NATIONAL SOLAR ENERGY MISSION IN TAMIL
NATIONAL SOLAR ENERGY MISSION IN TAMIL: சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கவும், அதே சமயம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு பிரச்சினைகளை அணுகவும், நாட்டின் பருவ நிலை சமாளிக்கவும், மாநிலங்கள், ஆய்வு மற்றும் மாற்றங்கள் சார்ந்த சவால்களை மேம்பாட்டு நிறுவனங்கள், தொழிற் நிறுவனங்களோடு இணைந்து இந்திய அரசு ஜனவரி 2010ல் மேற்கொண்டுள்ள தேசிய சூரிய மின்சக்தி இயக்கம் ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.
அந்த வகையில் அது பருவநிலை மாற்றங்கள் சார்ந்த சவால்களை சமாளிக்க உலகளாவிய முயற்சிகளுக்கு இந்தியாவின் மிக முக்கிய பங்களிப்பாகும். இந்த இயக்கம் பருவநிலை மாற்றங்கள் சார்ந்த திட்டத்தின் பல முயற்சிகளில் ஒன்றாகும்.
PMJJBY SCHEME DETAILS IN TAMIL 2023: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா
விரைந்து வளரும் பொருளாதாரத்தை கொண்ட இந்தியாவுக்கு சுத்தமான, ஏற்கக்கூடிய விலையிலான, நம்பகமான ஆதாரங்களிலிருந்து எரிசக்தி தேவைப்படுகிறது. பூமியில் மிக அதிக சூரிய ஒளி, வெப்பம் படும் இடங்களில் இந்தியா அமைந்துள்ளது.
பெரும்பாலான இடங்களில் ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி உள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 6 கிலோ வாட் மின்சக்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது அந்தந்த இடங்களையும் வருடத்தின் நேரத்தையும் பொறுத்து உள்ளது. நாட்டில் கிடைக்கக்கூடிய சூரிய மின்சக்தி சுமார் 748.98 கிகா வாட் அளவு உள்ளது என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இயக்கத்தின் நோக்கங்கள்
NATIONAL SOLAR ENERGY MISSION IN TAMIL: இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவை சூரிய மின்சக்தித் துறையில் உலக முன்னோடியாக உயர்த்துவதாகும். அதற்காக, சூரிய சக்தியை நாடெங்கிலும் விரைவாக, பரவலாகப் பயன்படுத்த கொள்கைத் திட்டங்களை வகுத்து, கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைத்து, திறன்கொண்ட மற்றும் திறன் அற்றவர்களுக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியனவாகும்.
குறிக்கோள்களும் இலக்குகளும்
NATIONAL SOLAR ENERGY MISSION IN TAMIL: இந்த இயக்கத்தின் இலக்கு, 2022க்குள் மின் கிரிட்டில் இணைக்கப்படக்கூடிய சூரிய மின்சக்தி உற்பத்தி 20,000 மெகாவாட்டாகும். அந்த இலக்கு மூன்று கட்டத்தில் எட்டப்படும் (முதல் கட்டம் 2012-13க்குள், இரண்டாவது கட்டம் 2013ல் இருந்து 2017க்குள், மூன்றாவது கட்டம் 2017ல் இருந்து 2022 வரையில்).
நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு சூரிய மின்சக்தி அளிக்கக்கூடிய பங்கை உணர்ந்தும், சூரிய மின்சக்தி உபகரணமான போட்டோ ஒல்டிக்களின் விலை குறைந்துள்ளதாலும், சூரிய சக்தியை மின் கிரிட்டோடு இணைக்கும் சாத்தியம் முழுமையாக உள்ளதாலும், புதிய சூரிய மின்சக்தி அமைப்புகள் நாட்டில் வெகுவாக செயல்படத்துவங்கியுள்ளதாலும், ஜூலை 2015ல் அரசு 2021-22 வாக்கில் நாட்டின் சூரிய மின்சக்தி உற்பத்தியின் கொள்ளளவு இலக்கை 100 கிகாவாட்டாக உயர்த்தியது.
இதில் 60 கிகாவாட் சூரிய மின்சக்தி பெரிய அளவிலான திட்டங்களிலிருந்தும் 40 கிகா வாட் அளவு கட்டிடங்கள் மீது அமைக்கப்பட்டு, கிரிட்டில் இணைக்கப்படும் திட்டங்களிலிருந்தும் கிடைக்கும்.
திட்ட அணுகுமுறை
NATIONAL SOLAR ENERGY MISSION IN TAMIL: 2022க்குள் 100 கிகாபைட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அடைய புதிய மற்றும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி அமைச்சகம் பல திட்டங்களை உருவாக்கியுள்ளது.
சில வாய்ப்புகளாக சூரிய மின்சக்தி அமைப்புகளை இணைப்பது, உற்பத்தி சார்ந்த ஊக்கங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தட்டுப்பாடுகளை நீக்க நிதி அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டங்கள் வாரியான அணுகுமுறையும் சாதனைகளும் பின்வருமாறு
தேசிய சூரிய மின்சக்தி இயக்கத்தின் முதல் கட்டத்தில் என்டிபிசி வித்யுத் வியாபார் நிகம் மூலம் 1000 மெகாவாட் கொள்ளளவு கிரிட் இணைப்பு சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்கள் இந்த இயக்கத்தின் முதல் கட்டத்தில் 950 மெகாவாட் சூரியசக்தி மின்திட்டங்கள் (மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 84 மெகாவாட் திட்டங்கள் நீங்கலாக) இரண்டு குழுக்களாக பின்நோக்கு ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
NATIONAL SOLAR ENERGY MISSION IN TAMIL: (முதல் குழு 2010-11ல் மற்றும் இரண்டாம் குழு 2011-12ல்). இதன்படி முதல் குழுவில் SPV திட்டங்களுக்கு கொள்முதல் விலை யூனிட்டுக்கு ரூ.10.49 முதல் ரூ.12.76 ஆகவும் (சராசரியாக ரூ.12.12) சூரிய அனல் மின்சக்திக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.10.49ல் இருந்து ரூ.12.24 ஆகவும் (சராசரியாக ரூ.148) உள்ளது. இரண்டாவது குழுவில் SPV திட்டங்களுக்கு கொள்முதல் விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.7.49 முதல் ரூ. 9.44 வரையிலும் (சராசரி ரூ.8.77) உள்ளது.
என்டிபிஸியின் வித்யுத் வியாபார் நிகம் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களிடமிருந்து மின்சாரத்தை வாங்கி என்டி பிஸியின் ஒரு பிரிவு மின்சாரத்தோடு இணைத்து அதனை விநியோகம் செய்யும் டிஸ்காம்களுக்கு விற்பனை மின்சாரத்தின் சராசரி விலை குறைகிறது.
31.3.2013 வரை முதல் கட்டத்தில் 420 மெகாவாட் அளவு சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது அல்லாமல் மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ் 50.5 மெகாவாட் அளவுக்கும், இந்திய புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி மேம்பாட்டு அமைப்பு மூலம் 88.8 மெகாவாட் அளவுக்கும், பழைய மாதிரி விளக்க திட்டங்கள் மூலம் 21.5 மெகாவாட் அளவுக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மொத்தக் கொள்ளளவு முதற்கட்டத்தில் 580.8 மெகாவாட் அளவுக்கு உள்ளது.