TAMILNADU REPUBLIC DAY AWARD 2024 IN TAMIL | தமிழ்நாடு குடியரசு தின விருதுகள் 2024

Photo of author

By TNPSC EXAM PORTAL

TAMILNADU REPUBLIC DAY AWARD 2024 IN TAMIL: சென்னை காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடியை பறக்கவிட்டார். 

தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.

தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த பெருமழையின் போது தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட 3 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

PADMA AWARDS 2024 IN TAMIL | பத்ம விருதுகள் 2024

தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் யாசர் அராபத், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமாருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் திருநெல்வேலியை சேர்ந்த டேனியல் செல்வசிங்கிற்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதே போன்று தனது ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தை, அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய மதுரை மாவட்டம் கொடிக்குளத்தை சேர்ந்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், ஊடகவியலாளர் முகமது ஜூபேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளியிடுபவர் ஆல்ட் நியூஸ் முகம்மது ஜூபேர். பொய்யான செய்தியால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க முகம்மது ஜுபைரின் பணி உதவி செய்கிறது. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது சேலத்தை சேர்ந்த பாலமுருகனுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் அமைச்சரின் விருது மதுரை மாநகரக் காவலுக்கு கிடைத்துள்ளது. நாமக்கல், பாளையங்கோட்டை சிறந்த காவல் நிலையத்திற்கான 2-ஆம் மற்றும் 3-ம் பரிசை பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு சார்பில் 9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கத்துடன் ரூ.1 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!