சற்றுமுன் வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் (TNPSC GROUP 4 RESULT 2023)

Photo of author

By TNPSC EXAM PORTAL

சற்றுமுன் வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் (TNPSC GROUP 4 RESULT 2023): டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

தற்போது காலியிடங்கள் 10,117 ஆக அறிவிக்கப்பட்டது. இதனிடையே குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

cropped-IMG_20230324_173302.jpg

தேர்வர்கள் தேர்வு முடிவுகளை https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK என்ற இணையதள பக்கம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வு முடிவுகளை தெரிந்துக் கொள்ள தேர்வர்கள் ஒரே நேரத்தில் முனைவதால், தேர்வாணைய இணையதளப் பக்கம் முடங்கியுள்ளது. குரூப் 4 தேர்வுகளை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!