TNPSC Group1 Mains Aptitude 2023 Questions Tamil and English
GENERAL APTITUDE & MENTAL ABILITY (SSLC STANDARD)
கணிதம் மற்றும் அறிவுக்கூர்மை
SECTION – A
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 150 words each.
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.
Each question carries ten marks.
ⅲ) கொடுக்கப்பட்டுள்ள மூன்று வினாக்களில் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any two questions out of three questions.
(2×10 = 20)
1) (அ) குமார் என்பவர் 2 மணி நேரத்தில் 70 கி.மீ. தூரம் கடக்கிறார் எனில் அதே வேகத்தில் சென்றால் 8 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் கடந்து இருப்பார்?
(ஆ) 24 மாணவர்களுக்கு சீருடை வழங்க ரூ.6,000 செலவாகும் எனில் ரூ.72,000க்கு எத்தனை மாணவர்களுக்குச் சீருடை வழங்கலாம்?
(a) Kumar takes 2 hours to travel 70 km. How much distance will he travel in 8 hours?
(b) The cost of uniforms for 24 students is Rs.6,000.How many students can get uniform for Rs. 72,000?
(5 Marks + 5 Marks)
2) ஒரு கொள்கலனில் 3 மஞ்சள் மற்றும் 4 பச்சை நிறப்பந்துகள் உள்ளன. திரும்ப வைக்குமாறு சம வாய்ப்பு முறையில் 3 முறை பந்துகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கும் போது கிடைக்கும் பச்சை நிறப் பந்துகளின் எண்ணிக்கையின் நிகழ்தகவுப் பரவலைக் காண்க. மேலும் சராசரி, பரவற்படி ஆகியவற்றைக் காண்க.
An Urn contains 3 Yellow and 4 Green balls. Find the probability distribution of the number of Green balls in three draws when a ball is drawn at random with replacement. Also find its mean and variance. (10 Marks)
3) இரண்டு கைக்கடிகாரங்கள் ஒவ்வொன்றையும் ரூ.594க்கு ஒருவர் விற்றார். இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% லாபமும் மற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது. மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட இலாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் காணவும்.
A man sells two wrist watches at Rs.594 each. On one he gains 10% and on the other he loses 10%. Find his gain or loss percent on the whole. (10 Marks)
SECTION – B
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 250 words each.
ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்
Each question carries fifteen marks.
iii) கொடுக்கப்பட்டுள்ள மூன்று வினாக்களில் எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any two questions out of three questions.
(2×15 = 30)
4) ஒரு மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.21 என்க. பொறியியல் கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.26 மற்றும் கல்லூரிகளிலும் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு 0.12 எனில்,
(அ) மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு கல்லூரியில் சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.
(ஆ) மருத்துவக் கல்லூரியில் மட்டுமோ அல்லது பொறியியல் கல்லூரியில் மட்டுமோ சேர்க்கை கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க.
The probability that a girl will be selected for admission in a medical college is 0.21. The probability that she will be selected for admission in an engineering college is 0.26 and the probability that she will be selected in both is 0.12.
(a) Find the probability that she will be selected in atleast one of the two colleges.
(b) Find the probability that she will be selected either in a medical college only or in an engineering college only.
(15 Marks)
5) 8/9 , 10/27 , 32/81 ஆகியவற்றின் மீ.பொ.வ (HCF) மற்றும் மீ.பொ.ம (LCM) காண்க.
Find the HCF and LCM of 8/9 , 10/27 and 32/81. (15 Marks)
6) (அ) இரு எண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு 5, அவற்றின் வர்க்கங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு 75 எனில் அவ்விரு எண்களின் பெரிய மதிப்பு யாது?
(ஆ) ஒரு சரிவகத்தின் பரப்பு 160cm² அவற்றின் இணைபக்கங்கள் 2:3 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன.அவற்றிற்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு 16 செ.மீ எனில், அதில் சிறிய பக்கத்தின் நீளம் யாது?
(a) The difference between two numbers is 5 and the difference between their squares is 75, find the larger number. (7.5 Marks)
(b) The area of a trapezium is 160 cm². If its parallel sides are in ratio 2:3 and the perpendicular distance between them is 16 cm, find the smaller of parallel sides. (7.5Marks)
Read Also