NOBEL PRIZE IN PHYSICS 2024 | 2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு

Photo of author

By TNPSC EXAM PORTAL

NOBEL PRIZE IN PHYSICS 2024 | 2024ம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு: மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், நடப்பாண்டுக்கான இயற்பியலுக்கான பரிசு பேராசிரியர்கள் ஜான் ஜே.ஹாஃப் ஃபீல்டு மற்றும் ஜெஃப்ரி இ. ஹிண்டன் ஆகிய இருவருக்கும் அளிக்கப்பட உள்ளது. செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

ஜான் ஹாப்ஃபீல்ட் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜெஃப்ரி ஹிண்டன் கனடாவில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

கண்டுபிடிப்பு

நோபல் குழுவின் கூற்றுப்படி, இயற்பியலில் நிலையான கட்டமைப்பு முறைகள் மூலம் சக்திவாய்ந்த இயந்திர கற்றல் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
ஜான் ஹோப்ஃபீல்ட் தகவல்களைச் சேமித்து வைக்கும் முறையை உருவாக்கியதாகவும், ஜெஃப்ரி ஹிண்டன் தரவுகளில் உள்ள பல்வேறு பண்புகளைப் பற்றிய ஒரு முறையை உருவாக்கியதாகவும் அந்தக் குழு வெளிப்படுத்தியது.
 
இந்த அணுகுமுறையின் மூலம், தற்போது பயன்பாட்டில் உள்ள செயற்கை நரம்பியல் வலையமைப்பை செயல்படுத்த முடியும் என்று குழு கூறியது.
error: Content is protected !!