THE NOBEL PEACE PRIZE 2023: அமைதிக்கான நோபல் பரிசு 2023

Photo of author

By TNPSC EXAM PORTAL

THE NOBEL PEACE PRIZE 2023 IN TAMIL

THE NOBEL PEACE PRIZE 2023: குறிப்பிட்ட ஒவ்வொரு துறையிலும் உலக அளவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் நோபல் பரிசானது இந்தாண்டும் கடந்த திங்கள் கிழமை (அக்.2) முதல் அறிவிக்கப்ட்டு வருகிறது.

திங்களன்று மருத்துவத்துறை சார்பில் ஹங்கேரி நாட்டை சேர்ந்த கட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ட்ரே வீஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

TO KNOW MORE ABOUT – APOSTROPHE PROMO CODE

அடுத்து செவ்வாயன்று இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களான ஆஸ்பெக்ட், ஜான் எஃப். கிளாசர் மற்றும் அன்டன் ஜீலிங்கர் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கபட்டது. புதன் அன்று வேதியியல் துறையில் சிறந்து விளங்கிய ஆராய்ச்சியாளர்கள் மௌங்கி பவெண்டி, லூயிஸ் ப்ரூஸ், அலெக்ஸி எகிமோவ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று வியாழன்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு நோர்வே எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காகவும் நர்கேஸ் முகமதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நர்கேஸ் முகமதி, ஈரானில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் துறையில் பட்டம் வென்ற அவர், கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே சமூக செயல்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். ஈரானில் பெண்களின் உரிமைகளுக்காகவும், மனித வளம் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

THE NOBEL PEACE PRIZE 2023: இதனால் கடந்த 2011ஆம் ஆண்டு முதன் முதலாக ஈரான் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் 2015இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். மரண தண்டனைக்கு எதிராகவும் தனது குரலை அழுத்தமாக பதிவு செய்தவர் நர்கேஸ் முகமதி.

பெண்களின் உரிமைக்காகவும், மனித வள மேம்பாட்டிற்காகவும் இதுவரை 13 முறை கைது செய்யப்பட்டு 5 முறை குற்றவாளி என ஈரானிய அரசால் தீர்ப்பளிக்கப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வரும் அக்டோபர் 9ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.

LIST OF NOBEL PRIZE AWARDED THIS YEAR
THE NOBEL PEACE PRIZE 2023: அமைதிக்கான நோபல் பரிசு 2023
THE NOBEL PEACE PRIZE 2023: அமைதிக்கான நோபல் பரிசு 2023

THE NOBEL PEACE PRIZE 2023 IN ENGLISH

THE NOBEL PEACE PRIZE 2023: The Nobel Prize, which is awarded to people who excel at the world level in each specific field, has been announced since last Monday (October 2) this year. On Monday, the Nobel Prize in Medicine was announced to Hungary’s Katlin Kariko and America’s Trey Weisman.

Next Tuesday, researchers in the physics department, Aspect, John F. Glasser and Anton Zeilinger shared the Nobel Prize. On Wednesday, the Nobel Prize was announced for outstanding researchers in the field of chemistry, Maungi Bawendi, Louis Bruce and Alexey Ekimov.

Following this, on Thursday, the Nobel Prize for Literature was announced to the Norwegian writer Jan Fosse. Following this, the Nobel Peace Prize was announced this afternoon. Nargez Mohammadi has been awarded the Nobel Peace Prize for her struggle against the oppression of women in Iran and for promoting human rights and freedom for all.

Narkes Mohammadi was born and raised in Iran. A graduate in Physics, he has been actively involved in social work since his college days. She has been constantly fighting for women’s rights and human resource development in Iran.

THE NOBEL PEACE PRIZE 2023: As a result, he was arrested and imprisoned for the first time in 2011 by the government of Iran. He was later released and arrested again in 2015. Narkez Mohammadi has also emphatically registered his voice against the death penalty.

It is noteworthy that she has been arrested 13 times for women’s rights and human resource development and has been convicted 5 times by the Iranian government and sentenced to 31 years in prison. Following the announcement of the Nobel Peace Prize today, the Nobel Prize for Economics will be announced on October 9.

error: Content is protected !!