SIRUPANJAMOOLAM TNPSC POTHU TAMIL NOTES: சிறுபஞ்சமூலம்: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிறுபஞ்சமூலம்
- SIRUPANJAMOOLAM TNPSC POTHU TAMIL NOTES: பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102 = 104
- பாவகை = வெண்பா
- உள்ளடக்கிய பொருள்வகை = அறம்
ஆசிரியர் குறிப்பு
- SIRUPANJAMOOLAM TNPSC POTHU TAMIL NOTES: பெயர் – காரியாசான்
- காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
- மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
- மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் என சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
- இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
- இவரும் கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணக்கராவர்.
- பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்குருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
பெயர்க்காரணம்
- SIRUPANJAMOOLAM TNPSC POTHU TAMIL NOTES: கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.
நூல் குறிப்பு
- SIRUPANJAMOOLAM TNPSC POTHU TAMIL NOTES: தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின. அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம், ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
- அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன. இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன. ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
To Download Latest TNPSC GENERAL KNOWLEDGE PDF
- இப்பாடல்கள் நன்மை தருவன. தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
- கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றெழு வெண்பாக்கள் உள்ளன.
- மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் à பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
- சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை வில்வம், பெருங்குமிழ், பாதிரி, தழுதாழை, வாகை
- காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்.
- இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.
- சிறுபஞ்சமூலத்தின் பாடலில் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது போல, ஒரு பாடலில் மூன்று, ஆறு கருத்துகளைக் கொண்ட அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு வரிசையில் அமைந்துள்ளன.
மேற்கோள்
- SIRUPANJAMOOLAM TNPSC POTHU TAMIL NOTES: நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு – நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
- பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு – பேதைக்கு = முட்டாளுக்கு, உரைத்தாலும் = எவ்வளவு சொன்னாலும், செல்லாது உணர்வு = மண்டையில் ஏறாது
கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்
கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
வட்டான்நன் றென்றால் வனப்பு
- கண்ணுக்கு அழகு கண்ணோட்டம் கொள்ளும் இரக்க உணர்வை வெளிப்படுத்துதல். காலுக்கு அழகு அடுத்தவன் மனையாளை விரும்பிச் செல்லாமை.
- எண் கணக்குக்கு அழகு கூட்டியும் கழித்தும் பெருக்கியும் வகுத்தும் இத்துணை ஆகிறது என்று சொல்லுதல்.
- பண்ணிசைக்கு அழகு கேட்டவர் நன்று என்று பாராட்டல். வேந்தனுக்கு அழகு தன் நாட்டு மக்களை வாட்டாமல் மகிழ்வுடன் வைத்திருக்கிறான் என்று பலரும் சொல்லக் கேட்டல்.
சொற்பொருள்
- SIRUPANJAMOOLAM TNPSC POTHU TAMIL NOTES: கண்ணோட்டம் – இரக்கம் கொள்ளுதல்
- எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
- வேந்தன் – அரசன்
- வனப்பு – அழகு
- கிளர்வேந்தன் – புகழுக்குரிய அரசன்
- வாட்டான் – வருத்தமாட்டான்
இலக்கணக்குறிப்பு
- கண்ணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
- கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்
அறிவுடையார் தாமே உணர்வர்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு (பா.எண்: 22)
பாடலின் பொருள்
- பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர்,
- வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்.
- பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன.
- அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்வர்.
அணி
- பாடவில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.
சொல்லும் பொருளும்
- மூவாது – முதுமை அடையாமல்
- நாறுவ – முளைப்ப
- தாவா – கெடாதிருத்தல்
இலக்கணக் குறிப்பு
- அறிவார், வல்லார் – வினையாலணையும் பெயர்கள்
- விதையாமை, உரையாமை – எதிர்மறைத் தொழிற்பெயர்கள்
- தாவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
- உரையாமை = உரை + ய் + ஆ + மை
- உரை – பகுதி
- ய் – சந்தி (உடம்படுமெய்)
- ஆ – எதிர்மறை இடைநிலை
- மை – தொழிற்பெயர் விகுதி
- காய்க்கும் = காய் + க் + க் + உம்
- காய் – பகுதி
- க் – சந்தி
- க் – எதிர்கால இடைநிலை
- உம் – பெயரெச்ச விகுதி