PADMA AWARDS 2025 | 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்

Photo of author

By TNPSC EXAM PORTAL

PADMA AWARDS 2025 | 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்: ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். 

கலை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், வர்த்தம், பொது விவகாரங்கள், வணிகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, குடிமைப் பணி போன்ற பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், நாளை நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தற்போது 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், முக்கியமானதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுரையைச் சேர்ந்த இசைக் கலைஞரான வேலு ஆசானுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் பறை இசை கலை வடிவத்தை தரப்படுத்துவும், அதை உலக அளவில் எடுத்து செல்லவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார். மேலும், ஆண் ஆதிக்கும் செலுத்தும் கலை வடிவமாக இருந்தாலும், பெண் கலைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.

அதே போல, புதுச்சேரியைச் சேர்ந்த தவில் கலைஞர் தட்சிணாமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், பத்ம விபுஷன் விருது 5 பேருக்கும், பத்ம பூஷன் விருது 17 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் அனைத்தும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் விழாக்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

பத்ம விபூஷன்

  • துவ்வூர் நாகேஷ்வர் ரெட்டி
  • நீதிபதி (ஓய்வு) ஜகதீஷ் சிங் கேஹர்
  • குமுதினி ரஜினிகாந்த் லக்கியா
  • லட்சுமிநாராயண சுப்பிரமணியம்
  • எம்டி வாசுதேவன் நாயர் (மரணத்திற்குப் பின்)
  • ஒசாமு சுசுகி (மரணத்திற்குப் பின்)
  • சாரதா சின்ஹா ​​(மரணத்திற்குப் பின்)

 

பத்ம பூஷன்

  • சூர்ய பிரகாஷ்
  • அனந்த் நாக்
  • பிபேக் டெப்ராய் (மரணத்திற்குப் பின்)
  • ஜதின் கோஸ்வாமி
  • ஜோஸ் சாக்கோ பெரியபுரம்
  • கைலாஷ் நாத் தீட்சித்
  • மனோகர் ஜோஷி (மரணத்திற்குப் பின்)
  • நல்லி குப்புசாமி செட்டி
  • நந்தமுரி பாலகிருஷ்ணா
  • பிஆர் ஸ்ரீஜேஷ்
  • பங்கஜ் படேல்
  • பங்கஜ் உதாஸ் (மரணத்திற்குப் பின்)
  • ராம்பகதூர் ராய்
  • சாத்வி ரிதம்பர
  • எஸ் அஜித் குமார்
  • சேகர் கபூர்
  • ஷோபனா சந்திரகுமார்
  • சுஷில் குமார் மோடி (மரணத்திற்குப் பின்)
  • வினோத் தாம்

 

பத்மஸ்ரீ

  • அத்வைத சரண் கடநாயக்
  • அச்யுத் ராமச்சந்திர பலாவ்
  • அஜய் வி பட்
  • அனில் குமார் போரோ
  • அரிஜித் சிங்
  • அருந்ததி பட்டாச்சார்யா
  • அருணோதய் சாஹா
  • அரவிந்த் சர்மா
  • அசோக் குமார் மஹாபத்ரா
  • அசோக் லக்ஷ்மன் சரஃப்
  • அசுதோஷ் சர்மா
  • அஸ்வினி பிடே தேஷ்பாண்டே
  • பைஜ்நாத் மகாராஜ்
  • பாரி காட்ஃப்ரே ஜான்
  • பேகம் படூல்
  • பாரத் குப்த்
  • பெரு சிங் சவுகான்
  • பீம் சிங் பவேஷ்
  • பீமவா டோத்தபாலப்பா ஷிலேக்யதாரா
  • புத்தேந்திர குமார் ஜெயின்
  • சி எஸ் வைத்தியநாதன்
  • சைத்ரம் தியோசந்த் பவார்
  • சந்திரகாந்த் ஷெத் (மரணத்திற்குப் பின்)
  • சந்திரகாந்த் சோம்புரா
  • சேத்தன் இ சிட்னிஸ்
  • டேவிட் ஆர் சைம்லிஹ்
  • துர்கா சரண் ரன்பீர்
  • ஃபரூக் அகமது மிர்
  • கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட்
  • கீதா உபாத்யாய்
  • கோகுல் சந்திர தாஸ்
  • குருவாயூர் தொரை
  • ஹர்சந்தன் சிங் பாட்டி
  • ஹரிமன் சர்மா
  • ஹர்ஜிந்தர் சிங் ஸ்ரீநகர் வேல்
  • ஹர்விந்தர் சிங்
  • ஹாசன் ரகு
  • ஹேமந்த் குமார்
  • ஹிருதய் நாராயண் தீட்சித்
  • ஹக் மற்றும் கொலின் காண்ட்சர் (மரணத்திற்குப் பின்)
  • இனிவளப்பில் மணி விஜயன்
  • ஜெகதீஷ் ஜோஷிலா
  • ஜஸ்பிந்தர் நருலா
  • ஜோனாஸ் மாசெட்டி
  • ஜாய்னாசரண் பதாரி
  • ஜும்டே யோம்கம் கேம்லின்
  • கே.தாமோதரன்
  • கே எல் கிருஷ்ணா
  • கே ஓமனக்குட்டி அம்மா
  • கிஷோர் குணால் (மரணத்திற்குப் பின்)
  • எல் தொங்கும்
  • லட்சுமிபதி ராமசுப்பையர்
  • லலித் குமார் மங்கோத்ரா
  • லாமா லோப்சாங் (மரணத்திற்குப் பின்)
  • லிபியா லோபோ சர்தேசாய்
  • எம் டி ஸ்ரீனிவாஸ்
  • மதுகுல நாகபாணி சர்மா
  • மகாபீர் நாயக்
  • மம்தா சங்கர்
  • மண்ட கிருஷ்ண மாதிகா
  • மாருதி புஜங்கராவ் சித்தம்பள்ளி
  • மிரியாலா அப்பாராவ் (மரணத்திற்குப் பின்)
  • நாகேந்திர நாத் ராய்
  • நாராயண் (புலாய் பாய்) (மரணத்திற்குப் பின்)
  • நரேன் குருங்
  • நீர்ஜா பட்லா
  • நிர்மலா தேவி
  • நிதின் நோஹ்ரியா
  • ஓன்கர் சிங் பஹ்வா
  • பி தட்சணாமூர்த்தி
  • பாண்டி ராம் மாண்டவி
  • பர்மர் லாவ்ஜிபாய் நாக்ஜிபாய்
  • பவன் கோயங்கா
  • பிரசாந்த் பிரகாஷ்
  • பிரதிபா சத்பதி
  • புரிசை கண்ணப்ப சம்பந்தன்
  • ஆர் அஸ்வின்
  • ஆர் ஜி சந்திரமோகன்
  • ராதா பஹின் பட்
  • ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி
  • ராம்தராஷ் மிஸ்ரா
  • ரணேந்திர பானு மஜும்தார்
  • ரத்தன் குமார் பரிமூ
  • ரெபா காந்தா மஹந்தா
  • ரெண்ட்லி லால்ராவ்னா
  • ரிக்கி கியான் கேஜ்
  • சஜ்ஜன் பஜங்கா
  • சாலி ஹோல்கர்
  • சாந்த் ராம் தேஸ்வால்
  • சத்யபால் சிங்
  • சீனி விஸ்வநாதன்
  • சேதுராமன் பஞ்சநாதன்
  • ஷேக்கா ஷேகா அலி அல்-ஜாபர் அல்-சபா
  • ஷீன் காஃப் நிஜாம் (ஷிவ் கிஷன் பிஸ்ஸா)
  • ஷியாம் பிஹாரி அகர்வால்
  • சோனியா நித்யானந்த்
  • ஸ்டீபன் நாப்
  • சுபாஷ் கேதுலால் சர்மா
  • சுரேஷ் ஹரிலால் சோனி
  • சுரீந்தர் குமார் வாசல்
  • சுவாமி பிரதீப்தானந்தா (கார்த்திக் மகாராஜ்)
  • சையத் ஐனு ஹசன்
  • தேஜேந்திர நாராயண் மஜும்தார்
  • தியம் சூரியமுகி தேவி
  • துஷார் துர்கேஷ்பாய் சுக்லா
  • வாதிராஜ் ராகவேந்திராச்சாரியார் பஞ்சமுகி
  • வாசுதேயோ காமத்
  • வேலு ஆசான்
  • வெங்கப்பா அம்பாஜி சுகடேகர்
  • விஜய் நித்யானந்த் சுரிஷ்வர் ஜி மகராஜ்
  • விஜயலக்ஷ்மி தேசமானே
  • விலாஸ் டாங்ரே
  • விநாயக் லோஹானி
error: Content is protected !!