PM FME SCHEME IN TAMIL: பிரதமரின்‌ உணவு‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்

Photo of author

By TNPSC EXAM PORTAL

PM FME SCHEME IN TAMIL

PM FME SCHEME IN TAMIL: தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களின்‌ வளர்ச்சியின்‌ மூலம்‌ மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுய தொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது.

ஒன்றிய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ பிரதமரின்‌ உணவு‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம் [PM Formalisation of Micro food processing Enterprises Scheme (PM FME Scheme)] செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்‌ கீழ்‌ உணவு‌ பதப்படுத்தல்‌ வகைப்பாட்டின்‌ கீழ்‌ அடங்கும்‌ பழச்சாறு, பழக்கூழ்‌ தயாரித்தல்‌, காய்கறிகள்‌, பழங்கள்‌, மீன்‌ மற்றும்‌ இறால்‌ கொண்டு செய்யப்படும் ஊறுகாய்‌, வற்றல்‌ தயாரித்தல்‌, அரிசி ஆலை, உலர்‌ மாவு மற்றும்‌ இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல்‌, அப்பளம்‌ தயாரித்தல்‌, உணவு எண்ணெய்‌ பிழிதல்‌, மரச்‌ செக்கு எண்ணெய்‌, கடலைமிட்டாய்‌, முறுக்கு, பேக்கரி பொருட்கள்‌, இனிப்பு மற்றும்‌ காரவகைத் தின்‌பண்டங்கள்‌ தயாரித்தல்‌, சாம்பார்‌ பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொடிகள்‌ தயாரித்தல்‌, காப்பிக்‌ கொட்டை அரைத்தல்‌, அரிசி மற்றும்‌ சோளப்‌ பொரி வகைகள்‌, வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்தல்‌, தயிர்‌, நெய்‌, பனீர்‌ உள்ளிட்ட பால்பொருட்கள்‌ தயாரித்தல்‌, பல்லின இறைச்சி வகைகள்‌ பதப்படுத்தல்,‌ உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்‌ தயாரித்தல்‌ போன்ற தொழில்களைத் தொடங்கவும்‌, ஏற்கனவே நடத்தப்பட்டு வரும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும்‌ தொழில்‌நுட்ப மேம்படுத்தல்‌ செய்யவும்‌ பயன்‌ பெறலாம்‌.

TAMILNADU GOVERNMENT PUBLIC HOLIDAY LIST FOR YEAR OF 2024: 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசு பட்டியல்

தொழில்‌ தொடங்கவும் மேம்படுத்தவுமான தொழில்நுட்ப ஆலோசனைகள்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுப்‌ பயிற்சி வழங்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கவும்‌ வழிகாட்டுதல்‌ வழங்கப்படுகிறது.

நிதி நிறுவனங்கள்‌ மூலம்‌ மானியத்துடன்‌ கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொழில்‌ நடத்திடத்‌ தேவையான சட்டபூர்வ உரிமங்கள்‌ மற்றும்‌ தரச்‌ சான்றிதழ்கள்‌ பெறவும்‌ சந்தைப்படுத்தலை மேம்படுத்தத்‌ தேவையான உதவிகளும்‌ வழங்கப்படுகின்றன.

திட்டத்தின் பயனாளர்கள்

PM FME SCHEME IN TAMIL: இத்திட்டத்தின்‌ கீழ் புதிதாகத்‌ தொழில்‌ தொடங்க ஆர்வமுள்ளோர்‌, ஏற்கனவே உணவு பதப்படுத்தும்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளோர்‌ மற்றும்‌ குறு நிறுவனங்கள்‌, சுய உதவிக் குழுவினர்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்பினர்‌, உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ ஆகியோர்‌ பயன்‌ பெறலாம்‌. ரூ. 1 கோடி வரையிலான திட்டத்‌ தொகை கொண்ட உணவு பதப்படுத்தும்‌ தொழில்‌ திட்டங்கள்‌ இத்திட்டத்தின்‌ கீழ் உதவி‌ பெறத்‌ தகுதி பெற்றவை.

திட்டத்‌ தொகையில்‌ 10% முதலீட்டாளர்‌ தம்‌ பங்காகச்‌ செலுத்த வேண்டும்‌. 90% வங்கிகளால்‌ பிணையமில்லாக்‌ கடனாக வழங்கப்படும்‌. அரசு 35% மானியம்‌, அதிகபட்சம்‌ ரூ.10 இலட்சம்‌ வரை வழங்கும்‌.

சுய உதவிக்‌ குழுக்கள்

PM FME SCHEME IN TAMIL: சுய உதவிக்‌ குழுவினர்‌ உணவு‌ பதப்படுத்தும்‌ தொழிலில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள் ஒவ்வொருவருக்கும்‌ ரூ. 40000 வீதம்‌ தொடக்கநிலை மூலதனமாக வழங்கப்படும்‌.

தனியான தொழில்திட்டங்களுக்கு வழங்கப்படும்‌ மானியத்துடன்‌ கூடிய கடனுதவி மட்டுமன்றி, உணவு பதப்படுத்தும்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ள தொகுப்புக்‌ குழுமங்களுக்குத் தேவையான பொதுக்‌ கட்டமைப்பு வசதிகள்‌ மற்றும்‌ பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்த திட்டத் தொகையில்‌ 35% மானியத்துடன்‌ கடனுதவி வழங்கப்படும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பத்தினைப்‌ பதிவு செய்யவேண்டும்‌.

PM FME SCHEME IN ENGLISH

PM FME SCHEME IN ENGLISH: The Government of Tamil Nadu is determined to improve the conducive environment for the growth of entrepreneurship through the development of micro, small and medium enterprises and thereby create structural employment. PM Formalization of Micro food processing Enterprises Scheme (PM FME Scheme) is being implemented with 60% financial contribution from the Union Government.

Food processing category under this scheme includes juicing, pulp preparation, pickles of vegetables, fruits, fish and prawns, drying, rice milling, dry flour and idli, wet dough for dosa, waffle making, edible oil pressing, wood sawdust, Manufacture of groundnut candy, murukku, bakery products, sweet and savory snacks, manufacture of spice powders including sambar powder, idli powder, rasabpodi, coffee nut grinding, rice and corn fritters, chickpeas, satuma, milk processing, yogurt, ghee, paneer and other dairy products.

It can be used to start industries like multi-species meat processing, ready-to-eat processed foods, and to expand existing micro-enterprises and improve technology. Technical advice and skill development training for business start-up and development are provided and guidance is provided for project report preparation.

Subsidized loans are arranged through financial institutions and necessary assistance is provided to obtain legal licenses and quality certificates to run the business and to improve marketing.

Beneficiaries of the scheme

PM FME SCHEME IN ENGLISH: Those who are interested in starting a new business under this scheme, those who are already engaged in food processing industry and micro enterprises, Self Help Groups, Farmer Producer Organizations, Producer Cooperative Societies can benefit. 

Food processing industry projects with a project cost of up to Rs.1 crore are eligible for assistance under the scheme. Investor has to contribute 10% of the project amount. 90% of the loans are collateral-free by banks. Government will provide 35% subsidy up to a maximum of Rs.10 lakh.

Self Help Groups

PM FME SCHEME IN ENGLISH: If self help groups are engaged in food processing business then each of them will get Rs. 40000 will be provided as initial capital. Apart from the subsidized loan for individual industrial projects, 35% of the project amount will be subsidized for setting up necessary public infrastructure facilities and public facilitation centers for the packaging groups engaged in food processing industry. To get benefit under this scheme one has to register the application on the website pmfme.mofpi.gov.in

error: Content is protected !!