TNPSC Group1 Mains Modern India 2019 Questions Tamil and English

Photo of author

By TNPSC EXAM PORTAL

 TNPSC Group1 Mains Modern India 2019 Questions Tamil and English                     

MODERN HISTORY OF INDIA & INDIAN CULTURE

நவீன இந்திய வரலாறு மற்றும் இந்தியப் பண்பாடு

 SECTION – A

 NOTE:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 150 words each.

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்

Each question carries ten marks

iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any four questions out of five questions.

(4×10 = 40)

1) நமது தேசிய இலச்சினை பற்றி விளக்குக. மேலும் இந்திய தேசிய இயற்கைச் சின்னங்களை வரிசைப்படுத்துக.

Explain about our National Emblem and list our National Natural Symbols of India.

2) மதுரை காந்தி என அழைக்கப்பட்டவர் யார் அவரது சாதனைகளை வரிசைப்படுத்து.

Who was popularly called as Madurai Gandhi? Enumerate his achievements.

3) 1773 – ம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தின் முக்கிய சரத்துக்களை விவாதி.

Discuss the important provisions of the Regulating Act of 1773

4) மக்களை தேசிய இயக்கத்தில் பங்குபெற செய்திட காந்தியடிகள் ஆரம்பித்த பல்வேறு  நடவடிக்கைகளைப் பற்றி விவாதி.

Discuss the Various movements started by Gandhiji to draw the participation of mass into national Movement .

5) காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவில் ஏற்பட்ட விவசாய எழுச்சிகளை பற்றி விவாதி.

Describe the Peasant uprisings during colonial rule in India

 SECTION – B

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 250 words each

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்

Each question carries fifteen marks

iii) கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வினாக்களில் எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any four questions out of five questions.

(4×15 = 60)

6) 1935ஆம் ஆண்டு இந்திய  அரசாங்க சட்டத்தின் குறைகளை ஆராய்க.

Critically Analyse the defects of the Government of India Act 1935.

7) இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்தது –  திறனாய்வு செய்.

There was disintegration of  Rural Economy due to the impact of British Rule in India – Analyse.

8) சமூக நீதியின் மேம்பாட்டிற்கு பெரியார் ஈ.வெ.ரா ஆற்றிய பங்கினை மதிப்பிடுக.

Evaluate the contribution of Periyar E.V.R. in the promotion of Social Justice.

9) இந்திய தேசிய காங்கிரஸ் வெறும் கட்சி மட்டும் அல்ல இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கம் – திறனாய்வு செய்.

The Indian National Congress was not merely a party, but an integral part of the Indian National Movement – Analyse.

10) ஐரோப்பிய படையெடுப்பின் துவக்க கால கட்டத்தில், இந்தியர்களின் பழமையான போர் நடவடிக்கைகளுக்கு முன் ஆங்கில கடல் ஆதிக்கம் எவ்வாறு  உயர்ந்திருந்தது என்பதை  விளக்குக.

During the Advent of  European invasion – Explain how the naval force of the English became superior before the outmoded Indian Warfare.

 

Read Also

TNPSC Group1 Mains Geography 2019 Questions Tamil and English

error: Content is protected !!