PSTM Certificate TNPSC New Format

Photo of author

By TNPSC EXAM PORTAL

PSTM Certificate TNPSC  

சாதிவாரியாக உள்ள அனைத்து தரப்பினருக்கும்  20% சதவிகிதம்  உள் இட  ஒதுக்கீட்டினை இந்த PSTM Certificate வழங்குகிறது. இது ஒரு Horizontal Reservation ஆகும்.

       PSTM Certificate பற்றிய முழுமையான விளக்கம்:

போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், கட்டாயமாக PSTM Certificate பற்றி  தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மாநில அரசு  நடத்தும் தேர்வில் வழங்கப்படும் சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 PSTM Certificate என்றால் என்ன என்பதைப் பற்றி முதலில்  பார்ப்போம். பின்பு அது எப்படி செயல்படுகிறது, அதை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அடுத்ததாக பார்ப்போம்.

PSTM Certificate என்பது என்ன?

PSTM Certificate என்பது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் ஆகும்.

PSTM – Person Studied in Tamil Medium

மாநில அரசானது (தமிழக அரசானது) தமிழ்வழிக் கல்வி மூலம் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குகிறது.

TNPSC – Tamil Nadu Public Service Commission

குறிப்பாக, தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது தமிழ் வழியில் கல்வி பயின்ற நபர்களுக்கு  முன்னுரிமையிணை வழங்கி வருகிறது.

தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் பெறுவது எப்படி? அதாவது PSTM Certificate பெறுவது எப்படி?

தமிழ் வழியில் கல்வி  பயின்றவர்கள் முதலில் அவர்கள் படித்த பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்குச் சென்று தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான  சான்றிதழ் வாங்க வேண்டும்.

பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிக்குச் சென்று யாரிடம்  PSTM சான்றிதழ் பெறுவது?

  •  பள்ளிக்கூடத்தின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர்.
  •  கல்லூரியின் முதல்வர் அல்லது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அல்லது பதிவாளர் அல்லது கல்வி நிறுவனத்தின் இயக்குனர்.

தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் PSTM Certificate pdf வடிவில் கொடுத்துள்ளேன். பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

                                Download PSTM Certificate TNPSCDownload PSTM Certificate TNPSC

குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4, மற்றும் பிற  டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்திற்கும் பயன்படும் வகையில் PSTM Certificate பெறுவதற்கான விதிமுறைகளை தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

PSTM Certificate விதிமுறைகள்:

  •  ஒரு பதவிக்கு பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் வழியில் கல்வி பயின்றிருக்க வேண்டும்.

 

  • If the Prescribed Educational  Qualification is SSLC, then the candidate should have studied upto the SSLC through Tamil medium of instruction.

 

  •  ஒரு பதவிக்கு பன்னிரண்டாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு கட்டாயம் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்.
 
  • If the Prescribed Educational Qualification is HSC, then the candidate should have studied the SSLC and Higher Secondary Course through Tamil medium of instruction.
 
  • ஒரு பதவிக்கு பட்டயப் படிப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியாக இருப்பின்,  விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பு / பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பினை (அறிவிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக்கு ஏற்றபடி) கட்டாயம் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்.
 
  • If the Prescribed Educational Qualification is Diploma, then the candidate should have studied the SSLC and Diploma / SSLC,HSC and Diploma, as the case may be, through Tamil medium of instruction.

 

  • ஒரு பதவிக்கு பட்டப் படிப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பினை கட்டாயம் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்.
 
  • If the Prescribed Educational Qualification is Degree, then the candidate should have studied the SSLC, Higher Secondary Course and Degree through Tamil medium of instruction.

 

  • ஒரு பதவிக்கு பட்ட மேற்படிப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியாக இருப்பின், விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு,பன்னிரண்டாம் வகுப்பு,  பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பினை கட்டாயம் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்.
 
  • If the  Prescribed Educational Qualification is Post-Graduate Degree, then the candidate should have studied the SSLC, Higher Secondary Course, Degree and Post-Graduate Degree through Tamil medium of instruction.

 

 முக்கிய குறிப்புகள்: 

ஒருவர் பள்ளி படிப்பினை எத்தனை இடங்களில் சென்று, அதாவது எத்தனை பள்ளிகளில் சென்று படித்திருந்தாலும், படித்து முடித்து இருந்தாலும் அவர்கள்  தமிழ் வழியில் கல்வி பயின்றவராக இருந்தால் கட்டாயமாக PSTM CERTIFICATE பெறுவதற்கு தகுதி உடையவர் ஆவார்.

PSTM CERTIFICATE 10th Std Level Exams

TNPSC GROUP4 CADRE EXAM:

TNPSC Group 4 and Hindu Religious, Junior Inspector of Co-Operative Exam

பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்று இருக்க வேண்டும். அப்போதுதான்  PSTM CERTIFICATE பெறமுடியும்.

PSTM CERTIFICATE 11th and 12th Std Level

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது அதற்கு இணையான பட்டயப் படிப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்று இருக்க வேண்டும்.அப்போதுதான்  PSTM CERTIFICATE பெறமுடியும்.

PSTM CERTIFICATE Degree Std Level Exams

TNPSC GROUP 1 AND GROUP 2 CADRE EXAM:

பள்ளிக்கூடத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று இருக்க வேண்டும். பின்பு  பட்டப்படிப்பினை தமிழ்வழிக் கல்வியில் பயின்று இருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வியில் படித்து பின்பு பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் படித்து கல்லூரி படிப்பினை ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கு PSTM CERTIFICATE  செல்லாது.

READ ALSO,
error: Content is protected !!