TNPSC ANNUAL PLANNER 2024 PDF DOWNLOAD

TNPSC ANNUAL PLANNER 2024 PDF DOWNLOAD: குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும் நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
முன்னதாக 16 வகையான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தேர்வு முடிவுகளுக்கான அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில், குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. இதன் மொத்த காலி பணியிடங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூன் மாதம் தேர்வு நடைபெற உள்ளது.
65 பணியிடங்களுக்காக குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாதம் குரூப் 1 பணி இடங்களுக்காக தேர்வு நடைபெற உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதேபோல குரூப் 2, 2ஏ பணிகளுக்கு 1294 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியாக உள்ளது. இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளன.
pdf download
error: Content is protected !!
Scroll to Top