UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022

Photo of author

By TNPSC EXAM PORTAL

UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022: ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளின் மனித வளர்ச்சி குறியீடு குறித்து கணக்கீடு நடத்தி அறிக்கை வெளியிட்டது.

அதில், கடந்த 2021ம் ஆண்டு மொத்தம் உள்ள 191 நாடுகளில் இந்தியாவுக்கு 135வது இடம் கிடைத்தது. 2022ம் ஆண்டில் இந்தியா ஒரு படி முன்னேறி 193 நாடுகளில் 135 வது இடத்துக்கு வந்துள்ளது.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு 193 நாடுகளில் 134 வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீடு(எச்டிஐ) மதிப்பு 0.633 லிருந்து 0.644 ஆக 2022 ல் அதிகரித்து, நாட்டை நடுத்தர மனித வளர்ச்சி பிரிவில் வைத்துள்ளது. 

2022 ல், இந்தியா அனைத்து எச்டிஐ குறியீடுகளான ஆயுட்காலம், கல்வி மற்றும் தனிநபர் மொத்த தேசிய வருமானம் ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டது. ஆயுட்காலம் 67.2 லிருந்து 67.7 ஆக உயர்ந்தது.

பள்ளிப்படிப்பின் எதிர்பார்க்கப்பட்ட ஆண்டுகள் 12.6ஐ எட்டியது, பள்ளிப்படிப்பின் சராசரி ஆண்டுகள் 6.57 ஆக அதிகரித்தது. மொத்த தனிநபர் வருமான தொகை 6,542 டாலரில் இருந்து 6,951 டாலர் ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 2022ல் நாடு முன்னேறியிருந்தாலும், தெற்காசிய அண்டை நாடுகளான வங்கதேசம் (129 வது), பூடான் (125 வது), இலங்கை (78 வது) மற்றும் சீனா (75 வது) போன்றவற்றுக்குப் பின்னால் தான் இன்னும் உள்ளது.

JNANAPITH AWARD 2023 IN TAMIL | ஞான பீட விருது 2023

சீனா மூன்று இடங்கள் முன்னேறியுள்ளது, அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை ஐந்து இடங்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் பாலின பாகுபாடு அதிகமாக உள்ளது.

தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் இந்தியாவில் மிகப்பெரிய பாலின இடைவெளி உள்ளது. பெண்களுக்கும் (28.3%) ஆண்களுக்கும் (76.1%) வித்தியாசம் 47.8% ஆக உள்ளன.

சமத்துவமின்மை அதிகரிப்பு

UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022: கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டம்(யுஎன்டிபி) அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், உலகம் முழுவதும் சமத்துவமின்மை மீண்டும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பணக்கார மற்றும் ஏழ்மையான நாடுகளுக்கு இடையிலான இடைவெளி 2020ம் ஆண்டு முதல் விரிவடையத் தொடங்கியது.

UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022: உலகின் 40 சதவீத வர்த்தகம் மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாடுகளில் நடக்கிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் பங்கு சந்தை மதிப்பு 193 ஐநா உறுப்பு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 90 % அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து முதலிடம்

UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022: 2022 ம் ஆண்டு புள்ளிவிவரங்கள் அடிப்படையில்,அதிக மனித வளர்ச்சி மதிப்பெண்களைக் கொண்ட 10 நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, ஹாங்காங், டென்மார்க், ஸ்வீடன் முன்னணியில் உள்ளன. ஜெர்மனி மற்றும் அயர்லாந்து 7வது இடத்தில் உள்ளன. 

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து 10வது இடத்தில் உள்ளன. அமெரிக்கா, லக்சம்பர்க்குடன் 20வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மனித வளர்ச்சி குறைந்த நாடுகள் பட்டியலில் சியரா லியோன், பர்கினா பாசோ, ஏமன், புருண்டி, மாலி, சாட், நைஜர், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, தெற்கு சூடான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் உள்ளன.

பாலின சமத்துவமின்மை குறியீடு (ஜிஐஐ) 

UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022: மேலும், 193 நாடுகளை உள்ளடக்கிய பாலின சமத்துவமின்மை குறியீடு தரவரிசை பட்டியலில் 0.437 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 108-ஆவது இடம் கிடைத்துள்ளது. 

அதற்கு முந்தைய 2021-ஆம் ஆண்டில், 0.49 புள்ளிகளுடன் 122-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. ஒரே ஆண்டில் பாலின சமத்துவமின்மை குறியீடு தரவரிசை பட்டியலில் 14 இடங்களை இந்தியா முன்னேறியுள்ளது. 

இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளா் சந்தை ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் பாலின ஏற்றத்தாழ்வுகளை பாலின சமத்துவமின்மை குறியீடு (ஜிஐஐ) அளவிடுகிறது. 

இந்தியாவின் பாலின சமத்துவமின்மை குறியீட்டின் 0.437 புள்ளியானது உலக சராசரியான 0.462 புள்ளிகள் மற்றும் தெற்காசிய சராசரியான 0.478 புள்ளிகளைவிட சிறப்பாக உள்ளது. ஆனால், தொழிலாளா் பங்கேற்பில் இந்தியாவில் அதிக பாலின இடைவெளி விகிதம் காணப்படுகிறது. 

மொத்த ஆண்களில் 76.1 சதவீதம் போ் பணிபுரியும் சூழலில், 28.3 சதவீத பெண்கள் மட்டுமே பணிபுரிகின்றனா். எனவே, பாலின இடைவெளி விகிதம் 47.8-ஆக உள்ளது. 

ஒட்டுமொத்தமாக வளா்ச்சியில் இந்தியா

UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022: கடந்த 2022-ஆம் ஆண்டில், மனித வளா்ச்சிக் குறியீட்டின் அனைத்து அளவீடுகளிலும் இந்தியா வளா்ச்சி கண்டுள்ளது. 

மக்களின் சராசரி ஆயுள் காலம் 67.2 முதல் 67.7 ஆண்டுகள் வரை உயா்ந்துள்ளது. எதிா்பாா்க்கப்படும் பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 12.6-ஐ எட்டியது. சராசரி பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 6.57-ஆக அதிகரித்துள்ளது மற்றும் தேசிய வருமானத்தில் தனிநபா் மதிப்பு 6,542 டாலரிலிருந்து 6,951 டாலராக அதிகரித்துள்ளது. 

கடந்த 1990-ஆம் ஆண்டுமுதல், ஆயுள் காலம் 9.1 ஆண்டுகள் உயா்ந்துள்ளது. அதேபோல், எதிா்பாா்க்கப்படும் பள்ளிப்படிப்பு ஆண்டுகள் 4.6 ஆண்டுகளும் சராசரி பள்ளிப்படிப்பின் ஆண்டுகள் 3.8 ஆண்டுகளும் அதிகரித்துள்ளன. 

தேசிய வருமானத்தின் தனிநபா் மதிப்பு சுமாா் 287 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. சமீபத்திய மனித வளா்ச்சிக் குறியீட்டில் 0.644 புள்ளிகளுடன் நடுத்தர மனித வளா்ச்சிப் பிரிவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

நாட்டின் மனித வளா்ச்சிக் குறியீடு புள்ளிகள் கடந்த 1990-ஆம் ஆண்டின் 0.434-லிருந்து தற்போது 48.4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில், இந்தியாவில் வளரிளம் பருவத்தினா் கா்ப்பமாகும் விகிதம் முந்தைய ஆண்டின் 17.1 சதவீதத்திலிருந்து 16.3 சதவீதமாக குறைந்துள்ளது. 

UN HUMAN DEVELOPMENT INDEX 2022 IN TAMIL | ஐ.நா. மனித வளா்ச்சிக் குறியீடு 2022: சா்வதேச மனித வளா்ச்சிக் குறியீடு முதல் முறையாக தொடா்ந்து 2 ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. வளா்ந்த நாடுகள் சாதனை மனித வளா்ச்சியை அடைந்திருந்தாலும், அங்கு வசிக்கும் ஏழைகளில் பாதிக்கும் மேலானோா் நெருக்கடிக்கு முந்தைய வளா்ச்சி நிலைக்கு கீழே உள்ளனா் என்று யுஎன்டிபி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!