET: நான் முதல்வன் மதிப்பீட்டுத் தேர்வு நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு

DOWNLOAD NAAN MUDHALVAN EXAM 2023 HALL TICKET: தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி துவங்கி வைக்கப்பட்டது.

GI TAG FOR JAMMU KASHMIR’S KARAMANI & SULAI THEN 2023: ஜம்மு – காஷ்மீரை சேர்ந்த காராமணி, சுலாய் தேனுக்கு புவிசார் குறியீடு 2023

2023-24-க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், நான் முதல்வன் திட்டத்தின்கீழ், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 1000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுக்குத் தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.7,500 பத்து மாதங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அந்த வகையில், மதிப்பீட்டுத் தேர்வு செப்.10-ம் தேதி நடைபெறும் நிலையில், இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

நான் முதல்வன் ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

pdf download

DOWNLOAD NAAN MUDHALVAN EXAM 2023 HALL TICKET

error: Content is protected !!
Scroll to Top