WORLD HAPPINESS REPORT 2024 IN TAMIL | உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்

Photo of author

By TNPSC EXAM PORTAL

WORLD HAPPINESS REPORT 2024 IN TAMIL | உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: இன்றைய தினத்தில் ஒவ்வொரு நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சி அளவை பொறுத்து அந்த நாட்டின் மகிழ்ச்சி தரவரிசை சர்வதேச அளவில் வெளியிடப்படுவது வழக்கம். ஐ.நா. அமைப்பின் இந்த ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழலின்மை ஆகிய 4 காரணிகால் அடிப்படையில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதில், முதலிடத்தில் பின்லாந்து (Finland) நாடு உள்ளது. மேலும், கடந்த 7 வருடங்களாக பின்லாந்து நாடு தான் உலகில் மகிழ்ச்சிகரமாக வாழும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்து தொடர்ந்து வருகிறது.
அதன் அண்டை நாடுகளான டென்மார்க் ,ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் டாப் 10 லிஸ்டில் உள்ளன. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் சரிவை சந்தித்துள்ளன.
10 ஆண்டுகளுக்கு மேலாக அறிக்கை வெளியிட்டப்பட்டதில் இருந்து இம்முறை முதன்முறையாக அமெரிக்காவும், ஜெர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை. இவ்விரு நாடுகள் முறையே 23, 24 வது இடத்தில் உள்ளன. இந்தியா 126வது இடத்திலும் உள்ளது.
கோஸ்டரிகா, குவைத் ஆகிய நாடுகள் 12 மற்றும் 13 வது இடம் பிடித்தனர். ஆனால் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
மேலும், 2020 ல் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் வந்தது முதல் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான்.

WORLD HAPPINESS REPORT 2024 IN TAMIL | உலகில் மகிழ்ச்சிகரமான நாடுகளின் டாப் 10 லிஸ்ட் பட்டியல்

  1. பின்லாந்து
  2. டென்மார்க்
  3. ஐஸ்லாந்து
  4. ஸ்வீடன்
  5. இஸ்ரேல்
  6. நெதர்லாந்து
  7. நார்வே
  8. லக்சம்பர்க்
  9. சுவிட்சர்லாந்து
  10. ஆஸ்திரேலியா
error: Content is protected !!