NAANMANIKADIKAI TNPSC NOTES 2023: நான்மணிக்கடிகை

Photo of author

By TNPSC EXAM PORTAL

NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

நான்மணிக்கடிகை

  • NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று, இஃது ஒரு நீதி நூல்.
  • நான்கு அறக் கருத்துகள் – கல்விபயன், வீடு, கொலை, தீது தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை வனத்திற்கு உரியது
  • ஆசிரியர் = விளம்பி நாகனார்
  • ஊர் =விளம்பி
  • 102 பாடல்கள் + 2 கடவுள் வாழத்து பாடல்கள் =104 பாடல்கள்
  • பாவகை = வெண்பா
  • உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
  • இயற்றப்பட்ட காலம் = நான்காம் நூற்றாண்டு

NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை

விளம்பி நாகனார்

  • NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை  ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் என்ற பெயர் உடையவராக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது அல்லது இவர் ஆற்றிய தொழில் காரணமாக இவர் விளம்பி நாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவாரும் உளர்.
  • To Translate English to Tamil
  • இந்நூலில் உள்ள கடவுள் வாழ்த்துப்பாடல்கள் இரண்டும் திருமாலைப்பற்றி இருப்பதால் இவர் வைணவ பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இந்நூல் வைணவ இலக்கியம் என்றும் கூறுவாறுமுளர்.
  • இவர் பெயரை நாயனார் நயினார் என்று கூறி, இந்நூலில் பல இடங்களில் சமண சமயக் கருத்துகளான பொய்யாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியவை வலியுறுத்திக் கூறப்படுவதால் இதன் ஆசிரியர் விளம்பி நாகனார் ஒரு சமணர் என்றும் நான்மணிக்கடிகை சமணர்களின் இலக்கியம் என்று கூறுவாரும் உளர்.
  • இக்கருத்தை ஏற்பவர்கள் திருமாலைப்பற்றிய செய்யுட்கள் இரண்டும் இடைச்செருகல் என்று வாதிடுவர்.
  • கி.ஆ.பெ. விசுவநாதன் பதிப்பித்துள்ள மும்மணிகளும் நான்மணிகளும் என்னும் நூலில் கடவுள் வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் நீங்கலான நூற்றுநான்கு பாடல்களே உள்ளன.

NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை

பெயர்க்காரணம்

  • NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
  • கடிகை (அணிகலன் – நகை) = துண்டு, ஆபரணம், தோள்வளை.
  • நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
  • ஒவ்வொரு பாட்டும் நான்கு மணி மணியாக அறக் கருத்துக்களை கொண்டது.

NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை

கடவுள் வாழ்த்து

  • NAANMANIKADIKAI TNPSC NOTES: முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
  • கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.

பொதுவான குறிப்புகள்

  • NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை: ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
  • நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
  • இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
  • ஜி.யு.போப் இந்நூலின் 7, 100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
  • இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”

சிறப்பு பெயர்

  • துண்டு

NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை

NAANMANIKADIKAI TNPSC NOTES: முக்கிய அடிகள்

யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி

 

இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக

தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க

வெல்வது வேண்டின் வெகுளிவிடல்

 

இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்

வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்

 

ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்

கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்

 

மனைக்கு விளக்கம் மடவாள்

மடவாளுக்கு விளக்கம் புதல்வர்

புதல்வர்க்கு விளக்கம் கல்வி

கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு

டி.எஸ் பாலசுந்தரம் பிள்ளை பதிப்பித்துள்ள நான்மணிக்கடிகை நூலில் 85-ஆவது பாடல்

கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம்

மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம்

அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே

இல்லத்துத் தீங்கொழுகு வாள்

பொருள்

  • NAANMANIKADIKAI TNPSC NOTES: நான்மணிக்கடிகை: கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அவர்கள் வாயிலிருந்து வரும் சொற்கள் இயமன் ஆகின்றன.
  • வாழை மரம் தான் ஈனுகின்ற காயினாலேயே அழிந்துபோகிறது.
  • செய்யத் தகாதவற்றைச் செய்பவர்களுக்கு அறமே இயமன். ஒரு குடும்பத்துக்குத் தீய ஒழுக்கம் கொண்ட பெண்ணே இயமனாவாள்
error: Content is protected !!